Skip to main content

"அண்ணா இறந்த தினத்தில்தான் சிம்பு பிறந்தார்.. இதிலிருந்து என்ன தெரிகிறது..." - தியேட்டர் வாசலில் கதகளி ஆடிய கூல் சுரேஷ்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

lk

 

 

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் நீண்ட தடைகளைத் தாண்டி நேற்று (25.11.2021) வெளியானது. படத்தைப் பார்த்த திரைப்பட நடிகர் கூல் சுரேஷ் இதுதொடர்பாக கூறியதாவது, " பல தடைகளைத் தாண்டி ‘மாநாடு’ திரைப்படம் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. மூன்று வருடம், இரண்டு வருடம் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் தற்போது பதில் கிடைத்துள்ளது. நான் படத்தைப் பார்த்துவிட்டேன். படம் மாஸா, சூப்பரா இருக்கு. வெங்கட் பிரவு சார் படத்தை அருமையாக எடுத்து முடித்திருக்கிறார். ஹரோயின் லட்டு மாதிரி இருக்கிறார். சிவா மாஸ்டர் அருமையாக பண்ணியிருக்கிறார்.

 

இனிமேல் அவர் ஹாலிவுட் படங்களுக்குத்தான் சென்று பணியாற்ற வேண்டும். அந்த அளவுக்கு அருமையாக செய்திருக்கிறார். துப்பாக்கி சுட்டபோதுதான் அன்றைக்கு எஸ்.ஜே. சூர்யா சொன்ன தீபாவளி மேட்டர் ஞாபகம் வருது. படத்தைப் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்கள். மியூசிக் படு சூப்பராக இருந்தது. படத்தில் பிஜிஎம் வரும் இடங்கள் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. வந்திருக்கும் ரசிகர்கள் சிம்புவுக்கா இல்லை யுவனுக்கா என்று சந்தேகப்படும் அளவிற்கு மிகச் சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தைப் பற்றி பலரும் பல கதைகளைச் சொல்லிவந்தார்கள். படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். இந்த நேரத்தில் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

பலரும் அவரிடம் சிம்புவை வைத்தா படம் பண்ணப் போகிறீர்கள் என்று அவரைக் குழப்பிப் பார்த்தார்கள். ஆனால் படம் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இதற்காக முதலில் நன்றி சொல்ல வேண்டும். இந்த ‘மாநாடு’ சாதாரண மாநாடு இல்லை, மாநகராட்சி மாநாடு, மதுரை மாநாடு, மெர்சலான மாநாடு, மங்காத்தா மாநாடு, மலேசியா மாநாடு. மற்ற படத்திலே இருந்து இரண்டு சீன் சுட்டிருக்கிறார்கள், அந்தப் படத்திலிருந்து இரண்டு சீன் எடுத்திருக்கிறார்கள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. சுடணும் என்று நினைத்தால் எஸ்.ஜே. சூர்யாதான் துப்பாக்கி வைத்து சுடணும். அப்படி படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

 

படம் அருமையாக இருக்கு. இந்த நேரத்தில் சிம்பு ரசிகர்களை எல்லாம் நான் பாதம் தொட்டு வணங்குகிறேன். சிம்புவை ஒன்று செய்ய முடியாது, அவர் ஒரு காட்டாறு. தொட முடியாது. சிம்பு எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. ஆனால் இந்தக் கஷ்டத்தை எல்லாம் பார்த்தால் நாம் ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்று தோன்றுகிறது. ட்விட்டரில் என் பெயரில் கணக்கு தொடங்கி தவறான தகவல்களைத் தெரிவிக்கிறார்கள். அண்ணா அவர்கள் பிப்ரவரி 3ஆம் தேதிதான் இறந்தார். சிம்பு அவர்கள் பிப்ரவரி 3ஆம் தேதிதான் பிறந்தார். இதிலேர்ந்து என்ன தெரியுது, அண்ணா அவர்கள் இறந்த பிறகு அவரின் ஆத்மா எங்கே வந்தது, நேரா எஸ்டிஆரிடம் வந்துவிட்டது. அதனால் அண்ணாவிடம் உள்ள நல்ல குணங்கள் அனைத்தும் சிம்புவிடம் வந்து சேர்ந்துள்ளது. எனவே அறிவில்லாமல் யாரும் ட்விட்டரில் பேச வேண்டாம்" என்றார்.


 

Next Story

'ரூ.1 கோடி...' - சிம்புவுக்கு கெடு விதித்த நீதிமன்றம்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

simbu corona kumar issue

 

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. 

 

இதையடுத்து வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், "கொரோனா குமார் படத்திற்காக சிம்புவுக்கு முன்பணமாக ரூ. 4.50 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனால் எங்கள் படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தில் ரூ.1 கோடி மட்டுமே சிம்புவுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் ரூ.1 கோடி ரூபாய் உத்தரவாதமாக சிம்பு செலுத்த வேண்டும். இந்த உத்தரவாதத்தை செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் மற்ற படங்களில் அவர் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டு செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். 

 


 

Next Story

''உண்மையிலேயே லைஃப்ல இது வித்தியாசமாக இருக்கு''-சிம்பு பேட்டி!

Published on 18/09/2022 | Edited on 18/09/2022

 

 "It's really different in life" - Simbu interview!

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

இந்நிலையில் இன்று வெந்து தணிந்தது காடு படக்குழுவினரின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர், கதாநாயகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, ''இந்த படம் எக்ஸ்பிரிமென்டலான படம். ரெகுலராக கமர்சியல் படங்களில் ஹீரோவோட பில்டப், சாங்ஸ் பர்பாமன்ஸ் எதுவுமே இந்த படத்தில் இல்லை. இது டோட்டலா ரொம்பவும் சீரியஸ் படம். தமிழில் இந்த மாதிரி ஒரு படம் ட்ரை பண்ணலாம்'னு கௌதமன் சார் சொன்னாரு. அது எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. இன்று அதனுடைய ரெஸ்பான்ஸ் ரிலீஸ் அப்புறம் பார்க்கும் பொழுது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை உண்மையிலேயே கொண்டு போய் சேர்த்தது நீங்க தான். உங்கள் எல்லாருக்கும் எனது நன்றி. இந்த படம் ஆரம்பிக்கும் போது என்கிட்ட வேல் சார் என்ன சொன்னாரோ படம் முடியிற வரைக்கும் அதே மாதிரி இருந்தாரு. நல்லபடியா படம் ரிலீஸ் ஆச்சு. ஏன் இந்த சந்தோஷம் என்றால் நான் அவ்வளவு வலிய பார்த்து இருக்கேன். நீங்க எல்லாருமே கூட இருந்து பார்த்திருக்கிறீங்க. அவ்வளவு கஷ்டத்தில் இருந்து, சினிமாவில் ஹீரோ டோட்டலா காலி ஆகி தெருவுக்கே வந்துருவாரு, அதுக்கப்புறம் ஒரு காயினை தூக்கிப் போட்டு அப்புறம் மெதுவா மேல வர மாதிரி, உண்மையிலேயே லைஃப்ல நடப்பது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது''என்றார்.