Advertisment

அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஆறுமுகசாமி கமிஷனுக்கும் இடையே நடக்கும் சண்டை!

ஜெ.வின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கும், ஜெ.வுக்கு எழுபத்தைந்து நாட்கள் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனைக்கும் இடையே ஒரு கடுமையான போர் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதில் "ஜெ.வுக்கு சிகிச்சை தரமானதாக இல்லை என்கிறபோது அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்காமல் தடுத்தது ஏன்' என ஆறுமுகசாமி கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

Advertisment

admk

அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஆறுமுகசாமி கமிஷனுக்கும் இடையே நடக்கும் சண்டை ஆறுமுகசாமி கமிஷனில் அப்பல்லோ மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பிரதாப் ரெட்டி தாக்கல் செய்த மனுவில் இருந்து தொடங்குகிறது. "ஆறுமுகசாமி ஆணையம் ரகசியங்களை காக்க தவறிவிட்டது. ஆணையத்தில்... ஜெ. மருத்துவ சிகிச்சை பெறும்போது அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்கள் உட்பட அனைத்தும் மீடியாக்களில் உலா வருகின்றன. ஆணையத்தின் ஊழியர்கள் இரகசியமாக போன் கேமரா போன்ற கருவிகளை உபயோகித்து ஆணையத்தின் ரகசியங்களை வெளியே கொண்டு செல்கிறார்கள். இதை ஆணையத்தின் செயலாளரான கோமளா தடுக்க தவறி விட்டார். கோமளா மற்றும் ஆணையம் அமைந்துள்ள சென்னை சேப்பாக்கம் கலச மகால் கட்டிடத்தில் உள்ள செக்யூரிட்டி உட்பட அனைவரிடமும் "இரகசியம் காக்கப்பட வேண்டும்' என்கிற உறுதிமொழியை ஆணையம் பெற வேண்டும்'' என பிரதாப் சி ரெட்டி புகார் செய்கிறார்.

Advertisment

ias

இதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை, "ஆறுமுகசாமி கமிஷன் ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிக்கிறேன் என்ற பெயரில் தவறாக நடந்து கொள்கிறது. அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களை ஏடா கூடமாக கேள்வி கேட்கிறது. அவர்கள் தரும் சாட்சியங்களை தவறாக பதிவு செய்கிறது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும்' என உயர்நீதிமன்றத்திலும் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலும் வழக்குப் போட்டு தடை உத்தரவை பெறுகிறது. அப்பல்லோ இந்த அளவிற்கு கோபப்படுவதற்குக் காரணம் ஆணையத்தின் வழக்கறிஞர் ஜபருல்லாகான் என்பவர் ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பாக கொடுத்த ஒரு நோட் டீஸ்தான் காரணம் என்கிறார்கள் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள். ஆணையத்தில் அதன் வழக்கறிஞராக செயல்பட்டு வரும் ஜபருல்லாகான், "ஜெ.வின் தோழியான சசிகலா, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தான் ஜெ.வின் மரணத்திற்கு காரணம்' என குற்றம் சாட்டுகிறார். "சுகாதாரத்துறை செயலாளரான ராதாகிருஷ்ணனுக்கு ஜெ.வை மரண படுக்கையில் படுக்க வைத்திருக்கும் தீவிரமான நோய்கள் பற்றி மிக நன்றாகத் தெரியும்'' என ஆணையத்தில் சாட்சியமளித்திருக்கிறார்.

admk

ஜெ.வுக்கு அப்பல்லோ மருத்துவமனை அளிக்கும் சிகிச்சை பற்றியும், அவருக்கு நன்றாகத் தெரி யும். ஆனால் இந்த சிகிச்சைகள் குறித்து ஒரு ரிப்போர்ட்டையும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு அளிக்கவில்லை. அத்துடன் ஜெ.வை வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அரசாங்க நடைமுறை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என ஆணையத்தில் சாட்சியமளித்துள்ளார். மாநில அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் உதவியுடன் ஜெ.வை வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிப்பதற்கான எந்த முயற்சியையும் சுகாதாரத்துறை செயலாளர் மேற்கொள்ளவில்லை. அத்துடன் ஜெ.வை வெளி நாட்டிற்கு அனுப்பி சிகிச்சை அளித்தால் அது இந்தியாவில் உள்ள அனைத்து டாக்டர்களையும் அவமானப்படுத்துவது என சாட்சியத்தில் சொல்கிறார்.

apollo

ஒரு நோயாளியின் நலனே மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதை உணராத ராதாகிருஷ்ணனின் சாட்சியத்துக்கு நேரெதிராக ஜெ.வுக்கு திரு.ஸ்டுவர்ட் ரஸ்ஸல் (இதய நோய் சிகிச்சை நிபுணர், ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை, அமெரிக்கா), டாக்டர் ரிச்சர்ட் பீலே (தீவிர சிகிச்சை நிபுணர், லண்டன் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை), சிங்கப்பூரைச் சேர்ந்த மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட்கள் என வெளிநாட்டு மருத்துவர்கள் வந்து ஜெ.வுக்கு சிகிச்சை அளித் துள்ளனர். இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசும் சுகாதாரத் துறை செயலாளர் அப்பல்லோ மருத்துவமனையுடன் சேர்ந்து கொண்டு ஜெ.வுக்கு தரப்பட வேண்டிய முறையான சிகிச்சையை அளிக்காமல் சதி செய்துள்ளார்.

arumugasamy

ஜெ.வுக்கு அப்பல்லோ மருத்துவமனை மிகச் சரியான சிகிச்சை அளித்தது என மணிக் கணக்கில் சாட்சியம் அளிக்கும் சுகாதாரத் துறை செயலாளர் பல நேரங்களில் அப்பல்லோவின் ஊதுகுழலாகவே மாறிவிடுகிறார். ராதாகிருஷ்ணனும் சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனையும் கூட்டாக சேர்ந்து சதித் திட்டத்தில் ஈடுபட்டு ஜெ.வை மரணத்திற்குள்ளாக்கியுள்ளனர். அதே போல் தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது அவரும் சசிகலாவும் 20 முறை பல்வேறு சிகிச்சை விவரங்களில் கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். அவர், ஜெ.வின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையை அரசுக்கு அளித்ததாக சொல்கிறார். ஆனால் அப்படி எந்த அறிக்கையும் அளிக்கப்படவில்லை என தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் மறுக்கிறார். ஆகவே சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர், சசிகலா ஆகியோர் சேர்ந்து அப்பல்லோ மருத்துவமனையின் துணையுடன் ஜெ.வின் இறப்பிற்கு காரணமான கூட்டுச் சதியில் பங்கேற்றுள்ளனர்.

அப்பல்லோ மருத்துவ மனை ஜெ.வின் மரணத்திற்கு முன்பு அளிக்கப்படும் எக்மோ சிகிச்சையில் கூட ஏடாகூடமா நடந்திருக்கிறது. ஜெ.வின் மரணத் திற்கு காரணமான இதய நிறுத்தம் வந்தபிறகு மேற்கொள் ளப்படும் முதலுதவி சிகிக்சை கள் கூட தாமதமாக நடந்துள்ளதாக டாக்டர்கள் சாட்சிய மளித்துள்ளார்கள்'' என ஜெ.வின் சிகிச்சையில் இருந்த அலட்சியம், கூட்டுச்சதி பற்றி ஆணையத்தின் வழக்கறிஞரே ஆணையத்தில் ஆவணப்படுத் தியது அப்பல்லோவை கோபத் திற்குள்ளாக்கியது.

"ஆணையத்திற்கு எதிராக அப்பல்லோ வழக்கு தொடுக்கும் போது 85 சதவிகித விசாரணையை ஆணையம் முடித்திருக் கிறது. அப்போது முதலமைச்ச ராக இருந்தவரும் "ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருக்கிறது' என தர்ம யுத்தத்தை தொடங்கியவருமான ஓ.பி.எஸ்.ஸை விசாரித்துவிட்டு தீர்ப்பை எழுத தயாராகிக் கொண்டிருந்தது. ஆணையத்தின் தீர்ப்பு அப்பல்லோவுக்கு எதிராக அமையும் என தெரிந்துகொண்ட அப்பல்லோ வழக்கு தொடர்ந்து ஆணையத்தையே முடக்கிவிட்டது'' என்கிறது ஆணைய வட்டாரம்.

வழக்குக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் வழக்கறிஞர் ஜபருல்லாகான் எழுப்பிய "ஜெ.வை ஏன் வெளிநாட் டில் சிகிச்சை செய்ய அழைத்துச் செல்லவில்லை' என்கிற கேள்வி எதிரொலித்திருக்கிறது. ஜபருல்லா கான் சொன்ன கூட்டுச்சதி என்கிற வார்த்தைகள் இடம்பெறவில்லை. ஆணையத்திலிருந்து எந்த ஆவணமும் பத்திரிகையாளர்களுக்கு தரப்பட வில்லை. அப்பல்லோ தரப்புதான் அவர்கள் அளிக் கும் ஆவணங்களை சசிகலா தரப்பிற்கு கொடுத்தது. அதன்மூலம்தான் ஜெ.வின் மருத்துவ சிகிச்சை பற்றிய ஆவணங்கள் லீக் ஆனது என பிரதாப் சி ரெட்டி, ஆவணங்கள் லீக் ஆவது பற்றி கொடுத்த புகாரையும் ஆவணங்கள் ஆணையத்திலிருந்து லீக் ஆகாமல் இருக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ஆணையத் தால் கன்சல்ட் செய்யப்பட்ட டாக்டர்கள் பட்டியலையும் அவர்களது கருத்துகளை யும் விளக்கி நீண்ட மறுப்பை கொடுத்து ஆணையம் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், "வழக்கறிஞர் ஜபருல்லாகான் தாக்கல் செய்த அபிடவிட் சட்டவிரோதமானது. அவர் கிரிமினல் கோர்ட்டில் குற்றவாளிகளுக்கு எதிராக வாதாடுவதை போல விசாரணைக் கமிஷனில் அபி டவிட் தாக்கல் செய்து சதித் திட்டம் பற்றி பேசுகிறார். அந்த விசாரணைக் கமிஷன் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. ஜபருல்லாகானை தவிர எய்ம்ஸ் மருத்துவர்கள் உட் பட யாரும் ஜெ.வை வெளி நாட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டுமென சாட்சியம் அளிக்கவில்லை. எம்.ஜி.ஆரை வெளிநாட்டுக்கு கொண்டு சென்றது தொடர்பான டாக்குமெண்டுகளை அப்பல்லோவிடம் ஆறுமுகசாமி கமிஷன் கேட்டது. அதில்தான் மோதல் உருவானது. அதை தற்பொழுது ஆறுமுக சாமி சுப்ரீம் கோர்ட்டில் சொல்லியிருக்கிறார்'' என்கிறார்.

ஜபருல்லாகானை தொடர்பு கொண்டு கேட்டபோது "கருத்து எதுவுமில்லை'' என்றார். இந்த வழக்கைப் பற்றி பேசும் சுப்ரீம்கோôட் வழக்கறிஞர்கள், "மருத்துவமனையின் சிகிச்சைகளை கேள்வி கேட்டதால் ஒரு மர்ம மரணத்தை விசாரிக்கும் ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்க முடியாது'' என்கிறார்கள். "ஆணையம் மறுபடியும் செயல்படும். இந்த ஆணையத்தின் மூலம் ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மம் வெளிவருமா என்பது மறுபடியும் அரசியல் சூழலுக்கேற்றவாறே அமையும்'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஜெ. எப்படி மரணமடைந்தார் என ஒரு இறுதித் தீர்ப்புக்கு ஆணையம் வரும் முன்பே ஆணையத்தைச் சுற்றி நடக்கும் சர்ச்சைகள் அந்த மர்மத்தை ஓரளவுக்கு மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறது என்கிறது ஆணைய வட்டாரம். ஜெ. மரணம் குறித்த விசாரணை அறிக்கை ஏறத்தாழ ரெடியாகிவிட்டதால் அப்பல் லோவும் சசிதரப்பும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

jayalalitha admk sasikala Arumugasamy Commission Apollo Hospital
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe