crs

உலக பணக்கார வரிசையில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், தனது சகோதருக்காக தனியார் ஏர் ஆம்புலன்ஸை வரவழைத்திருக்க முடியாதா? என்று அமமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர்,

ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் ராணுவத்துறையின் பயன்பாட்டுக்கு உள்ளது. பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவி செய்தவற்காக பயன்படுத்துவார்கள். ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஒரு சராசரி மனிதர். சாதாரண மனிதருக்காக எப்படி ராணுவத்துக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் வந்தது. இதனை ஏன் ரகசியமாக வைத்திருந்தனர். ஓ.பி.எஸ். சகோதரர் என்பதற்காக அனுப்பியிருக்கிறார்கள். வேறு யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அனுப்புவார்களா.

Advertisment

இதுவரைக்கும் சொல்லாத ஓ.பி.எஸ். அதனை நேற்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?. அதனை சொன்னதால்தான், அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திக்கவில்லையா? பாதுகாப்புத்துறை அமைச்சர் இவர்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?.

ஓ.பன்னீர்செல்வம் இதனை ஏன் இத்தனைநாள் மறைத்து வைத்திருந்தார். இதுபோன்ற செய்திகளை மக்களிடம் இருந்து மறைப்பது மிகப்பெரிய தவறு. மக்களுக்கான அரசு என்று சொல்கிறீர்கள். இதனை ஏன் மக்களுக்கு தெரிவிக்கவில்லை. இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதில் சொல்ல வேண்டும்.

Advertisment

உடல்நிலை சரியில்லை என்றால் தனியார் ஏர் ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டால்அவர்கள் கூட்டிச் செல்வார்கள். உலக பணக்கார வரிசையில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திடம் பணம் இல்லையா? தனியார் ஏர் ஆம்புலன்ஸை வரவழைக்க முடியாதா? என கேள்வி எழுப்பினார்.