Skip to main content

புதிய நாடாளுமன்றத்தில் பசு மாடுகள் - இரகசியம் சொல்லும் இள. புகழேந்தி 

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

DMK Election Commission Secretary Ela. Pugazhendhi spoke about new parliament

 

புதிய பாராளுமன்றக் கட்டடம் திறப்பு மற்றும் செங்கோல் நிறுவியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து திமுகவின் தேர்தல் பணிக் குழுச் செயலாளர் இள. புகழேந்தி நம்முடன் பேசினார். 

 

புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் ஆதீனங்கள் எல்லாம் இணைந்து பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கியுள்ளனர். அதனை அவர் சபாநாயகர் இருக்கையின் அருகே வைத்துள்ளார். இது தமிழர்களுக்கு பெருமை என பாஜகவினர் கூறுகின்றனர்?

 

இதற்கு பதில் அளித்த இள. புகழேந்தி, “மோடி அரசு பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழர்களை பெருமைப்படுத்துவதாக பாஜக  கூறுவது, தமிழ்நாட்டில் இதன் மூலம் இந்துத்துவா கொள்கைகளை பரப்பி பாஜக ஆட்சியை பிடிப்பதற்காக அவர்கள் செய்யும் வாக்கு அரசியல் தான். இவர்களுக்கு உண்மையாகவே தமிழ் மேல் பற்று இருக்கிறது என்றால் அந்த பாராளுமன்றத்தில் சமஸ்கிருத கல்வெட்டிற்கு பதிலாக தமிழ் கல்வெட்டைத்தானே வைத்திருக்க வேண்டும்.

 

DMK Election Commission Secretary Ela. Pugazhendhi spoke about new parliament

 

இந்தியாவில் 20,000 பேர் கூட பேசாத சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக சுமார் ரூ. 1100 கோடி ஒதுக்கிய இதே மோடி அரசு, உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த தமிழ் மொழிக்கு வெறும் 20 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. 

 

அனைத்து மதத்தை சார்ந்த மக்களும் இருக்கும் ஜனநாயக நாடான இந்தியாவில் இந்து முறைப்படி, ஆதீனங்களை வரவழைத்து இந்த விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக இன்னொரு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் ஆட்கள், விழாவிற்கு முந்தைய நாள் இரவு இரண்டு பசு மாடுகளை அந்த இடத்திற்கு  கொண்டு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி அந்த மாடுகள் சாணம் போடு வேண்டும் என 10 நிமிடங்களாக அங்கேயே காத்திருந்திருக்கின்றனர். 

 

மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.கள் அமரப்போகும் அந்த பாராளுமன்றக் கட்டடத்தில் காவி உடை அணிந்தவர்களை அழைத்து வந்த நோக்கம், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘நாங்கள் அன்றே புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் இதனை எல்லாம் செய்தோம்; மக்கள் யாரும் எங்களை எதிர்க்கவில்லை. மீண்டும் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதனால், இந்த நாட்டில் சிறுபான்மையின மக்கள் இருக்கக்கூடாது என சட்டம் போடுவேன்’ என பேசுவார்கள்” என்று தெரிவித்தார். 

 

 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.