Advertisment

அண்ணே தினகரன் சரிப்பட்டு வரமாட்டார், நாமெல்லாம் தி.மு.க.வுக்குப் போயிரலாம்!

மே 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்களை, எம்.பி. தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போதே அறிவித்தார் மு.க.ஸ்டாலின். சூலூரில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 22-ஆம் தேதி அ.ம.மு.க.வின் வேட்பாளர்களை அறிவித்தார் தினகரன். ஆனால் ஆளும்கட்சியான அ.தி.மு.க.விலோ நான்கு தொகுதிகளுக்கும் விருப்ப மனு, நேர்காணல் என சீன்கள் ஓடிக்கொண்டிருந்தன. முதல்வர் பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அமர்ந்து, யாரை வேட்பாளராக அறிவிப்பது என கட்சி நிர்வாகிகளிடம் சீரியசாக டிஸ்கஸ் பண்ணினார்கள்.

Advertisment

ops eps

இந்த சீரியஸ் டிஸ்கஸனுக்குப் பின்னணியில் செம சீரியஸான, காரசாரமான மேட்டர் ஒன்று நடந்துள்ளது. இந்த மேட்டரின் பின்னணியில் இருந்தவர் மாஜி மந்திரியும் முன்னாள் மேயருமான செ.ம.வேலுச்சாமிதான். ஜெயலலிதா ஆட்சியின் போது, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் வீட்டுவசதித்துறை, தொழில் மற்றும் வணிகவரித்துறை, கூட்டுறவுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் இருந்தவர் வேலுச்சாமி. கோவை மாநகராட்சியின் மேயராகவும் கோலோச்சியவர் வேலுச்சாமி.

Advertisment

velumani

ஜெ. மறைவுக்குப் பின் சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ். பக்கம் உறுதியாக நின்றார்கள் செ.ம.வேலுச்சாமியும் அவரது ஆதரவாளர்களும். ஜெ.வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வேலுச்சாமியும் குரல் கொடுத்தார். பிறகு, இ.பி.எஸ்.சுடன் கைகோர்த்துக் கொண்டு ஓ.பி.எஸ். துணை முதல்வரானதும் தரமான, சிறப்பான எதிர்காலம் இருக்கும் என நம்பினார் வேலுச்சாமி.

velusamy

கோவை எம்.பி. தொகுதிக்கு சீட் கேட்டுப் பார்த்தார், கிடைக்கவில்லை. பா.ஜ.கவுக்குப் போய்விட்டது. வேலுச்சாமிக்கு சீட் கிடைக்கவிடாமல் பா.ஜ.க.வுக்கு சீட் கிடைப்பதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டவர் அமைச்சர் வேலுமணி. சரி கொஞ்சம் காத்திருப்போம் என வேலுச்சாமி நினைத்த போதுதான் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மறைந்தார். வேலுச்சாமியின் சொந்த ஊர் சூலூர் என்பதால், அவருக்குத்தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் செ.ம.வின் ஆதரவாளர்கள்.

stalin

சென்னைக்கு போய் இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் சூலூர் தொகுதிக்கு சீட் கேட்டார் வேலுச்சாமி. அதற்கும் பிரேக் போட்டார் அமைச்சர் வேலுமணி. இனிமேல் சீட் கிடைக்காது என நிச்சயமாக தெரிந்ததும் நேரடியாக இ.பி.எஸ்.சிடம் போனார். “இந்தக் கட்சிக்காக எவ்வளவோ பாடுபட்டிருக்கேன், ஜெயிலுக்குப் போயிருக்கேன். கட்சியில படிப்படியா முன்னுக்கு வந்தவன். எனக்கு சீட் கொடுக்கக் கூடாதுன்னு யார் சொன்னாலும் கேட்பீங்களா? என்னை கேவலப்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டீங்க. நான் இப்ப கிளம்பிப் போறேன். நான் போனதும் என்னை சமாதானப்படுத்தணும்னு நினைச்சு, சூலூர் வேட்பாளரா என்னை அறிவிச்சீங்கன்னா, நான் வேட்பாளர் இல்லைன்னு பத்திரிகைகாரங்களை கூப்பிட்டு சொல்லிருவேன். அப்புறம் நீங்க ரெண்டு பேரும் அசிங்கப்பட வேண்டியிருக்கும்''’என சரவெடியாய் வெடித்ததும், அருகில் இருந்த ஓ.பி.எஸ். கிறுகிறுத்துப் போனார். கோவை வட்டாரத்தில் தன்னை மீறி மீண்டும் ஒரு அ.தி.மு.க. புள்ளி உருவாகக்கூடாது என நினைக்கும் வேலுமணிக்கு வெளிப்படுத்த முடியாத உற்சாக மனநிலை.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

செ.ம.வேலுச்சாமியிடம் அவரது ஆதரவாளர்கள், "அண்ணே தினகரன் சரிப்பட்டு வரமாட்டார், அதனால நாமெல்லாம் தி.மு.க.வுக்குப் போயிரலாம்'' வற்புறுத்தி வருகிறார்கள். இது உண்மையா என தெரிந்துகொள்ள செ.ம.வை நாம் தொடர்புகொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப். செ.ம.வேலுச்சாமி அல்லது மாதப்பூர் பாலு ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் என அ.தி.மு.க.வினர் நினைத்துக்கொண்டிருந்தபோதுதான், யாருமே எதிர்பார்க்காத வி.பி.கந்தசாமியை களமிறக்கியிருக்கிறார்கள் இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பொள்ளாச்சி தொகுதியின் எம்.பி.யாக இருந்த சுகுமார் அ.ம.மு.க.வின் வேட்பாளர். இந்த சுகுமார்தான் நாடாளுமன்றத்தில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாக கேள்வி கேட்க, லஞ்சம் வாங்கும் போது வீடியோவில் சிக்கியவர். சூலூர் களம் சூடு பறக்கிறது.

MLA pollachi s.p.velumani sulur velusamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe