Skip to main content

குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டுமென்ற உத்தரவுடன் தொண்டைமான் கல்வெட்டு கண்டுபிடிப்பு

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

Discovery of Thondaiman inscription with an order to drain pond water only for crops

 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை எல்லையில் புதுக்கோட்டை வட்டம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையில் கல் பலகை நட்டிருப்பதாக குரும்பூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மூ.சேகர் அளித்த தகவலின் பேரில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கல்வெட்டை ஆய்வு செய்தார். அதில் திருமலைராய தொண்டைமான் பெயரில் 1758 ஆம் ஆண்டு பிரம குளத்தில் பயிருக்கு மட்டும் நீர் பாய்ச்சும் பாசன உரிமையுடன், பிரமன் வயல் நிலத்தை சறுவமானியமாகக் கொடுத்த தகவலடங்கிய கல்வெட்டு என தெரியவந்துள்ளது.

 

இக்கல்வெட்டு குறித்து ஆ.மணிகண்டன் கூறியதாவது: கந்தர்வகோட்டை எல்லையிலுள்ள கொத்தகம் அருகே புதுக்கோட்டை வட்டம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையிலுள்ள எல்லைக் கல் வயலில் வாமன கோட்டுருவமும, எல்லைக்கல்லிற்கும் வட மேற்கிலுள்ள புதரில் கல்வெட்டு பலகைக்கல் நட்டுவிக்கப்பட்டுள்ளது. 

 

கல்வெட்டின் காலம்: சாலிவாகன சகாப்தம் 1679,  கலியுகம் 4858 என்றும், வெகுதானிய வருடம் ஆவணி மாதம் மூன்றாம் திகதி (தேதி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இணையான பொது ஆண்டாக 1758 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி என கணிக்கலாம். இந்த காலகட்டத்தில் விசயராகுநாதராய தொண்டைமானார் ஆட்சி பொ.ஆ. 1730 முதல் 1789 வரை நிலவியது.

 

கல்வெட்டில் உள்ள தகவல்: ஐந்தரை அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் உள்ள பலகைக்கல்லின் இருபுறமும் 80 வரிகளுடன் எழுத்துப்பொறிப்பு ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்குகிறது. சாலிவாகன ஆண்டு மற்றும் கலியாண்டுடன் வெகுதானிய வருடம் ஆவணி மாதம் 3 ஆம் நாள் என இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகம் குறித்த தகவலாக ராசராச வளநாடு, ராசேந்திர சோழ வளநாடு, பன்றி சூழ் நாடு, அன்பில் எனப்படும் அம்புக்கோவில் தெற்கிலூரில் காணியுடையார் மக்களில் திருமலைராய தொண்டைமானார் அவர்களின் பஞ்ச நத்தத்திலிருக்கும் என்ற சொற்றொடரில் உள்ள தகவல் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகமாக அம்புக்கோவிலை குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது. 

 

Discovery of Thondaiman inscription with an order to drain pond water only for crops

 

மேலும் இவ்வூரில் இருக்கின்ற பகவாந்தராயர் மற்றும் ராசிவராயர் ஆகியோருக்கு, சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையில் அமைந்துள்ள பிரமன் வயலை சறுவமானியமாக வழங்கிய மன்னரின் உத்தரவு தாமிரத்தில் எழுதி சாசனமாக்கப்பட்டதையும், வழங்கப்பட்ட நிலத்தின் நான்கு புற எல்லைகளாக கிழக்கு எல்லையாக கீழக்காட்டுக்கு மேற்கு எனவும், தென்புறத்தில் புளியடிக்கு வடக்கு எனவும், மேற்கு பக்க எல்லையாக மொந்தைக்கு கிழக்கு எனவும், வடப்பக்க எல்லையாக கொத்தகத்து வயலுக்கு தெற்கு எனவும் வரையறுக்கப்பட்டு இந்த பெருநான்கு எல்லைக்குட்பட்ட நஞ்சையும் புஞ்சையும் பிரம குளத்தின் நீரை பயிருக்காக மட்டும் பாய்ச்ச வேண்டும் என்ற உத்தரவுடன் இந்த சாசனத்திற்கு இடையூறு செய்வோர் பல தோஷத்திற்கு ஆளாவர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள கல்வெட்டுப்பகுதி முழுமையாக வாசிக்க இயலாத நிலையில் உள்ளது. இறுதியாக தொண்டைமான் மன்னர் சார்பாக பழனியப்ப வாத்தியார் என்பாரின் ஒப்பத்துடன் ‘ஶ்ரீ ராம செயம்’ என கல்வெட்டு நிறைவுறுகிறது.

 

வாமன கோட்டுருவம் பொறிக்கப்பட்ட எல்லைக்கல்: தற்போது கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இந்த வாமன கோட்டுருவம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இது கல்வெட்டிலுள்ள எல்லையை குறிப்பதற்காக நடப்பட்டதை உறுதி செய்கிறது. இது தொண்டைமான் மன்னர்களின் தனித்துவ குறியீடாகும். தொண்டைமான் செப்புப்பட்டயங்களில் வாமன கோட்டுருவம் வடிக்கப்பட்டுள்ளதை இதனுடன் ஒப்புநோக்கலாம்.

 

Discovery of Thondaiman inscription with an order to drain pond water only for crops

 

சறுவ மானியம் வழங்கியது யார்?
திருமலைராய தொண்டைமான் (பொ.ஆ. 1729) மறைவுக்குப்  பிறகு பொ.ஆ. 1758 ஆம் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தொண்டைமான் மன்னர்களில் 1730 ஆண்டு முடி சூட்டிக்கொண்ட விசயராகுநாதராய தொண்டைமான் பொ.ஆ. 1730 ஆம் ஆண்டு தொடங்கி பொ.ஆ. 1790 வரை ஆட்சி புரிகிறார் என்பதால் இக்காலத்தில் தனது தந்தையாரின் நினைவாக இந்த சறுவ மானியத்தை வழங்கியிருப்பதோடு தனது பெயரை இக்கல்வெட்டில் குறிப்பிடவில்லை என்பது நோக்கத்தக்கது. மேலும் இந்த சறுவ மானியத்தை திருமலைராய தொண்டைமானுக்காக பழனியப்ப வாத்தியார் என்பவர் ஒப்பமிட்டு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த ஆய்வின் போது தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினர்கள் ஜனார்த்தனன், குமரேசன், உள்ளூர் ஆர்வலர் சாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் தொல்லை தந்த மதபோதகர்! பெண் எடுத்த விபரீத முடிவு! 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Puthukottai Pastor issue

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திலுள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமண மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இதன் அருகில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல் (வயது 61) என்பவர் தங்கியிருந்தார். அவர், அங்கிருந்த வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் அங்கிருக்கும் மாத்தூர், மண்டையூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களைப் பாடி, மத போதனைப் பணிகளில் ஈடுபட்டுவந்தார்.

அப்போது, மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த கிறிஸ்டி (46, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரிடம் அறிமுகமாகியிருக்கிறார். கிறிஸ்டியிடம் தான் தனியாக தங்கியிருப்பதாகவும், தனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் ஒருவர் தேவை என்றும் கூறியிருக்கிறார். அதைக் கேட்ட கிறிஸ்டி, கணவனை இழந்து வறுமையில் இருப்பதால் தானே சமையல் மற்றும் வீட்டு வேலைகளை செய்து தருவதாக கூறியிருக்கிறார். டேனியலும் அதற்குச் சம்மதிக்க, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டேனியல் வீட்டுக்குச் சென்று தங்கி, அங்கேயே வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் வழக்கம்போல மத போதகர் வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்து உணவருந்தியிருக்கிறார். அப்போது வீட்டில் கிறிஸ்டியும் இருந்திருக்கிறார்.

நேற்று காலை 6 மணியளவில் டேனியல் வீட்டின் வாசலில் கிறிஸ்டி அழுதுகொண்டு அமர்ந்திருந்திருக்கிறார். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், என்ன, ஏது என்று விசாரித்தபோது, மத போதகர் டேனியலை, தான் கொலை செய்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக இது குறித்த தகவலை மண்டையூர் காவல் நிலைய போலீஸாருக்குத் தெரிவித்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கீரனூர் டி.எஸ்.பி செங்கோட்டு வேலன், மாத்தூர் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், மண்டையூர் உதவி ஆய்வாளர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட போலீஸார் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்றனர். அங்கே கொலை செய்யப்பட்டுக் கிடந்த டேனியல் உடலைப் பார்வையிட்டு, அங்கிருந்த கிறிஸ்டியிடம் விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில் கிறிஸ்டி, “மத போதகர் டேனியல் எனக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அதேபோல நேற்று முன்தினம் இரவும் எனுக்கு மிகவும் மோசமாக பாலியல் தொல்லை கொடுத்தார்.

அதனால், எனக்கு அவர்மீது வெறுப்பு ஏற்பட்டு, அவரைக் கீழே தள்ளியதில் அவர் மயக்கமடைந்தார். அப்போது அவரது வீட்டில் மோட்டார் சைக்கிளிலிருந்து கழற்றி வைக்கப்பட்ட செயின் ஸ்பிராக்கெட் மூலம் அவரின் முகத்திலும் தலையிலும் வெட்டினேன். அதனால், ரத்த இழப்பு ஏற்பட்டு, அவர் இறந்துவிட்டார்” என்று தெரிவித்திருக்கிறார்.

பின்னர், கொலைசெய்யப்பட்ட மத போதகர் டேனியல் உடலை போலீஸார் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்வதற்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்கு பதிவுசெய்த மண்டையூர் காவல் நிலைய போலீஸார், கிறிஸ்டியைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Next Story

தேநீர் மொய் விருந்து! தாய்மார்களுக்கு உதவிய சிவக்குமார்!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

puthukottai tea stall owner helped 11 women in his village

 

கஜா புயலில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உட்பட பல மாவட்டங்களில் கோடிக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தது. மின்சாரம் இல்லை தண்ணீர் இல்லை மொத்த விவசாயமும் காணாமல் போய் இருந்த நேரம். விவசாயிகள், பொதுமக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் இழந்து நின்ற நேரத்தில் அரசு, தனியார் உதவிகளை எதிர்நோக்கி இருந்தனர். அப்போது வங்கிகள், சுய உதவிக்குழு கடன், இன்ன பிற கடன்களை கட்ட நெருக்கடி கொடுத்தது. 

 

அப்போது தான், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமத்தில் டீ கடைக்காரர் சிவக்குமார், ‘எனது கடையில் டீ குடித்து கடன் வைத்துள்ள வாடிக்கையாளர்களான விவசாயிகள் கஜா புயலின் கோரபிடியில் சிக்கி தவிப்பதால் எனது கடைக்கு தரவேண்டிய கடன் தொகையை ரத்து செய்கிறேன்’ என்று போஸ்டர் எழுதி ஒட்டி சுமார் ரூ.30 ஆயிரம் ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தார். அதன் பிறகு இவரைக் காரணம் காட்டியே அரசியல் தலைவர்கள் மேடைகளில் பேசினர்.

 

அதன் பிறகு கடந்த கொரோனா காலத்தில் கிராமங்களில் உணவுக்காக தவித்த ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்களுக்காக இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்கு அரசி, பால் உணவுப் பொருட்களை வழங்கி வந்தார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்த போது நிதி திரட்டி வழங்கினார்.

 

தற்போது புதுக்கோட்டை கேப்பரை பகுதியில் பகவான் என்ற பெயரில் தேநீர் கடை நடத்திவரும் சிவக்குமார், கடந்த வாரம் நலிவுற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ டீ அருந்தி மொய் செய்யுங்கள் என்று தேநீர் மொய் விருந்து நடத்தினார். ஒரு நாள் முழுவதும் தேநீர் குடித்தவர்கள் தங்களால் இயன்ற தொகையை மொய் சட்டியில் போட்டுச் சென்றனர். பலர் இணையவழியிலும் பணம் அனுப்பினர். மாலையில் ரூ.62 ஆயிரம் மொய் வசூலாகி இருந்தது. அந்தப் பணத்தில் 12 வெள்ளாடுகள் வாங்கிய சிவக்குமார் அதே பகுதியில் ஆதரவற்ற, மிகவும் பின்தங்கிய நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து 11 பெண்களை அழைத்து 10 பெண்களுக்கு தலா ஒரு ஆடும், ஒரு பெண்ணுக்கு மட்டும் 2 ஆடுகளும் வழங்கினார். 

 

அப்போது அவர், “இது வெள்ளாடு ஆத்தா ஒரே நேரத்துல 2, 3 குட்டி  போடும். அடுத்த வருசம் நிறைய குட்டிகளோட உன் குடும்பம் நல்லா வரனும்” என்று சொல்லி ஆடுகளை பெண்களிடம் கொடுத்தார். “நீ நல்லா இருக்கனும் தம்பி” என்று சிவக்குமாரை வாழ்த்திவிட்டு சென்றனர்.

 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிலர், ‘போன மாசம் ஒருத்தர் கட்சிக்கொடி பறக்க காவித்துண்டோட வேன்லயே வந்தாரு. கூட்ட நெரிசல் கூட ஏற்பட்டுச்சு. தன் கட்சிக்காரர் கொடுத்த செம்மறிகிடா குட்டிய வாங்கி ஒரு அம்மாட்ட குடுத்து நிறைக குட்டி போடும்னுட்டு போனாரு. ஆனா நம்ம சிவக்குமாரு பரவாயில்ல சொந்த செலவுல மொய் விருந்து நடத்தி பல பேர்கிட்ட வசூல் பண்ணி 10 குடும்பம் வாழ ஆடு வாங்கி குடுத்துட்டார்’ என்று பேசிக் கொண்டனர்.