ADVERTISEMENT

’’சட்டம் போட்ட முதல்வரை இங்க வரச்சொல்லுங்க...’’-வாய்ச்சவடால் விட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட இளைஞர்

02:38 PM Mar 27, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு போலீஸார் வசமாக "கவனித்து" அனுப்புகின்றனர்.

ADVERTISEMENT

தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் போலீஸார், லத்தியை பலமாகவே சுழற்றுகின்றனர். தமிழகத்தில் போலீஸார் எச்சரித்து அனுப்புவதோடு, தோப்புக்கரணம் போடுதல், இனிமேல் வெளியே சுற்ற மாட்டேன் என உறுதிமொழி வாங்குதல், தவளை மாதிரி குதிக்க வைத்தல், இருசக்கர வாகனத்தின் டயர் காற்றை பிடுங்கி விடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் 'லத்தி' கவனிப்பும் இருக்கின்றன. இந்நிலையில், சமூக வலைத் தளங்களில் இளைஞர் ஒருவர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்வதும், காவல் நிலைய லாக்கப்பில் அவரே பம்மிப் பேசுவது போன்ற வீடியோவும் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரித்தோம்.

அந்த இளைஞர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசர்குளம் கிராமத்தை சேர்ந்தவர். நேற்று இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அறந்தாங்கி மருத்துவமனை அருகே போலீஸார் மடக்கினர். தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்று அறிவுரை வழங்கினர்.

அப்போது, "இது என் ஊர்... என் கோட்டை..அப்படித்தான் ஊர் சுற்றுவேன். ஊர் சுற்றக்கூடாதுன்னு ஆர்டர் போட்ட முதலமைச்சரை இங்க வரச்சொல்... ஓட்டுக் கேட்கும்போது மட்டும் அம்மா, தாயேன்னு வந்தாருல்ல...அவரை இங்க வரச் சொல்லுங்க..." என கொஞ்சம் ஓவராக பேசி இருக்கிறார்.

போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வசமாக கவனிக்க...இப்போது அய்யா சாமி, ஆளை விட்டாப் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT