Advertisment

டெல்லி யாருக்கு? அமித்ஷா Vs கெஜ்ரிவால் உச்சக்கட்ட மோதல்!

ஒரு கோடியே 43 லட்சம் வாக்காளர்களையும் எழுபது சட்டமன்றத் தொகுதி களையும் கொண்ட தலைநகர் டெல்லிக்கு பிப்.8-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும்கட்சியான ஆம் ஆத்மியை எதிர்த்து பா.ஜ.க.வும் காங்கிரசும் வரிந்துகட்டுகின்றன. எனினும், டெல்லி தர்பாரை கைப்பற்றப்போவது அரவிந்த் கெஜ்ரிவாலா? அமித்ஷாவா? என்பதே கள நிலவரம்.

Advertisment

arvind kejriwal

போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, சீரான குடிநீர், தடையின்றி மின்சாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் அண்மைக் காலங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில்... டெல்லியில் பெரும்பான் மையினராக கோலோச்சும் பூர்வாஞ் சல்ஸ், பஞ்சாபிகள், முஸ்லிம்கள் ஆகிய 3 சமூகத்தினர்தான் தேர் தலின் முடிவைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

Advertisment

மிகப்பெரிய வாக்கு வங்கியை வைத்திருக்கும் பூர்வாஞ்சல்ஸ் சமூகத்தினர், கிழக்கு உத்தர பிரதேசம், பீஹார், ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்து டெல்லியில் குடியேறியவர்கள். இவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம். மொத்த முள்ள 70 தொகுதிகளில் பாட்லி, பாலம், ஆதர்ஸ் நகர், குண்டலி, திரிலோக்புரி, விகாஷ்புரி, ரித்வாலா, புராரி, உத்தம்நகர், பாடார்பூர், சங்கம் விஹார், லஷ்மி நகர், பட்பர் கஞ்ச், கரவால் நகர், கிராரி உள் ளிட்ட 25 தொகுதிகளில் வலிமை யாக இருக்கிறார்கள் பூர்வாஞ்சல்ஸ்.

வாக்காளர்களில் ஏறத்தாழ 35 சதவீதம் இருக்கும் பஞ்சாபிகள், டெல்லி பிரதேசம் முழுவதும் பரவியிருப்பினும் 15 தொகுதிகளில் 20 சதவீதமாகவும், 8 தொகுதிகளில் அதைவிட கூடுதலாகவும் இருக்கின்றனர். பூர்வாஞ்சல்ஸுக்கு இணையாக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் பஞ்சாபிகள்.

 narendra modi - amit shah

2011-ல் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, டெல்லி வாக்காளர்களில் 13 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். சாந்தினி சவுக், பாலிமாரன், சீலாம்பூர், மாட்டியாமகால், ஓக்லா ஆகிய 5 தொகுதிகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள முஸ்லிம்கள், 10 தொகுதிகளின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். முஸ்லிம்கள் அடர்த்தியாக உள்ள இந்த 5 தொகுதிகள்தான் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான போராட்டக்களமாக மாறியிருக்கிறது.

15-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சீக்கியர்களின் வாக்குகளும் கணிசமாக இருப்பதை மூன்று கட்சிகளுமே குறி வைத்துள்ளன. குறிப்பாக, ரஜோரி கார்டன், ஹரிநகர், ஷாதாரா, கல்காஜி ஆகிய 4 தொகுதிகள் சீக்கியர்களின் ஆதிக்கத்தில் உள்ளன.

டெல்லி தேர்தலை அலசிக்கொண்டிருக்கும் தேர்தல் வல்லுனர்களிடம் விவாதித்தபோது, ‘""டெல்லியில் உயர்சாதி இந்துக்கள் 46 சதவீதம் பேர் இருக்கின்றனர். அண்மையில், வளர்ச்சியடையும் சமூகங்களின் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கணக்கின்படி, டெல்லி வாக்காளர்களில் பிராமணர்கள் 12%, பஞ்சாபி காத்ரிஸ் சமூகம் 7%, ராஜ்புத் சமூகம் 7%, ஜெயின் சமூகம் 6%, பனியா சமூகம் 6%, மற்ற உயர் சாதியினர் பரவலாக 8 சதவீதமும் என உயர்சாதி இந்துக்கள் 46 சதவீதம் இருக்கிறார்கள்.

பிரதான கட்சிகள் தொடங்கி போட்டியிடும் கட்சிகள் அனைத்துமே ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கின்றன. முதல்வர் கெஜ்ரியை எதிர்த்து பா.ஜ.க.வும், காங்கிரசும் தங்களுடைய முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறியபடியே ஓட்டு வேட்டையாடி வருகின்றன. 2015 தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை கெஜ்ரிவால் கைப்பற்றிய நிலையிலாவது, எதார்த்த அரசியலை ஆய்வு செய்து டெல்லியில் கெஜ்ரிக்கு இணையான முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க.வும், காங்கிரசும் உரு வாக்கியிருக்க வேண்டும். இந்தச் சூழலில்தான், கெஜ்ரியை வீழ்த்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரடி களத்தில் இறக்கிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. அதனால்தான் போட்டி உச்சத்தில் இருக்கிறது'' என சுட்டிக்காட்டு கிறார்கள்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த ஜே.பி.ஜி. பேக் நிறுவனத்தின் ஆளுமை பிராண்டிங் மற்றும் தேர்தல் வியூக வல்லுநர் குழுவினர் கெஜ்ரிவாலை சந்தித்து சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசியுள்ளனர். இந்தச் சூழலில், இந்நிறுவனத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி யிடம் டெல்லி தேர்தல் குறித்து பேசியபோது, ""எங்கள் குழு கடந்த இரண்டு வாரங்களாக டெல்லி தேர் தல் களச் சூழலை குறித்து ஆய்வு செய்து வருகிறது. கட்சிகள், தலைவர்கள், வேட்பாளர்கள், தேர்தல் யுக்திகள் உள்ளிட்ட வற்றை ஆய்வு செய்திருக் கிறோம். இந்த தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்கிற கருத்துக் கணிப்பு கோணத்தைத் தாண்டி, மக்கள் தலைவராக வெல்லப்போவது அமித்ஷாவா, கெஜ்ரிவாலா என்பதாகத்தான் களம் இருக்கிறது. தலைவர்களுக்கான ஆளுமை, வளர்ச்சி, வர்க்கம், சாதி, தேசிய வாதம், மதம், பொதுப்பிரச்சினைகள் என ஆம் ஆத்மியும், பா.ஜ.க.வும் கையிலெடுத்து சுதியைக் கூட்டி யிருக்கும் அதிரடி தேர்தல் களமாகவே இருக்கிறது டெல்லி.

john

ஜான் ஆரோக்கியசாமி

மக்களுக்கான திட்டங்களை கெஜ்ரிவால் செயல்படுத்தியிருந் தாலும் எதிர்க்கட்சிகளின் உணர்ச்சிப் பூர்வமான பிரச்சினையில் சிக்காமல், தன்னுடைய பிரச்சாரத்தை வளர்ச்சி சார்ந்த வியூகமாகவே அமைத்துக்கொண் டிருக்கிறார். அவருடைய ஆட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் எதிர்க்கட்சிகளை அச்சமடைய வைத்திருக்கிறது. அதனால், நேரடி தேர்தல் களத்தில் குதித்து தேசியவாத சுருதியை அதிகரித்து வாக்குகளை வளைக்கும் அமித்ஷா வின் வித்தைகள் ஆம் ஆத்மியை அதிர வைக்கின்றன. போட்டி சரிசமமாக இருப்பதால் வெல்வது யார் என கணிப்பது கடினம்''’என்கிறார் அழுத்தமாக.

ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க.வின் பலம், பலவீனம், தேர்தல் வியூகம், பிரச்சார யுக்திகள் என ஆராய்ந்தபோது, ""ஊழலை ஒழிப்போம்; தூய்மையான அரசியல்; வெளிப் படையான நிர்வாகம் என்பதை பிரச்சார யுக்தியாக பயன்படுத்தி 2015-ல் 55 சதவீத வாக்குகளுடன் இமாலய வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றினார் கெஜ்ரி வால். அவருடைய யுக்தியில் காங் கிரஸ் வீழ்ந்தது. "மத்திய ஆட்சிக்கு அடிபணியமாட்டேன்' என்ற அவரது சூளுரையை முஸ்லிம்களும் ஆதரித்ததால் கெஜ்ரிக்கு இமாலய வெற்றி கிடைத்தது.

பொதுவாக, உயர்சாதி இந்துக்களின் ஆதரவு பா.ஜ.க.வின் பலமாக இருக்கும் நிலையில், காங்கிரசிடமிருந்த பூர்வாஞ் சல்ஸ், பஞ்சாபி, முஸ்லிம் சமூகத் தின் ஆதரவு கெஜ்ரிவாலுக்கு மாறியதால்தான் மெகா வெற்றி அவருக்கு கிடைத்தது.

அந்த வகையில், தான் முன்னிறுத்திய முழக்கங்களுக்கு மாறாக ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தாமல் மோடி மற்றும் டெல்லியின் லெப்டினென்ட் கவர்னரோடு மல்லுக்கட்டு வதையும், தேசியவாதம் மற்றும் இந்துத்வாவை எதிர்ப்பதிலுமே தனது பலத்தை செலவிட்டதால் 2017-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 26 சதவீதமாகவும், 2019 லோக்சபா தேர்தலில் 18 சதவீதமாகவும் கெஜ்ரியின் செல்வாக்கு சரிந்துபோனது. இந்த சரிவு பா.ஜ.க.வுக்கு சாதகமானது.

இதனை உணர்ந்த கெஜ்ரிவால், லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மோடியை எதிர்ப்பதை கைவிட்டதுடன், இந்துக்களின் எதிரி நானில்லை என்பதை நிலைநிறுத்தி வருகிறார். இதன் மூலம் உயர்சாதி இந்துக்களின் ஆதரவைப் பெற, மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி, "ஐந்தாண்டுகளில் சொன்னதைச் செய்தேன்; வளர்ச்சி மேலும் தொடர மீண்டும் எனக்கு வாய்ப்புத் தாருங்கள்' என்பதையே தனது தேர்தல் யுக்தியாக பயன்படுத்துகிறார் கெஜ்ரி.

DELHI

தூய்மையான இலவச தண்ணீர், இலவச மின்சாரம், தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, இலவச பள்ளிக் கல்வி, பெண்களுக்கு இலவச பயண வசதிகள் என முன்னிறுத்துவதும், தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பளித்திருப்பதும் ஆம் ஆத்மிக்கு பலம். ஆனால், "மத்திய அரசுக்கு பணியாமல் மக்கள் சேவை செய்வேன்' என முழக்கமிட்ட கெஜ்ரி, 370-வது சட்டப் பிரிவு நீக்கம், சி.ஏ.ஏ.வை எதிர்க்காதது, ஜே.என்.யு. விவகாரத்தில் தலையிடாதது உள்ளிட்டவற்றால் சிறுபான்மையினர் மற்றும் மாணவர்களின் ஆதரவை இழந்திருப்பது அவருக்கு பலவீனம்.

"ஊழலற்ற ஆட்சி' என்றவரின் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது' என்கிற பிரச்சாரத்தை கையிலெடுத் துள்ளது பா.ஜ.க. உயர்சாதியினரின் ஆதரவை முழுமையாகப் பெற பெரும்பான்மை சமூகத்தின் எதிர் பார்ப்புகளை முன்னெடுக்கிறது. "மத்தியிலும் டெல்லியிலும் ஒரே ஆட்சி இருப்பதுதான் அனைத்து வளர்ச்சிக்கும் நல்லது' என்கிற யுக்தியை கையாளுகிறது பா.ஜ.க.

முந்தைய தேர்தலில் கெஜ்ரிக்கு ஏற்பட்ட சரிவும், உயர்சாதியினரின் முழுமையான ஆதரவும், சிறுபான்மையினர் கெஜ்ரியை கைவிட்டிருப்பதால் (வாக்குகள் காங்கிரசுக்கு இடமாறும்) ஏற்பட்டுள்ள சாதகமும் தங்களுக்கு பலம் என நம்புகிறது பா.ஜ.க. ஜே.என்.யு. விவகாரம், சிறுபான்மையினரின் எதிர்ப்பு, டெல்லி பா.ஜ.க.வில் உள்ள கோஷ்டி பூசல்மற்றும்முதல்வர் வேட்பாளர்உள்ளிட்ட பல காரணிகள் பா.ஜ.க.வுக்கு எதிர்வினையாற்றுகின்றன''’என்கின்றனர் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.

aap Amit shah Arvind Kejriwal assembly Delhi Election
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe