கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவரின் உடலை மின்மயானத்தில் எரிக்க எதிர்ப்பு தெரிவித்தால் சென்னை அருகே பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அந்த மருத்துவரின் உடல் மீண்டும் மருத்துவமனையின் பிணவறையிலேயே வைக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/as21.jpg)
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அந்த மருத்துவருக்கு வயது 60. நெல்லூரைச் சேர்ந்த அவர் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வந்தார். அவருக்கும், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், அவரிடம் பணிபுரியும் டிரைவர் ஆகியோருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவருக்கு மட்டும் உடல்நிலை மோசமாக ஆனநிலையில் கடந்த 4-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/as22.jpg)
மருத்துவர் உயிரிழந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் மருத்துவரின் உடலை சென்னையிலேயே தகனம் செய்துவிடும்படி கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவரின் உடலை தகனம் செய்ய அம்பத்தூரில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனை ஊழியர்கள் மின்மயானத்தில் உள்ளவர்களிடம் பேசினார்கள். அப்போது மின்மயானத்தில் உள்ளவர்கள், தங்களுக்குப்போதுமான கரோனா பாதுகாப்புகவச உடைகள் இல்லை என்பதால், மருத்துவர்களின் உடலை எரிக்க மறுத்துள்ளனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், கரோனா பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கொண்டு வந்தவர்களைப் பார்த்து, இந்த மின்மயானத்தில் உடலைத் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவரின் உடலை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/as23_0.jpg)
தகவல் அறிந்து அம்பத்தூர் காவல்நிலைய போலீசார் அங்குச் சென்றனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் மருத்துவரின் உடலைத் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மருத்துவரின் உடலை அங்கேயே வைத்துச்சென்றது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவரின் உடலை மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவந்து பிணவறையிலேயே வைக்கப்பட்டது.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அம்பத்தூரின் மருத்துவரின் உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்பு தெரிவித்தது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்வது பற்றி அரசு ஊழியர்களுக்கு எல்லாமே தெரியும். அதேபோல தனியார் மருத்துவமனைகளுக்கும் அந்த வழிமுறைகள் கொடுத்திருக்கிறோம். அரசாங்கத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வந்தது இல்லை. இன்று தனியார் மருத்துவமனையில் அவசரமாகப் போயுள்ளனர். தலைமைச் செயலாளர் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும், கலெக்டர்களுக்கும் ஏற்கனவே இதுபோன்று வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மீண்டும்சொல்லியிருக்கிறார். இனி அதுபோல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)