Skip to main content

முஸ்லிம்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று அதிகார வர்க்கம் துடிக்கின்றது - இயக்குநர் அமீர் பேச்சு!

Published on 18/02/2020 | Edited on 19/02/2020


நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை இயக்குநர் அமீரிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவருடைய அதிரடியான பதில்கள் வருமாறு,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராடங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகின்றது. தமிழகத்திலும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டபோது அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

மக்கள் விரும்பாத, மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் கருப்பு சட்டங்கள் வரும்போது அதனை எதிர்த்து மக்கள் எதிர்வினை ஆற்றுவது என்பது போராட்டங்கள் வாயிலாகத்தான். அதுவும் அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள வழிமுறையின் படிதான் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றது. சாதாரண குடிமகனுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளின் அடிப்படையில்தான் அது முன்னெடுக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது அதற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். அது இந்த குடியுரிமை சட்டத்தின் மூலம் இந்தியாவிலும் நடைபெற்று வருகின்றது. இந்த கருப்பு சட்டம் தேவையில்லாத ஒன்று. இது எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மக்கள் மீது திணித்ததே ஒரு வரலாற்றுப் பிழை. என்பிஆர் மற்றும் என்சிஆர் ஆகிய இரண்டும் இந்த நாட்டில் பூர்வகுடிகளாக இருக்கும் மக்களை அகதிகளாக்க கொண்டு வரப்பட்ட சட்டங்களாகவே நாங்கள் பார்க்கிறோம். 

என்ஆர்சி இந்தியாவில் அஸ்ஸாமில் மட்டும் தானே இருக்கிறது?

அஸ்ஸாம் இந்தியாவில் தானே இருக்கின்றது. எப்படி ஒற்றை வரியில் அதை கடந்து போக முடிகின்றது. அஸ்ஸாமில் மட்டும் தானே கொண்டு வந்தார்கள், 13 பேரை தானே சுட்டுக்கொன்றார்கள் என்று எப்படி எளிதாக கடந்து போகிறீர்கள். அஸ்ஸாமில் இருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா? 19 லட்சம் பேர் என்பது சிறிய எண்ணிக்கையா, ஒவ்வொருவராக எண்ணி பாருங்கள், அப்போதுதான் அவர்களின் எண்ணிக்கை என்பது உங்களுக்கு புரிய வரும்.  
 

jk



அஸ்ஸாமில் இந்த சட்டம் மூலம் கணக்கிடப்பட்டவர்களில் 9 லட்சம் பேர் மட்டுமே முஸ்லிம்கள். மீதி 10 லட்சம் பேர் இந்துக்கள். நிலமை அப்படியிருக்க தில்லியில் ஜாமியா கல்லூரி போராட்டமாக இருந்தாலும், சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டமாக இருந்தாலும், திருவல்லிக்கேணி என்றாலும் முஸ்லிம்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றது. இது முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதாக நினைக்கவில்லையா? 

ஆளும் பாஜக அரசு இதை முஸ்லிம்களுக்கு எதிரான, சிறும்பான்மை மக்களுக்கு எதிரான சட்டமாக மாற்றவே துடிக்கின்றது. அதுவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அதனை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிடுகின்றது. அதில் ஓரளவு அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறது. மத்திய அரசு விரும்புவதும் அதைத்தான். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான சமூகத்தை இந்துக்களாகவும், முஸ்லிம்களாகவும், கிருஸ்துவர்களாகவும் பிரிக்க வேண்டும் என்பதே அதனுடைய எண்ணமாக இருக்கின்றது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டிய பாதையில்தான் ஆளும் பாஜக அரசு பயணிக்கின்றது. இங்கே போராடி கொண்டிருக்கின்ற மாணவர்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகள் அனைத்தும் அனைத்து சமூகத்துக்காகவும் தான் சேர்ந்து போராடி கொண்டிருக்கிறார்கள். 

அஸ்ஸாமில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் தான் தற்போது அகதிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அந்த நிலை நாளை தமிழகத்திற்கு வரக்கூடாது என்றுதான் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம். ஆளும் பாஜக அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் இந்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு அதனை மக்கள் மனதில் விதைக்கப்பார்க்கிறார்கள். ஆனால் இது ஒட்டுமொத்த மக்களுக்கான பிரச்சனையாகவே நாங்கள் பார்க்கிறோம். இதை முஸ்லிம்கள் பிரச்சனை என்று குறுகிய எண்ணத்தில் பார்ப்பதே முற்றிலும் தவறான ஒன்றாகவே நாங்கள் கருதுகிறோம்.

 


 

Next Story

குடியுரிமை திருத்தச் சட்டம்; இந்திய அரசுக்கு தாலிபான் அறிவுறுத்தல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Afghanistan has advised that the CAA should be implemented on a non-religious basis

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 11 ஆம் தேதி அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார்.  

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மதவேறுபாடு இன்றி அமல்படுத்தவேண்டும் என தாலிபான் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  தாலிபான் அரசின்(ஆப்கானிஸ்தான் அரசு) அரசியல் தலைமை அலுவலக தலைவர் சுகைல் ஷாகீன், “இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவில் புதிதாக அமல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத வேறுபாடு இன்றி அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சுதந்திரமாக, பாதுகாப்பாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.