Advertisment

நாங்கள் ஏன் நாய்கறி சாப்பிடுகிறோம்... சீனர்கள் சொல்லும் விநோதக் காரணம்

சீனாவில் நாய்கறி என்பது உண்ணத்தகுந்தது. இந்தியாவைச் சேர்ந்த நாகலாந்து மக்களே நாய்கறிகளை விரும்பி சாப்பிடுவார்கள். அதுபோலத்தான் சீனாவிலும் காலம் காலமாக தொன்றுதொட்டு நாய்கறி சாப்பிடும் பழக்கம் உள்ளது. இந்தியாவில் கோழி கறி மற்றும் ஆட்டு கறி எவ்வளவு சாதாரணமோ, கேரளாவில் மாட்டுக்கறி எவ்வளவு சாதாரணமோ, ஐரோப்பியா கண்டத்தில் பன்றிக்கறி எவ்வளவு சாதாரணமான ஒன்றோ அவ்வளவு சாதாரணமான விஷயம் தான் சீனாவில் நாய்கறி சாப்பிவது.

Advertisment

DOG

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

ஒவ்வொரு ஊர்களிலும் தட்பவெட்பநிலைக்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுவது வழக்கம் அல்லது விழா காலங்களை பொறுத்து சிறப்பு உணவு என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. உதாரணத்திற்கு ரம்ஜான் நேரத்தில் பிரியாணி, தீபாவளி நேரத்தில் வான்கோழி பிரியாணி என்ற வழக்கம் நம்மிடையே இருக்கிறது. அதுவே ஒரு சிலர் உணவு சாப்பிடுவது என்பதை திருவிழா கொண்டாட்டமாக கொண்டாடுகின்றனர். தோசை திருவிழா என்று ஒன்றை ஆரம்பித்து வகை வகையான தோசை பரிமாறுவார்கள். பிரியாணி திருவிழா என்று வகையாக வகையாக சுவைப்பார்கள்.இதுபோல தென் சீனாவில் உள்ள மக்களுக்கு சிறந்த இறைச்சியாக இருக்கும் நாய்கறி வைத்து திருவிழா கொண்டாடி வருகிறார்கள்.

Advertisment

DOG

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த திருவிழா கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிலுள்ள யுலின் நகரத்தில் ஜூன் 21 ஆம் தேதி ஆரம்பித்து ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த திருவிழாவிற்காக நகரத்தில் சுற்றி திரியும் நாய்கள் எல்லாம் பிடிக்கப்பட்டும், திருடப்பட்டும் நாய்கறி திருவிழாவை நடத்துகின்றனர். நாயை பிடித்து உயிருடனே சுடுதண்ணீரில் வேகவைக்கின்றனர், பாதி உயிரில் தோலை உரித்து நாய்க்கு நரகவேதனை என்பதையும் காட்டுகின்றனர். இத்திருவிழாவிற்காக 10,000 முதல் 15,000 நாய்கள்வரை வருடா, வருடம் கொல்லப்படுகின்றனர். இந்த நாய்கறி திருவிழாவுக்கு சீனர்கள் பலர் மருத்துவ குணம் கொண்டது என்றும் கோடைகாலத்தில் ஏற்பட்ட சூட்டை இந்த கறி தணிக்கும் என்றும் சொல்கின்றனர். மேலும் பல விஷயங்களில் மருத்துவ குணம் கொண்டது என்றும் சொல்கின்றனர்.

DOG

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

இருந்தாலும் உலகளவில் வருடா வருடம் நடக்கும் இந்த திருவிழாவிற்கு பல அமைப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணமாகதான்உள்ளது. இருந்தபோதிலும் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வருடம் நடைபெற இருக்கும் திருவிழாவிற்காக கடந்த வாரங்களில் இருந்தே தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்களும், வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்களைத்திருடியும் இந்த நாய்கறி திருவிழாவை நடத்த இருக்கின்றனர். இந்த வருடமும் பல சீன மக்கள் இந்த திருவிழாவை எதிர்த்து வருகிறார்கள்என்பதும்குறிப்பிடத்தக்கது.

china dog festival. Dogs
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe