Advertisment

தேர்தல் களத்தில் தி.மு.க. 24, அ.தி.மு.க. 21 இதுவே ஃபைனல்...

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ஐ. ஜே. கே., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Advertisment

dmk admk

எதிரணியான ஆளுங்கட்சி அதிமுக பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், த.மா.க. ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் சரிபாதியாக திமுக 20 இடங்களிலும், அதிமுக 20 இடங்களிலும் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு இரு கட்சிகளும் கொடுத்துள்ளது. இந்த வரிசைப்படி பார்த்தால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 7 இடத்தில் கை சின்னத்தில் போட்டியிடுகிறது, இடதுசாரிக் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நான்கு இடங்களில் கதிர் அரிவாள், மற்றும் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடுகிறது. முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது. விடுதலை சிறுத்தைகள் ஒரு தொகுதியில் சுயேட்சையான பானை சின்னத்தில் போட்டியிடுகிறது. மீதமுள்ள ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. அதேபோல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திமுக சின்னத்திலேயே போட்டியிடுகிறது. தொடர்ந்து தனி சின்னம் எனக் கூறி வந்த மதிமுக ஈரோடு தொகுதியில் தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. ஏற்கனவே ஐ.ஜே.கே. பாரிவேந்தர் பெரம்பலூரில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.. ஆக திமுகவின் அதிகாரப்பூர்வமான சின்னமான உதயசூரியன் சின்னம் 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Advertisment

அதேபோல் அதிமுக தரப்பில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் 20 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியான பாமக மாம்பழம் சின்னத்தில் 7 இடத்தில் போட்டியிடுகிறது. பாஜக ஐந்து இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. தேமுதிக நான்கு இடத்தில் முரசு சின்னத்திலும், பாண்டிச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் ரங்கசாமி தனி சின்னத்திலும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தனி சின்னத்திலும், தமாக வேட்பாளர் தனி சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள். இக்கூட்டணியில் புதிய நீதி கட்சி மட்டும் இரட்டை இலையில் போட்டியிடுகிறது. அதிமுக அணியில் 21 இடங்களில் இரட்டை இலையும், திமுக அணியில் 24 இடங்களில் உதய சூரியனும் களத்தில் உள்ளது. கூட்டணி அடிப்படையில் திமுகவின் சின்னமே அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது... இதுவே தேர்தல் களத்தில் ஃபைனல் பட்டியல்.

admk elections Symbol Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe