ADVERTISEMENT

நான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன்!!! பொன்முடி கர்..புர்..! அறிவாலயத்தில் பஞ்சாயத்து!

01:57 PM Nov 30, 2020 | rajavel


கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் உதயசூரியனும் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றிய செயலாள ரான துரைராஜும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குமரகுருவுடன் இணைந்து கட்சிக்கு துரோக மிழைப்பதாக மாவட்ட உடன் பிறப்புகள் சிலர், கடந்த மாதம் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது முழக்க மிட்டார்கள். இதனை அப்போதே நாம் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில், கட்சிப் பணியை சரிவர செய்யாததால் ஒன்றிய செயலாளர் பதவி யிலிருந்து துரைராஜ் நீக்கப்படுகிறார் என கடந்த 20-ந்தேதி கட்டம் கட்டியது திமுக தலை மை. துரைராஜுக்கு பதிலாக சந்திரசேகரனை நியமித்திருக் கிறார் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT

துரைராஜ், பொன்முடியின் சமூகத்தை சேர்ந்தவர். சந்திரசேகரன், வன்னியர் சமூகத்தவர். அதனால், பொன்முடி, மா.செ.உதயசூரியனை தொடர்புகொண்டு, ஒருமையில் மிரட்டியிருக்கிறார். தலைமையின் முடிவுதான் இது என்றிருக்கிறார் உதயசூரியன். உடனே, ஆர்.எஸ்.பாரதிக்கு ஃபோன் போட்டு கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பொன்முடி. அதற்கெல்லாம் அசராத ஆர்.எஸ்.பாரதியோ, ""எதுவாக இருந்தாலும் தலைவர்(ஸ்டாலின்)கிட்டே பேசுங்க'' என பதிலுக்கு கடுப்படித்திருக்கிறார்.

ADVERTISEMENT

ஸ்டாலின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட பொன்முடி, ""எனது ஆதரவாளரை கட்டம் கட்டுவதற்கு முன் என்னிடம் கேட்க மாட்டீர்களா? அப்புறம் எதற்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி? நான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன்'' என்றிருக்கிறார். இது பொதுச்செயலாளர் துரைமுருகன் கவனத்திற்குப் போக, அவர் சொன்னபடி, கட்டம் கட்டப்பட்ட துரைராஜை அழைத்துக் கொண்டு அறிவாலயத்துக்கு 23-ந்தேதி போயிருக்கிறார் பொன்முடி.

அங்கே ஸ்டாலின், துரை முருகன், கே.என்.நேரு, ஆர்.எஸ் .பாரதி எல்லோரும் இருக்க, பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறார் பொன்முடி. தன்னுடைய முடிவுக்கு எதிராக பொன்முடி நடந்துகொள்வதை ரசிக்காத ஸ்டாலின், இத என்ன னுன்னு பேசி முடிவெடுங்க என கே.என். நேருவிடம் சொல்ல, பொன்முடியின் இயல்பு அறிந்த நேரு, நீங்களே பேசுங்க என ஜகா வாங்க, கடைசியில் ஸ்டாலினே விசாரித்திருக்கிறார். துரைராஜுக்கு பதிலா வேறு ஒருவரை நியமிச்சாச்சு. அத மாத்த முடியாது. துரைராஜுக்கு வேற ஒரு பொறுப்பு தர்றோம் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் ஸ்டாலின்.

இதனையடுத்து, கட்சி வளர்ச்சிக்காக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பதவியில் துரைராஜ் நியமிக்கப்படுவதாக அறிவாலயம் அறிவித்துள்ளது. கட்சி பணிகளை சரிவர செய்யாத காரணத்தால் நீக்கப்பட்ட ஒருவரை நான்கே நாளில் கட்சி வளர்ச்சிக்கான பணியில் நியமித்துவிட்டதில் பொன்முடிக்கு ஆறுதல்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT