Skip to main content

தி.மு.க.வுக்கு எதிராக தலைமைச் செயலாளரிடம் கடிதம் வாங்கும் டெல்லி! 

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

dmk party vs bjp delhi tamilnadu  chief secretary


தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனையை நாடாளுமன்றக் கூட்டத்தில் எழுப்ப தீர்மானித்து அதற்கான கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டி.ஆர்.பாலுவும் தயாநிதியும் கொடுத்துள்ளனர். விரைவில் துவங்கவிருக்கும் மழைக்கால கூட்டத் தொடரில் இந்தப் பிரச்சனை வெடிக்கவிருக்கிறது.
 


தி.மு.க. எம்.பி.க்கள் கொடுத்துள்ள உரிமை மீறல் விவகாரம், மத்திய அமைச்சரவை செயலர் மூலம் பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தைத் தொடர்புகொண்டு பிரதமர் அலுவலக அதிகாரிகள் விசாரித்திருக்கிறார்கள். 

அப்போது, தி.மு.க. எம்.பி.க்கள் நடந்துகொண்ட விதத்தையும், ஒரு கட்டத்தில் தன்னை மிரட்டுவது போல நடந்து கொண்டனர் என்றும் நடந்ததை விரிவாக பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் சண்முகம். விபரங்களைக் கேட்டுக்கொண்ட அதிகாரிகள், இதனைக் கடிதமாக அனுப்பி வைக்குமாறு சண்முகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர். அவர் அனுப்பும் கடிதத்தில் தி.மு.க.வை கார்னர் செய்யும் அரசியல்ரீதியான தாக்குதல்களும் இருக்கும் எனக் கோட்டை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. சண்முகம் கூறிய தகவல்கள் பிரதமர் மோடியிடம் விவரிக்கப்பட்டுள்ளது. 

 

 


இந்த நிலையில்தான், தயாநிதிக்கு எதிராகப் புகார் கொடுக்க தமிழக பா.ஜ.க.வினருக்கு வலியுறுத்தும் யோசனை தயாரானது என்கின்றன டெல்லி தகவல்கள். தயாநிதிக்கு எதிராக டெல்லியின் கோபத்துக்கு என்ன காரணம் என விசாரித்த போது, "2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலேயே, தயாநிதி மாறன், ஆ,ராசா, கனிமொழி, கார்த்தி சிதம்பரம், திருமாவளவன் ஆகிய 5 நபர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும் என விரும்பியது பா.ஜ.க. தலைமை. ஆனால், அந்த ஐவரும் வெற்றிப்பெற்றதை பிரதமர் மோடி அப்போதே ரசிக்கவில்லை. 

மேலும், நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக மிகவும் ஆவேசமாக ஆக்ரோஷப்படுகிறார் தயாநிதி. அந்த வகையில், தயாநிதிக்கு எதிராகத் தற்போது பிரச்சனை உருவாகவும் அதில் அரசியல்ரீதியாகத் தீவிரம் காட்டுகிறது மத்திய பா.ஜ.க. அரசு" எனச் சுட்டிக்காட்டுகின்றனர் தேசிய பா.ஜ.க.வினரோடு தொடர்புடைய தமிழக பா.ஜ.க.வினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.