Skip to main content

எடப்பாடியை அதிர வைத்த சர்வே!

லோ தலைவரே, தேர்தல் பரபரப்பில் பொள்ளாச்சி கொடூரத்திற்கு நியாயம் கிடைக்காமல் போயிடுமோன்னு மக்கள் யோசிக்கிறாங்க''’

"நமக்குத்தான் புது பிரச்சினை வந்தா, பழைய பிரச்சினை மறந்திடுமே... அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் என்ன நடக்குது?''

ops-eps

"எப்படியாவது இந்த விவகாரத்தில் தலை உருளாம இருக்கணும்னு நினைக்கிற அ.தி.மு.க. சீட் பங்கீட்டில்தான் மும்முரமா இருக்கு. பா.ஜ.க.வின் பியூஷ்கோயல் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உட்கார்ந்து சீட் பங்கீடு பற்றி பேசுற அளவுக்குப் போயிருக்கு. தொடர்ந்து நடந்த ஆலோசனையில் பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா உள்ளிட்ட கட்சிகளாடு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்துப் பேசினார்கள். தனி தொகுதியில் நிற்க சரியான வேட்பாளர் இல்லை. அதனால் 4 தொகுதியையும் பொதுத் தொகுதியாவே கொடுங்கன்னு தே.மு.தி.க. சுதீஷ் கேட்டிருக்காரு. பிரேமலதா மதுரையில் நிற்க விரும்புவதாகவும் சொல்லிருக்காரு. பா.ம.க. சார்பில் கலந்துக்கிட்ட ஜி.கே.மணியும், ஏ.கே.மூர்த்தியும், எங்களுக்கு திண்டுக்கல் தொகுதியை ஒதுக்குவதாகச் சொல்லியிருந்தீங்க... அதுக்கு பதில் ஆரணியையோ, மயிலாடுதுறையையோ கொடுங்கன்னு கேட்டிருக்காங்க. பா.ஜ.க. சார்பில் பொன்னார், தி.மு.க. கூட்டணியில் இணக்கமான போக்கு இருக்கு. நம்ம கூட்டணியில் இன்னும் அது ஏற்படலையேன்னு சொல்ல, அதற்கப்புறம்தான் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் ஏற்பாட்டில் ராமதாஸ்-விஜயகாந்த் சந்திப்பு நடந்திருக்கு.''’

ramdoss

""இழுத்தடிச்ச த.மா.கா. ஒரு சீட்டுக்கு ஒப்புக்கொண்டது எப்படியாம்?''’

""தங்கமணியும் வேலுமணியும்தான் வாசனோட பேச்சுவார்த்தை நடத்துனாங்க. உள்ளாட்சித் தேர்தலில் பார்த்துக்கலாம்னு சொல்லியும் வாசன் கேட்கலை. அப்புறம், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பேசி, வாசனுக்கு கேபினட் மந்திரி பதவின்னு டீல் போட, ஒரு சீட்டுக்கு ஓ.கே. சொல்லிட்டாங்க. த.மா.கா.வுக்கு தஞ்சையை அ.தி.மு.க. ஒதுக்கிவிட்டது. இங்கே தினகரன் தரப்பு வலிமையாக களமிறங்கி வேலை செய்யும் என்பதால், த.மா.கா. தலையில் கட்டிட்டாங்கன்னு கூட்டணிக்குள் முணு முணுப்பு கேட்குது.''’
rang
"ஒவ்வொரு தொகுதியின் கள நிலவரம் பற்றியும் ரிப்போர்ட் வந்திருக்குமே?''’

""நடக்க இருக்கும் தேர்தலில் வீக்கான நாடாளுமன்ற -சட்டமன்ற தொகுதிகள் எத்தனைன்னு ஒரு அவசர சர்வேயை எடுக்கச் சொல்லியிருக்கார் எடப்பாடி. அதில் அ.தி.மு.க. அணி 28 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடக்கும் 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் ரொம்பவும் வீக்கா இருக்குன்னு தெரியவர... அந்த தொகுதிகளில் இருக்கும் சாதிய அமைப்புகள், சமூக அமைப்புகள், மகளிர் குழுக்கள், முகநூல் குழுமங்கள்னு அனைத்தையும் விட்டமினால் கவனிக்கவும் சிறப்புத் திட்டங்கள் வகுக்கும்படி சொல்லியிருக்கிறார். எம்.பி. தொகுதியைவிட எம்.எல்.ஏ. தொகுதியில்தான் அதிக கவனமாம்.''’

"தினகரனின் அ.ம.மு.க. என்ன ப்ளானில் இருக்கு?''’

""எம்.பி. அண்ட் எம்.எல்.ஏ. தொகுதிகளில் அ.ம.மு.க. பிரிக்கும் ஓட்டுகளால் அ.தி.மு.க. ஒன்றில்கூடக் கரை ஏறிடக்கூடாதுன்னு நினைக்கிறார் தினகரன். தனிச்சி நிற்பதன் மூலம் தங்கள் கட்சிக்கு இருக்கும் வாக்கு பலத்தைத் தெரிஞ்சிக்கவும் அவர் ஆசைப்படுறார். இடைத்தேர்தல் தொகுதிகளில்தான் தினகரன் கவனம் ஷார்ப்பா இருக்கு. 13-ந் தேதி திருவண்ணாமலை அபர்ணா ஓட்டலில் தன் உறவினரான ராஜராஜனோடு தங்கி, கட்சி நிர்வாகிகளோடு தேர்தல் குறித்து ஆலோசிச்சார். தேர்தல் செலவு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கு. 14-ந் தேதி, பரப்பனஹள்ளி சிறையில் சசிகலாவை சந்திச்சி, வேட்பாளர் பட்டியலுக்கு ஓ.கே. வாங்கிட்டு, தேர்தலுக்கான நிதி பற்றியும் தினகரன் பேசி, க்ரீன் சிக்னல் வாங்கிட்டாராம்.''’

"அ.ம.மு.க.வோடு கூட்டணி அமைக்கும்னு எதிர்பார்க்கப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேற முடிவு எடுத்திடுச்சே?''’

"தி.மு.க. அணிதான் வேல்முருகனின் முதல் சாய்ஸ். அது சரிப்படலை. குடல் பிரச்சினையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், சென்னை காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆயிட்டார். அவரை தினகரன் சார்பில் சந்தித்த வெற்றிவேல், அ.ம.மு.க.வோடு கூட்டணி பற்றி பேசினாலும், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கடுமையாக மோதும் சூழலில் நாம் தனித்து இருப்போம்ங்கிற முடிவுக்கு வந்துட்டாரு.''’
kamal
""தி.மு.க. சைடில் என்ன நடக்குது?''’

""ராகுல் விசிட்டால் தி.மு.க. கூட்டணியின் தொகுதி அறிவிப்பு தாமதமாயிடிச்சி. ஆனா, காங்கிரசைத் தவிர மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளை அந்தந்த கட்சிகளும் முன்கூட்டியே முடிவு செய்திடிச்சி. கள்ளக்குறிச்சியைக் கேட்ட ஐ.ஜே.கே. பாரிவேந்தருக்கு பெரம்பலூர் ஒதுக்கப்பட, அதன் பெரும்பாலான பகுதி திருச்சிக்குள் வருவதால், கே.என்.நேருவை சந்திச்சி தேர்தல் வேலையைத் தொடங்கிட்டாரு பாரிவேந்தர்.''’

"இடைத்தேர்தலிலும் நிற்கப் போறதா மக்கள் நீதி மய்யம்’ முடிவெடுத்திருக்கே?''’

"பதட்டமா இருக்கும் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடக்குமாம். டார்ச் லைட் சின்னம் கிடைத்ததும் தெம்பான கமல், தனக்கான பலம் என்னன்னு எல்லா தொகுதிகளிலும் பார்க்க நினைக்கிறார்.''

“கமலுக்கு டார்ச்லைட் ஒதுக்கிய தேர்தல் ஆணையம், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கான இரட்டை மெழுகுவத்தி சின்னத்தை ஒதுக்க மறுத்திருக்குது. ஏற்கனவே விடுதலை சிறுத்தை களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்படலை.''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்