ADVERTISEMENT

குளத்தை தூர்வாருவது நாங்கள் பணத்தை ஆட்டைய போடுவது அதிகாரிகளா? கோபத்தில் மக்கள்

01:24 PM Jul 02, 2018 | Anonymous (not verified)

திருச்சி புதுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள பெரிய குளத்தில் திருச்சி - குண்டூர் பெரியகுளம் ‘காப்புக் குழு’ மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இணைந்து கடந்த ஆண்டு ஒரு மாதம் வரை தூர்வாரப்பட்ட குளத்தில் ஊராட்சி சார்பில் ரூ.19 லட்சத்தில் தூர்வாரப்பட்டதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

திருச்சி அடுத்த திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூரில் 376 ஏக்கரில் பெரியகுளம் உள்ளது. இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசனம் நடைபெறுகிறது. குண்டூரில் உள்ள பெரியகுளம் ஆழம் குறைந்து மேடுகள் நிரம்பியுள்ளன. பெரிய குளத்தை உரிய காலத்தில் தூர்வாருதல், மேடுகளை அகற்றிக் குளத்தை ஆழப்படுத்துதல், நான்கு பக்கங்களிலும் கரைகளை வலிமைப்படுத்துதல் மூலம் நம் பகுதிக்கான நீர் ஆதாரங்களைச் சேமிக்கமுடியும். பெரிய குளத்தைச் சீர்படுத்தினால் நம் பகுதி வேளாண்மையில் முப்போகம் விளைச்சல் பெறலாம். நிலத்தடி நீர் வளம் பெருகும். கால்நடைகளின் வளமும் வளர்ச்சியும் பெருகும். என இந்த குளத்தை தூர்வாருவதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளாதால் திருச்சி குண்டூர் பெரியகுளம் ‘காப்புக் குழு’ மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் என்கிற அமைப்பு பங்களிப்புடன் சுமார் ரூ.8 லட்சம் செலவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் குளம் தூர்வாரும் பணி 1 மாதமாக நடந்தது. அப்போது மழை தொடங்கியதால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. அதன் பிறகு தற்போது வரை எந்த முன்னேற்றமும் தூர்வாறும் பணியும் நடைபெறவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் குளத்தின் கரையில் சில நாட்களுக்கு முன் குண்டூர் ஊராட்சி சார்பில் ஒரு விளம்பர கல் வைக்கப்பட்டுள்ளது. அதில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.19 லட்சம் செலவில் கடந்த பிப்ரவரி மாதம் இக்குளம் தூர் வாரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து விவசாய சங்க தலைவர் திரிசங்கு பேசுகையில், குண்டூர் பெரியகுளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருச்சி - குண்டூர் பெரியகுளம் ‘காப்புக் குழு’ மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் என்கிற அமைப்பு சார்பில் கொட்டை செடி அகற்றப்பட்டு குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது. அதன்பிறகு நேற்று வரை குளத்தில் இருந்து ஒருபிடி மண்கூட அள்ளப்படவில்லை.

ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி ரூ. 19 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு முடிவடைந்த நிலையில் மீதி ரூ. 5 ஆயிரம் இருப்பதாக கூறுவது அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது வெட்ட வெளிச்சமாக உள்ளது. தொடர்புடைய அதிகாரிகள் இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார்.

பொதுமக்கள் தன்னார்வலர்கள் இணைந்து தூர்வாரிய வைத்து கணக்கு காண்பித்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து பணத்தை ஆட்டைய போடுகிறார்கள் என்று மக்கள் கொதிப்படைந்தனர்.

குண்டூர் பெரியகுளம் தூர்வாரப்பட்டு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது குறித்து ஊராட்சி செயலாளர் விக்னேஷிடம் கேட்டபோது, குண்டூர் குளத்தில் கடந்த வருடம் நடைபெற்ற பணிக்கு முடிந்த வேலைக்கு கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

கடந்த ஜூன் மாதம் திருச்சி - குண்டூர் பெரியகுளம் ’காப்புக் குழு’ மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் என்கிற அமைப்பு தூர்வாரும் பணியை துவக்கி வைக்க திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி துவக்கி வைத்தார். அப்போது குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தண்ணீர் அமைப்பின் தலைவர் திரு.சேகரன் தலைமையில் செயலாளர் திரு.கே.சி.நீலமேகம் மற்றும் இணைச்செயலர் கி.சதீஷ் குமார் உடன் குண்டூர் பெரிய குளம் காப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தூயவளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் பெல் மகேந்திரன், திருமதி ரம்யாசதீஷ்குமார் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அப்போது கலெக்டர் ராஜாமணி ஆக்கிரமிப்புகள் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலையோர பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இன்றைக்கு வரை இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபாடாத நிலையில் ஊராட்சி அலுவலரின் இந்த நடவடிக்கையினால் பொதுமக்கள் முதல் தன்னார்வலர்கள் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT