Skip to main content

இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறதா?

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

இடைத்தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்ற பிம்பம் அப்படியே இருக்கிறது. கடந்த மக்களவைப் பொதுத்தேர்தலின் போது நடைபெற்ற 22 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை திமுக கைப்பற்றினாலும், 9 தொகுதிகளை ஆளுங்கட்சி கைப்பற்றி திமுக கூட்டணிக்கு தனது பலம் பறிபோய்விடவில்லை என்பதை நிரூபித்தது.

மக்களவைத் தேர்தலில் குறைவான வாக்குகளைப் பெற்ற தொகுதிகளில் கூட அதிகமான வாக்குகளைப் பெற்றே அதிமுக இந்த 9 பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்றியது என்பது அந்தச் சமயத்திலேயே குறிப்பாக பேசப்பட்டது. அதாவது, ஆளுங்கட்சியின் இடைத்தேர்தல் வேலைப்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்றும், திமுகவினரின் சொதப்பலுக்கு கிடைத்த தோல்வி என்றும் விமர்சிக்கப்பட்டது.

 

dmk


மக்களவைத் தேர்தலில் 2 லட்சம் முதல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, நான்கு மாத இடைவெளியில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தனித்து நடைபெற்ற தேர்தலில் வெறும் 8 ஆயிரத்து சொச்சம் வாக்குகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதாவது வெறும் நான்கு மாதங்களிலேயே இந்தச் சரிவு ஏற்பட்டது. அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிரான மக்கள் மனநிலையில் ஏற்பட்ட மாற்றமே இந்தச் சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில்தான், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் எம்எல்ஏ எச்.வசந்தகுமார் ராஜினாமா செய்த நாங்குனேரி தொகுதியிலும், திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம் அடைந்ததால் காலியான விக்கிரவாண்டி தொகுதிக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏற்கெனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை பார்ப்பது, இடைத்தேர்தல் நிலவரத்தை கணிக்க வசதியாக இருக்கும்.

 

dmk

 

2016 சட்டப்பேரவை தேர்தலில் நாங்குனேரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் 74,932 வாக்குகளையும், அதிமுக சார்பில் போட்டியிட்ட 57,617 வாக்குகளையும், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் போட்டியிட்ட சுரேஷ் அலி 14,203 வாக்குகளையும், ம.ந.கூ. சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஜெயபாலன் 9,446 வாக்குகளையும், பாஜக சார்பில் தனித்து போட்டியிட்ட 6,609 வாக்குகளையும் பெற்றனர்.

அதாவது பொதுத்தேர்தலுடன் நடந்த தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு இது. ஆனால், இப்போது நடக்கப்போவது இடைத்தேர்தல் என்பதை கவனிக்க வேண்டும்.

அதுபோலவே, 2016 பேரவைப் பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 63,757 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் 56,845 வாக்குகளையும், பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி 41,428 வாக்குளையும், ம.ந.கூ. சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் 9,981 வாக்குகளையும் பெற்றனர். பாஜக தனித்து போட்டியிட்டு 1,291 வாக்குகளை மட்டுமே பெற்றது.
 

இதுவும் பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் என்பதையும், இப்போது நடக்கப்போவது இடைத்தேர்தல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்களவைப் பொதுத்தேர்தலின்போது உருவான திமுக மற்றும் அதிமுக கூட்டணி அப்படியே இருக்கிறது. ஆனால், அதிமுக கூட்டணிக்கட்சிகளின் திமுக எதிர்ப்பு கடுமை மாறாமல் அப்படியே இருக்கிறது. ஆனால், திமுக கூட்டணியிலோ, மக்களவைத் தேர்தலின்போது இருந்த பாஜக, அதிமுக எதிர்ப்பின் கடுமை வெகுவாகக் குறைந்திருக்கிறது என்ற விமர்சனம் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் மத்தியிலேயே உருவாகி இருக்கிறது.

 

dmk


திமுகவின் பொருளாளரான துரைமுருகனே சமீபத்தில் தி ஹிண்டு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்து பட்டும்படாமலும் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல்கள் வழக்கமான இடைத்தேர்தல்கள்தான். இந்தத் தொகுதிகளின் முடிவுகளால் அதிமுக அரசு கவிழப்போவதில்லை. அதுபோல திமுக ஆட்சிக்கு வரப்போவதுமில்லை. எனவே, வழக்கமான இடைத்தேர்தலாகவே பார்க்கிறோம் என்று கூறியிருந்தார்.

ஆனால், ஆளுங்கட்சியோ, வேலூரில் திமுகவை திணறடித்ததுபோல, இந்த இரண்டு தொகுதிகளையும் திமுக அணியிடமிருந்து கைப்பற்றி, தனது வாக்கு வங்கியை நிரூபிக்கவும், கூட்டணியின் பலம் குறித்த வாக்காளர்களின் அவநம்பிக்கையை போக்கவும் உறுதியேற்றிருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றைக் கைப்பற்றினாலும் அதிமுக அணிக்கு லாபம் என்பதால் முதல்வர் எடப்பாடி, தனது அமைச்சர்களை இரண்டு தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக அறிவித்திருக்கிறார்.

திமுகவும் தனது மாவட்டச் செயலாளர்களையும், தலைமைக்கழக நிர்வாகிகளையும் இரண்டு தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறது. ஆனாலும், இடைத்தேர்தல் வேலைகளில் அதிமுகவினரைப் போல திமுகவினர் பணப்பட்டுவாடாவிலோ, வாக்காளர்களை கவனிப்பதிலோ போதுமான கவனம் செலுத்த மாட்டார்கள் என்ற விமர்சனம் அந்த அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்களின் பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுகளே என்பதால் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பணத்தை இறக்கி வேலை செய்வார்களா என்பதும், அவர்களுக்காக திமுக பணத்தை இறக்கி வேலை செய்யுமா என்பதும் சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தத் தேர்தல் முடிவு தங்களுடைய பலத்தை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு என்பதால், பணபலம் அதிகார பலம் ஆகியவற்றை ஆளுங்கட்சி முழுவீச்சில் பயன்படுத்தும் என்பது உறுதி. அதுமட்டுமின்றி, விக்கிரவாண்டி தொகுதியில் பாமகவும், தேமுதிகவும் பலமாக இருக்கும் நிலையில் அந்தத் தொகுதியை திமுக மீண்டும் கைப்பற்றுமா, பறிகொடுக்குமா என்று இப்போதே தொகுதியில் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

 

dmk


 நாங்குனேரியில், காங்கிரஸுக்கென்று நிரந்தர வாக்குகள் இருந்தாலும், அது எல்லாத் தேர்தல்களிலும் மொத்தமாக கிடைத்ததில்லை. வசந்தகுமார் போட்டியிடும் சமயத்தில் அவருடைய கவனிப்புகளே அவருக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. தனது ஆசைக்காக ராஜினாமா செய்த இந்தத் தொகுதியை எப்படியும் காங்கிரஸுக்கு கிடைக்கும் வகையில் அவர் இப்போதும் வேலை செய்வாரா என்பதைப் பொறுத்தே இந்தத் தொகுதியின் முடிவு இருக்கிறது. கடந்த தேர்தலில் கிடைத்த வாக்கு வித்தியாசத்தை நிறைவு செய்யும் வகையில் தேமுதிக, பாஜக வாக்குகளும், தினகரன் கட்சி, கமல் கட்சி வாக்குகளையும் அதிமுக அறுவடை செய்ய முடிந்தால், திமுக அணியின் பாடு திண்டாட்டம்தான் என்பதே கள எதார்த்தம்.

 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இரண்டு அணிகளும் இந்தத் தேர்தலை கருதுவதால் போட்டி கடுமையாகவே இருக்கும். எடப்பாடி தலைமைக்கும், ஸ்டாலின் தலைமைக்கும் இந்தத் தேர்தல்கள் சவாலாகவே இருக்கும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.