Advertisment

’’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ் 

c

Advertisment

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 195 நாடுகளை ஆட்டிப் படைக்கிறது. 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த வைரசினால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அனைத்தும் நாடுகளும் மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ள நிலையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் 144 உத்தரவு போடப்பட்டுள்ளது.

t

Advertisment

புதுச்சேரியில் இன்னும் தீவிரமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குஜராத்தில் வீட்டை விட்டு வெளியே பைக்கில் செல்வோரை போலீசார் சரமாரியாக அடித்து எச்சரிக்கை செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இந்த தீவிரம் இல்லை என்றாலும், கெடுபிடிகள் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில், இந்த 144 கால கட்டத்தில் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்வியை, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி முன் வைத்தபோது, அவர் நக்கீரனுக்கு அளித்த பதில்:

’’உங்களுடைய சுதந்திரம் தட்டிப்பறிக்கப்பட்டதாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களை பாதுகாக்க அரசு விரும்புகிறது.

நாலுபேருக்கு மேல் கூடினால் கட்டாயமாக அவர்களை கலைப்பதற்கு அதிகாரம் இருக்கிறது. அன்றாடம் காய்ச்சிகள் உணவு இல்லாத நிலையில் சோர்ந்து உட்கார்ந்து இருக்கிறார்கள் என்றால், இளைஞர்கள் சிலர் உணவகங்களில் உணவுப்பொட்டலங்களை வாங்கி டூவீலரில் சென்று அவர்களுக்கு கொடுத்து உதவி, நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். இந்த சாப்பாட்டை வாங்கி கொடுப்பதற்காக அந்த இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாக வேண்டும். டூவீலரில் சென்றாக வேண்டும். அவர்களைப்போய் மிரட்டினால் சரியாகாது. அவர்களை தடுத்து நிறுத்தி தகராறு செய்வது சரியல்ல.

நோய் பரப்புவது அவர் நோக்கமல்ல; மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் செயல்படுவதை புரிந்துகொள்ள வேண்டும். கடைகள் இல்லை. வேலையும் இல்லை. வயிற்றுக்கு இது புரியுமா? பசியால் இருக்கும் இரவலர்களுக்கு உணவு கொடுத்தாக வேண்டிய மனிதாபிமானத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த ஒரு கூர்மையான பகுத்தறிவு காவல்துறையில் இருப்போருக்கு தேவை. காவல்துறையில் பயிற்சியின்போதே கூட்டமாக கூடுதல், கூட்டத்தை கலைத்தல் என்று வரும்போது, அது திருமணம் கூட்டமா? கோயில் கூட்டமா? போராட்ட கூட்டமா? கலவர கூட்டமா? என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு செயல்பட அறிவுறுத்தப்படும்.

கலவரம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் கூட்டத்தைத்தான் அவர்களை கலைக்கும் நோக்கில் முதலில் எச்சரிக்கை கொடுத்துவிட்டு, தடியடி நடத்துவதோ, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசுவதோ போன்ற நடவடிக்கைகள் எடுக்கலாம். அதையும் மீறும்போதுதான் துப்பாக்கிச்சூடு நடக்கும். சூழ்நிலைகளை எடைப்போட்டு துப்பாக்கி சூடு நடத்தலாம் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டால் துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்.

கலவரக்காரர்கள் அமைதிக்காக்கும் மக்களுக்கு ஆபத்தையும், அவர்கள் பொருட்களுக்கு சேதாரத்தையும் உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறார்கள் என்பது காவல்துறையின் மனசாட்சிக்கு தெரியவரும் போது கலவரக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்’’என்று தெரிவித்தார்.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe