Skip to main content

திரும்பவும் விறகு அடுப்புக்கு போகசொல்கிறார் மோடி - குடும்ப தலைவிகள் கண்டனம்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
gas33கடந்த செப்டம்பர் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 858.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது, முந்தைய ஆகஸ்ட் மாத விலையைக் காட்டிலும் 30.50 ரூபாய் அதிகம். இந்த நிலையில் நடப்பு அக்டோபர் மாதத்திற்கு இந்த சிலிண்டர் விலை மேலும் 58 ரூபாய் அதிகரித்து, 916.50 ரூபாயாக எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ளன. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த புதிய விலை அமலில் இருக்கும்.
 

அதேபோல், டீக்கடைகள், உணவக தயாரிப்புக்கூடங்கள் போன்ற இடங்களில் வணிக பயன்பாட்டுக்காக உள்ள 19.2 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நடப்பு அக்டோபர் மாதத்தில் 1570 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 87 ரூபாய் அதிகமாகும். வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 320 ரூபாய் வரை மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுகிறது. காஸ் சிலிண்டர்கள் விலையேற்றத்தால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

geetha

                                                                                      கீதாஇளவரசன்''பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது சிலிண்டர் விலை சுமார் 350, 400க்கு தான் இருந்தது. மோடி அரசு வந்த பிறகு 2016ல் மார்ச்சில் 511 ரூபாய் வீட்டு உபயோக சிலிண்டர். இதிலே நேரடியாக வங்கிக்கே மானிய தொகை அனுப்புவதாக உறுதியளித்தார். எல்லாம் ஏமாற்று வேலையாப் போச்சிங்க. படிப்படியாக உயர்ந்து இப்போது சிலிண்டர் விலை 916 ரூபாய் 50 காசு. இது மட்டுமா சிலிண்டர் சப்ளை செய்பவர்கள் கூடுதலாக 70 ரூபாய் 80 ரூபாய் என வசூலிக்கிறார்கள். இதனால் இப்போது 1000 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்குகிறோம். இதற்க்கான மானியம் 421 ரூபாய் 79 காசு மத்திய அரசு வங்கியில் என் கணக்குக்கு செலுத்த வேண்டும். ஆனால் இப்போது எல்லாம் முறையாக மானியம் வங்கி கணக்குக்கு வருவதே இல்லை. எப்போதாவது தான் வரும் சிலமாதங்கள் வரவே வராது. நாங்கள் யாரிடம் போய் கேட்பது. இப்படி சிலிண்டரின் ஒட்டு மொத்த விலை எங்கள் கழுத்தை நெரிக்கிறது. மாதம் 200 ரூபாய்க்கு விறகு வாங்கி சமையல் செய்யலாம் போல் தோன்றுகிறது. மாதம் 800 ரூபாய் மிச்சப்படுத்த முடியும். மத்திய அரசு மீண்டும் விறகு அடுப்பெறிக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. ஒரு அரசாங்கம் சொன்ன திட்டத்தை முறையாக செய்யாமல் ஏமாற்றுகிறது. அவசர தேவைக்கும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சீக்கிரம் சமைத்து கொடுக்க உதவியாக உள்ளதால் தான் இதை கட்டிக் கொண்டு அழ வேண்டியுள்ளது'' என்கிறார் கடலூர் மாவட்டம் பட்டூரைச் சேர்ந்த குடும்ப தலைவி கீதாஇளவரசன்.


 

mariyammal

                                                                                         மாரியம்மாள்


ஈரோட்டைச் சேர்நத மாரியம்மாள், "நானூறு ரூபாய்க்கு வாங்குன சிலின்டரை இன்னிக்கு தொள்ளாயிரம் ஆயிரம்னு மூனு மடங்கு ஏத்திப்புட்டாங்க. மானியத்தை எங்க பேங்க் அக்கவுன்ட்டுல போட்டுடுவோம்னு சொல்லி ஏமாத்துறாங்க. உழைச்ச காசுல அரிசி, பருப்பு, சிலின்டர் வாங்கி சோறு தின்கறவனுக்கு தான் இந்த கஷ்டமெல்லாம் தெரியும். மக்கள் பணத்தை கோடி கோடியா கொள்ளையடிச்சு எல்லா விலையையும் ஏத்தி ஏழைகளை நடுத்தெருவுல விடும் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் தெரியுமா? ஊரை அடிச்சு உலையில போட்ட பாவிக" என்றார் ஆவேசமாக.

ஜீவா தங்கவேல், எஸ்.பி.சேகர், இளையராஜா


 

 

Next Story

இந்திய கிரிக்கெட் அணிக்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் பரிசு அறிவிப்பு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Announcement of prize for the Indian cricket team on behalf of Maharashtra govt

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று (04.07.2024)  டெல்லி வந்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தின் வெளியே திரளாகக் காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காலை உணவளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியிலிருந்து புறப்பட்டு மும்பை  வந்தடைந்தனர். அப்போது இந்திய அணியினர் வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் (WATER SALUTE) அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தனது வெற்றி அணிவகுப்பை மும்பையில் தொடங்கினர். இந்திய கிரிக்கெட் அணியின் வருகைக்காக மும்பை மரைன் டிரைவில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு மரைன் டிரைவிலிருந்து வான்கடே மைதானம் வரை நடைபெற்றது. இதனையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கொண்ட நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய்க்கான காசோலையை பிசிசிஐ அதிகாரிகள் வழங்கினர். இதற்கிடையே இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.) அதிகாரிகள் சிறப்பாக வரவேற்பளித்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசுத் தொகையை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. முன்னதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “நான் நேற்று இந்திய அணியை வரவேற்றேன். இன்று ரோஹித் சர்மா இங்கு வந்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உலகக் கோப்பையை வென்ற வீரர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் அவர் மும்பையைச் சேர்ந்தவர். எங்கள் வீரர்கள் அனைவரும் நேற்று மும்பையில் இருந்த போது நான் வரவேற்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Next Story

விஷவாயு தாக்கிய விவகாரம்; சமைக்கத் தடை விதிப்பு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Puducherry Redyarpalayam incident Prohibition to cook

புதுச்சேரியில் உள்ள  ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற சென்ற மகளும் வீட்டுக்குள்ளேயே மயங்கி விழுந்திருக்கிறார். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. காரணமே தெரியாமல் இருவர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாக்கியலட்சுமி(15) வயது சிறுமி, செந்தாமரை(72) அவருடைய மகள் காமாட்சி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு கழிவறை வழியாக வீட்டுக்குள் புகுந்ததாக முதலில் தகவல் வெளியானது. விஷவாயுவின் தன்மை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் குவிந்தனர்.

இதன் தொடர்ச்சியாக அங்கு ஆய்வு நடைபெற்ற நிலையில் பாதாளச் சாக்கடையில் விஷவாயு கசிவு இல்லை எனப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். வீட்டுக்குள் வேறு ஏதேனும் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட பகுதியில் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தார். மேலும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 15 வயது சிறுமி பாக்கியலட்சுமியின் குடும்பத்தாருக்கு 30 லட்சம் நிதியுதவியும், மற்ற பெண்களான செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும் நிதியுதவி அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 
 

Puducherry Redyarpalayam incident Prohibition to cook

இந்நிலையில் இப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக வீடுகளில் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் அரசு சார்பில் வீடு வீடாக சென்று உணவு விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்றுள்ளது. அதே சமயம் வீட்டு கழிவறைகளுக்கு தவறாக இணைப்பு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தவும் முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.