கரோனா அதிதீவிரமாக பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் சூழலுக்கு,மக்கள் முழு ஒத்துழைப்பு தந்து வந்தாலும், அதனை மீறுகிற செயல்களும் நடந்து வருவதாக மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் தந்தபடி இருக்கிறது.

Advertisment

888

ஆங்காங்கே, காவல்துறையினரை தாக்குவதும் நடக்கின்றது. போலீசார் கைகளை வெட்டிய சம்பவத்தையும் மத்திய உள்துறையால்ஜீரணிக்க இயலவில்லை. இதற்கிடையே, கரோனா பரவுதலை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளை சில அரசியல் கட்சிகள் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் மத்திய அரசுக்கு ரிப்போர்ட் தரப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில், மத்திய உள்துறை மற்றும்உளவுத்துறையின் உயரதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த ஆலோசனையில்,ஊரடங்கு சட்டத்திற்குப் பதிலாக, உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தலாம் என ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விவாதித்துள்ளார் அமித்ஷா. மேலும், ஜனாதிபதியின் ஆலோசனையும் பெறப்பட்டிருக்கிறது. அதனால், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை பிரதமர் அறிவிக்க வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் உளவுத்துறையினர்.