உமா மகேஸ்வரி படுகொலை ஆதாயக் கொலைதான் என அறிவித்த நெல்லை கமிஷனர் பாஸ்கரன், அதன் அடிப்படையிலேயே ஏ.சி. ஒருவரின் தலைமையில் தனிப்படைகளை அமைத்தார். அந்தப் படையிலிருந்த மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பர்ணபாஸ், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகராசன், க்ரைம் இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படையும் அதே கோணத்தில்தான் கொலையாளிகளைத் தேட ஆரம்பித்தது.

nellai

இந்தக் கோணத்தில் விசா ரணை செல்வதைப் பார்த்து டி.ஜி.பி. அலுவலகம் டென்ஷனானதையும் அதன்பின் விசாரணையின் கோணத்தை மாற்றியதையும் கடந்த இதழில் எழுதியிருந்தோம். மேலும் இந்தக் கொலை வேலையில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அந்தப் பெண்ணைத் தேடி ஒரு டீம் மதுரைக்கு விரைந்துள்ளதாகவும் எழுதியிருந்தோம்.

nellai

Advertisment

அந்தப் பெண் நெல்லை மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளரான சீனியம்மாள்தான் என தகவல் பரவ ஆரம்பித்ததும் பதறிவிட்டார் சீனியம்மாள். ""நடக்க முடியாத நிலையில மதுரையில் என் மகள் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்துக்கிட்டிருக்கேன். கட்சி நிகழ்ச்சிகளில் உமா மகேஸ்வரியை பார்ப்பதோடு சரி, மத்தபடி எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட உறவோ, பகையோ கிடையாது''’என மீடியாக்களுக்கு ஓப்பனாக பேட்டி கொடுத்தார்.

dmk

தங்கள் வேலை முடிந்ததும் கொலை யாளிகள், வீட்டின் பல இடங்களில் தடயங்களை அழித்துவிட்டுச் சென்றுள்ளனர். கொலை நடந்த மறுநாள் உமா மகேஸ்வரி ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதுபோல இரண்டு போட்டோக்கள் வாட்ஸ்-அப்களில் உலா வந்தன. அவற்றில் ஒரு போட்டோ குப்புறக் கிடப்பது போலவும் மற்றொன்று மல்லாந்த நிலையிலும். இந்த போட்டோக்களை ரிலீஸ்பண்ணியது யாராக இருக்கும் என்ற மண்டைக் குடைச்சலில் இருக்கிறார் கமிஷனர் பாஸ்கரன்.

Advertisment

incident

இதற்கிடையே நெல்லை கே.டி.சி. நகர் பாலத்திலிருந்து டி.ஐ.ஜி. பங்களா நோக்கிச் செல்லும் சாலையிலுள்ள கமர்ஷியல் காம்ப்ளக்சை தன்னுடைய அண்ணன் வழி உறவினர் ஒருவரின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார் உமா மகேஸ்வரி. இதனால் முருக சங்கரனின் உறவினர் வழியில் உறுமலும் பொருமலும் ஆரம்பித்திருந்ததையும் கவனத்தில் கொண்டு விசாரணை போய்க் கொண்டிருந்தது.

இப்படி பல கோணங்களிலும் விசாரணை போய்க்கொண்டிருந்த நிலையில்தான், உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு அருகே இருக்கும் பெந்தே கொஸ்தே சர்ச்சில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் ஃபுட்டேஜ், போலீசுக்கு கை கொடுத்தது. அந்த ஃபுட்டேஜில் வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று பதினைந்து நாட்களுக்குள் மூன்று முறை சர்ச் அருகே நிறுத்தப் பட்டிருந்தது. இதை வைத்து அந்த ஸ்கார்பியோவின் உரிமையாளரின் செல்போன் டவர் சிக்னலை டிரேஸ் பண்ணியதில் சிக்கியவர்தான் சீனி யம்மாளின் மகன் கார்த்திகேயன். இவர் மீது கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனிலும் நெல்லை மாவட்டம் பணவடலி சத்திரம் ஸ்டேஷனிலும் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளனவாம்.

கார்த்திகேயன் கக்கிய தகவல்படி, கொலை ஆயுதங்கள் தாமிரபரணி ஆற்றில் புதைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொண்டு, 29-ஆம் தேதி மாலை, ஆயுதப் புதையலை எடுக்க புறப்பட்டது தனிப்படை. இதற்கிடையே இந்தக் கொலை வழக்கின் தன்மை கருதி, சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கை மாற்றி 29-ஆம் தேதி மாலை உத்தரவிட்டார் டி.ஜி.பி. திரிபாதி. முன்னாள் மேயர் + கணவர் + பணிப்பெண் படுகொலையில் இன்னும் என்னென்ன மர்மங்கள் புதைந் துள்ளதோ?