Advertisment

"29 வருஷமா கைக்காச போட்டுத்தான் கட்சி நடத்துறோம்; தடுத்து பார்த்தேன் கட்சிகாரங்க அவரை விடமாட்டேங்கிறாங்க..." - வைகோ

l;'

தமிழக அரசியலை தன் பேச்சால் இன்றளவும் கட்டிப் போட்டிருக்கும் வைகோ தன்னுடைய இளம் வயது முதலே அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பேச்சு, நடை, உடை என்று எல்லாவற்றிலுமே தனித்துவமாய் இருந்து வரும் அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துதேர்தலை சந்தித்தார். இந்நிலையில் அவர் நம்முடைய நக்கீரன் சரித்திரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த கூட்டணி தொடர்பாக தன்னுடைய கருத்து பற்றிப் பேசினார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " அரசியல் ரீதியா சரியான முடிவு தான் எடுத்திருக்கிறோம். திமுகவோட அலையன்ஸ் வச்சது தான் சரியான முடிவு. நாங்க அதிமுகவோட, பாஜகவோட, காங்கிரஸோட போக முடியாது. திமுக நான் இருந்த கட்சி. நான் 29 வருசம் பாடுபட்ட கட்சி. அதுல பழைய ஆளுங்க எல்லாரும் இன்னிக்கும் என் மேல பாசமா இருக்காங்க.. இப்ப உள்ள 25,30 வயது பையனுங்களுக்கு என்னைத் தெரியாது. 60 வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாருக்கும் இப்பவும் என் மேல பற்றுதல் இருக்கு. தலைவரும் நல்லா மதிக்கிறாரு. பிரியமா இருக்காரு. நான் அதிகமா ஆசைப்படல. கட்சிய நடத்தி கொண்டு போகணும். எங்க கிட்ட பொருளாதார பலம் இல்ல. எங்கயும் போய் நிதி கொடுன்னு கேட்கக்கூடிய எடத்துல எங்காளுங்க இல்ல. கைக்காச செலவழிச்சி தான் 29 வருசம் என் கூட நடந்திருக்காங்க. பத்திரிக்கைல ஒருபக்க விளம்பரம் கொடுக்கனும்னா காசு வேணும். அதுக்கு கூட வழியில்ல. இது தான் இன்னிக்கு எனக்கு இருக்கக் கூடிய பொருளாதார பலகீனம். ஆனா தொண்டர்கள் உறுதியா இருக்காங்க. நாம எடுத்த முடிவு சரியான முடிவுதான்னு.

Advertisment

துரை.வைகோ அரசியலுக்கு வராருங்கிறதே எனக்கு தெரியாது. கரோனாவால ஒரு வருசம் உடல் நலம் சரிஇல்லாம நான் எங்கயும் மூவ் பண்ண முடியாம இருந்தப்போ அவர கல்யாண, துக்க வீடுகளுக்கும் போற வழியில கொடியேத்துறத்துக்கும் எங்க மாவட்ட செயலாளர்கள் அழைச்சிட்டுப் போயிருக்காங்க. அவர் இந்த மாதிரி ஈடுபாடோட போறாருங்கிறது எனக்கு தெரியாது. நான் அதை என்கரேஜ் பண்ணவும் இல்ல. என்னோட கஷ்டங்கள் என்னோட போகட்டும். அரசியல் அவ்வளவு கஷ்டங்கிறதால அவர் வர்றத நான் வரவேற்கல. கட்சிக்காரங்களா விருப்பபட்டு அவர் வந்தா எங்களுக்கு உற்சாகமா இருக்கும்னு வற்புறுத்தி அழைச்சிட்டு போறாங்க. நான் தடுத்துப் பார்த்தேன். தடுக்க முடியல. அதான் நடக்குது" என்றார்.

vaiko
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe