Skip to main content

"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்!"  -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

 

கேட்டது கிடைக்கவில்லையெனில் அதிமுகவை தூக்கிச் சுமக்க வேண்டாம் என பாஜகவின் தேசிய தலைமைக்கு மெசேஜ் தந்திருக்கிறார்கள் தமிழக பாஜகவினர் ! 

 

 bjp


     

மூன்றாண்டுகளாக முடங்கி கிடக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு. தேர்தலை எதிர்கொள்வதில் அதிமுக, திமுக கட்சிகளின் கூட்டணிகள் பரபரப்பாக இயங்கத் துவங்கியுள்ளன. விருப்ப மனுவை பெறுவதில் இந்த கட்சிகளிடம் வேகம் கூடியுள்ளது.

 

admk

தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத சூழலில், ஆளும் கட்சிக் கூட்டணியும் எதிர்க்கட்சி கூட்டணியும் இந்தளவுக்கு பரபரப்பை ஏற்படுத்துவதால், உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? என்கிற சந்தேகமும் தமிழக வாக்காளர்கள் மத்தியில் எதிரொலிக்கவே செய்கின்றன. 


 

Narasimhan bjp



இந்த நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழக பாஜக பிரமுகரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷை சந்தித்தார். தமிழக அரசியல் குறித்து சுமார் 40 நிமிடங்கள் இருவரும் ஆலோசித்தனர். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் பற்றி விலாவாரியாக கேட்டறிந்தார் சந்தோஷ்.


 

 

அப்போது, பல புள்ளிவிபரங்களுடன் சுட்டிக்காட்டி பேசிய நரசிம்மன், ‘’ உள்ளாட்சி தேர்தல்தான் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைக்கும். பாஜகவின் அரசியல் தமிழக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளாட்சித் தேர்தலில் எந்த சமரசத்துக்கும் இடம் தந்து விடக்கூடாது. குறிப்பாக, குறைந்தபட்சம் 4 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு பாஜக போட்டியிட வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள 1 லட்சத்து 50 ஆயிரம்  பதவிகளில் 35 சதவீத இடங்களில் பாஜக போட்டியிடுவது அவசியம். அதனால், அதிமுக கூட்டணியில் இடங்களை பகிர்ந்துகொள்வது  தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த 35 சதவீத இடங்களை கேட்டுப்பெற வேண்டும். இதற்கும் குறைவான இடங்களில் போட்டியிடுவது மத்திய ஆளும் கட்சியான பாஜகவின் வலிமையை பலகீனப்படுத்தும். அதனால், 4 மாநகராட்சி மேயர் பதவிகள் மற்றும் 35 சதவீத இடங்களை பெறுவதில் அதிமுக தலைமையிடம் கறாராக இருக்க வேண்டும். கேட்டது கிடைக்கவில்லையெனில் தனித்து போட்டியிடவும் பாஜக தயங்கக்கூடாது. பாஜகவை அதிமுக தூக்கி சுமப்பதாக அக்கட்சியினர் சொல்லி வருகிறார்கள். பாஜகவை அதிமுக சுமப்பதாக சொல்வது தவறு. பாஜகதான் அதிமுகவை தூக்கிச் சுமக்கிறது. அதனால், கேட்டது கிடைக்காது போனால் அதிமுகவை தூக்கி சுமப்பதை தவிர்க்க வேண்டும் ‘’ என விவரித்திருக்கிறார் நரசிம்மன். 


   

 

அவருடைய கருத்தினை உற்று கவனித்து கொண்ட சந்தோஷ், நரசிம்மனை பாராட்டியதுடன், " இந்த தகவல்களை தேசிய தலைமைக்கு தெரியப்படுத்துவேன் " என கூறியுள்ளார் மிக அழுத்தமாக! நரசிம்மனின் கருத்துக்களை போலவே தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் பலரும் டெல்லிக்கு தகவல்களை பாஸ் பண்ணி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் வரும் பிரதமர்; ட்ரோன்கள் பறக்க தடை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வர இருக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சேலம் வருவதையொட்டி நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, வையப்பமலை வழியாக சேலம் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகையை ஒட்டி 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்கு வர இருக்கிறது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

'60 ஆண்டுகால வெறுப்பு இருக்கிறது' - பாமக அன்புமணி ராமதாஸ் பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'There is 60 years of hatred' - Pamaka Anbumani Ramadoss interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில் பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 'பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டின் மாற்றங்கள் வர நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இந்த முடிவுக்குப் பிறகு 60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான ஒரு சூழல் இருக்கிறது. மக்களுக்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும் கூட்டணி. பிரதமர் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்றார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று சேலத்தில் நடக்க இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில் தற்போது கூட்டணியில் இணைந்துள்ள பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.