Skip to main content

என்னால என்ன பண்ணமுடியும்? அமைச்சர்களிடம் திமுகவினர் ரகசிய டீல்... கோபத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

சாட்டையை எடுப்பார் ஸ்டாலின் என்ற கடைசி நம்பிக்கையைத் தந்திருக்கிறது ஜனவரி 21-ல் நடைபெற்ற தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி நேரடி தேர்தலில் அ.தி.மு.க.வை விட தி.மு.க. அதிக இடங்களை ஜெயித்திருந்தாலும் அந்த வெற்றியில் ஸ்டாலினுக்கு உடன்பாடில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை ஒப்பிடும்போது உள்ளாட்சியில் கிடைத்த வெற்றி எண்ணிக்கை கொண்டாடக் கூடியதாக இல்லை என்றே கட்சியின் மா.செ.க்களிடம் சுட்டிக்காட்டியிருந்தார் ஸ்டாலின். அதேபோல மறைமுக தேர்தலில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. சற்று கூடுதல் இடங்களை கபளீகரம் செய்ததையும் ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை.
 

dmk



இந்த நிலையில்தான் இதனை ஆராய செயற்குழுவை கூட்டினார் ஸ்டாலின். அதில் கோவை, நீலகிரி, நாமக்கல், திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தி.மு.க. தோல்வியடைந்திருப்பதால் அந்த மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் அதற்கான பதில் இருந்தாலும் பதட்டமும் இருந்தது.

 

dmk



செயற்குழு குறித்து அதில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தபோது, "கொங்கு மண்டலத்திலும் தென் மாவட்டங்களிலும் எதிர்பார்த்த வெற்றி நமக்கு கிடைக்கவில்லை. கடந்த முறை கொங்கு மண்டலம்தான் நம் காலை வாரிவிட்டது. இந்த முறையும் அங்கு நமக்கு தோல்விதான் கிடைத்திருக்கிறது. இந்த தோல்விகளுக்கு என்ன காரணம்? தோற்றுப்போன மாவட்ட நிர்வாகிகள் பேசுங்கள். பிறகு நான் பதில் சொல்கிறேன் என எடுத்த எடுப்பிலேயே தனது கோபத்தை வெளிப்படுத்தினார் ஸ்டாலின். அவரது கையில் ஒவ்வொரு மாவட்டத்தின் வெற்றி -தோல்வி பட்டியலும், அதற்கான காரணங்கள் அடங்கிய பட்டியலும் இருந்தன.

 

dmk



நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்திச்செல்வனும், மேற்கு மா.செ. மூர்த்தியும் பேசும்போது, "நல்ல வேட்பாளர்களை நிறுத்தி, நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து வேலை பார்த்தார்கள். ஆனால், அமைச்சர் தங்கமணியின் அதிகார பலமும், பண பலமும் நம்மை வீழ்த்தி விட்டது. அவருக்கு கட்டுப்பட்டவர்களாகவே தேர்தல் அதிகாரிகளும் வேலை பார்த்தார்கள். நகராட்சித் தேர்தலில் நமக்கு இந்த நிலை வராது'' என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "அமைச்சரோடு இவர்களுக்கு இருக்கும் ரகசிய நெருக்கத்தால்தான் தோத்தோம்' என செயற்குழுவின் பின் புறத்திலிருந்து சத்தம் எழுந்தது. அதனை உணர்ந்து தலையசைத்தபடி இருந்துள்ளார் ஸ்டாலின்.

குமரி மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி உடைந்து போனதால் அந்த மாவட்டத்தின் மேற்கு செயலாளர் மனோ தங்கராஜ், "நாம் போட்டியிட நினைத்த பல இடங்களையும் குறிவைத்து காங்கிரஸ் கேட்டது. நம் பேச்சை மதிக்கவே இல்லை. சிக்கலை தீர்க்கவே முடியவில்லை. கடைசியில் தனியாக போட்டியிட்டு, காங்கிரஸ் நமக்குத் துரோகம் செய்துவிட்டது. கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் மதித்து நடந்திருந்தால் நிறைய இடங்களை கைப்பற்றியிருக்கலாம்'' என்றார். அதற்கான வரவேற்பையும் ஸ்டாலின் கவனித்தார்.


கரூர் மாவட்ட தோல்வி குறித்து பேசிய செந்தில்பாலாஜி, "சேலத்தைவிட அதிகளவில் கரூரில் அதிகாரிகளும் அ.தி.மு.க.வினரும் வெளிப்படையாக கைகோர்த்துக் கொண்டு, நாம் பூத்தில் நுழைய முடியாதபடி அதிகார துஷ்பிரயோகம் செய்தார்கள். அ.தி.மு.க.வினரின் தேர்தல் தில்லு முல்லுகள் எப்படி இருக்கும்கிறதை தெரிந்த என்னாலேயே அதை தடுக்க முடியலைங்கிறது வருத்தம் தான்' என்றார். கரூர் மாவட்ட நீண்டகால நிர்வாகிகள் சிலருக்கு பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், முதலமைச்சர் எடப்பாடியின் சொந்த மாவட்டம் என்பதால் அதிகார துஷ்பிரயோகம் அதிகமிருந்ததை சுட்டிக்காட்டிப் பேச, அதனை மறுத்துப் பேசிய சில நிர்வாகிகள், "அ.தி.மு.க.வின ரோடு நம்மாளுங்களுக்கு சில சீக்ரெட் ஒப்பந்தங்கள் இருந்தன. அதனாலேயே தேர்தல் பணியிலிருந்து அ.தி.மு.க.வின் பணப் பட்டுவாடாவை தடுப்பதுவரை எதிலுமே கவனம் செலுத்தவில்லை. வெறும் அதிகார துஷ்பிரயோகம்னு சொல்லி கடந்து போய்டமுடியாது. இப்படியே போனா, நகராட்சி, மாநகராட்சி தேர்தலிலும் சேலம் மாவட்டம் நமக்கு கிடையாது' என புகார் வாசித்தார்கள். இதனை குறிப்பெடுத்துக்கொண்டார் ஸ்டாலின்.


கிழக்கு மா.பொ. வீரபாண்டி ராஜாவோ, "என் மாவட்டத்துல நிர்வாகிகள் யாருமே எனக்கு ஒத்துழைக்கலை. நிர்வாகிகளை தலைமையே நியமிச்சதினால அவங்க என் பேச்சை கேட்பதில்லை. அப்படிப்பட்டவங்கள வெச்சுக்கிட்டு என்னால என்ன பண்ணமுடியும்? இதை பலமுறை தலைமைக்கு தெரிவிச்சும் யாருமே கண்டுக்கலை' என தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார். ஒட்டுமொத்த செயற்குழுவும் ராஜாவின் ஆதங்கத்தை சைலண்டாக கேட்டுக் கொண்டிருந்தது.

பேசிய மா.செ.க்கள் பலரும் தோல்விக்கான காரணங்களாக இதே ரீதியிலேயே விளக்கம் தந்தார்கள். மா.செ.க்கள் சிலரின் பொய்யான பேச்சுக்கு நிர்வாகிகள் சிலர் பதிலடியும் தந்தனர். இதனால் செயற்குழு காட்டமாகவே இருந்தது'' என சுட்டிக்காட்டினார்கள்.

மா.செ.க்களின் விளக்கங்களைத் தொடர்ந்து இறுதியில் மைக் பிடித்த ஸ்டாலின், "கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு கொங்கு மண்டலம்தாம் முக்கிய காரணம். இப்போது உள்ளாட்சி யிலும் அதே நிலை. இதை என்னால் ஏற்கவே முடியவில்லை. இனியும் நான் பொறுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என்னால் அப்படி பொறுமையாக இருக்க முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் யார், யார் என்ன செய்து கொண் டிருக்கிறீர்கள்? யார், யாரோடு டீலிங் வைத்திருக்கிறீர்கள்? என்று என்னிடம் பட்டியல் இருக்கிறது. இதை வெளியிட்டு கேவலப்படுத்த வேண்டாமென இருக்கிறேன். இதை உங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள மறுக்கிறீர்கள். சாதாரணமான புண்ணாக இருந்தால் மருந்து போட் டால் ஆறிவிடும். ஆனா, உங்க நட வடிக்கை ஆறாத வடுவாக இருக்கு. அதற்கு மருந்தெல்லாம் கிடையாது. ஆபரேசன்தான் ஒரே வழி. அந்த ஆபரேசனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். ஏன்னா... இனி நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து நாம் எதிர் கொள்ள வேண்டும். இவற்றில் ஜெயிக்கணும்னா நடவடிக்கை எடுப்பதுதான் சரி. விரைவில் நட வடிக்கை எடுப்பேன். அப்போது அவர்களுக்கு சிபாரிசாக யார் வந்தாலும் அவர்கள் மீதும் நட வடிக்கை எடுப்பேன்ங்கிறதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன்'' என மா.செ.க்கள் மீதிருந்த ஒட்டு மொத்த கோபத்தையும் கொட்டித் தீர்த்தார் ஸ்டாலின்.

நிர்வாகிகள் கை தட்டினர். மா.செ.க்களிடம் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. ரிலாக்ஸாகவே இருந்தனர். "தோல்வி குறித்து ஆராய எப்போது கூட்டம் நடத் தினாலும் இதே எச்சரிக்கை யைத்தான் ஸ்டாலின் செய் கிறார். அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தவறு செய்தவர்களின் பட்டியல் இருக்கும்போது உடனடி நட வடிக்கை எடுத்தால்தான் மற்றவர்களுக்கு பயம் வரும்.

கட்சியில் இணைந்து 10 வருடம் உழைத்தால் பதவிகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை அடிமட்ட நிர்வாகிகளுக்கு இருந்தால்தான் கட்சி வலிமை யடையும். புதிய உறுப்பினர்கள் வருவார்கள். இல்லைன்னா அடிமட்ட தொண்டர்கள் தேர்தல் நேரத்தில் விலை போகத்தான் செய்வார்கள். இந்த முறையாவது தனது எச்சரிக்கையை நடைமுறைப் படுத்தி, மா.செ.க்கள் பலருக்கு ஸ்டாலின் கல்தா கொடுக்க வேண்டும்‘என்ற குமுறலை, கூட்டத்திற் குப் பிறகு மனம் திறந்து பேசிய செயற்குழு உறுப்பினர்களிடம் கேட்க முடிந்தது.

 

 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.