style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை அண்ணா நினைவிடத்தின் அருகே அமைந்துள்ள திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் 3வது நாளாக திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 3வது நாளான இன்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அக்கட்சியின் தொண்டர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 3வது நாளான இன்று கலைஞரின் நினைவிடம் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.