Advertisment

மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதா? நடிகர் ராஜ்கிரண் கண்டனம்

கரோனா நோய்பயத்தில்,கரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது, அந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இறக்கும்மருத்துவர்களின்உடலை அடக்கமோ, தகனமோ செய்ய விடாமல் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள்பெருகி வருகின்றன. இதுபோல் மருத்துவர்களுக்கு எதிராக அரங்கேறிவரும் மனிதநேயமற்ற வன்முறைகளைக் கண்டித்தும், தங்கள் சேவையை உணர்த்தியும், இந்திய மருத்துவர்கள் வரும் 22-ந் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்வை அரங்கேற்ற இருக்கிறார்கள்.

Advertisment

rrr

கரோனா பீதியின் பெயரால் நிகழ்த்தப்படும் இதுபோன்ற வன்முறைகளைப் பலரும் கண்டித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ராஜ்கிரண்...

“எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது,

மிகுந்த வேதனையும்மன உளைச்சலும் ஏற்படுகிறது.

தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர்

யாரைப் பற்றியும் கவலைப்படாமல்,

"தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே"

என்ற ஒரே லட்சியத்தோடு,

சமூகப் பொறுப்புணர்வோடு,

தம் உயிரையும் பணயம் வைக்கும்

புனிதமான மருத்துவர்களுக்கு

நாம் செய்யும் கைமாறு இதுதான், என்றால்,

 nakkheeran app

இஸ்லாமியனாகபிறந்த ஒரே காரணத்தால்,

வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த

ஒரு மாற்றுத்திறனாளிசிறுவனின் உடலை,

புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி

பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்ததுதான்,

இந்த நாட்டில் சட்டம், என்றால்,

உலக நாடுகளின் பார்வையில்,

நம் நாடும், தேசமும் மிகக்கேவலப்பட்டு நிற்கும்.

இதைப்போன்ற கொடுமைகளுக்கு,

கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத

ஆட்சியாளார்கள்,

மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்...”

என்று தெரிவித்திருக்கிறார்.

Doctors corona virus actor Rajkiran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe