தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் காங்கிரசின் அலீம் அல் புஹாரி தன்னுடைய அரசியல் பார்வைகளை நக்கீரனின் 'அரசியல் சடுகுடு' நிகழ்ச்சில் பகிர்ந்துகொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/06/48-2026-03-06-15-01-49.jpg)
28+1 நீண்ட இழுபறிக்கு பிறகு முடிவாகி இருக்கு எப்படி இருக்கு?
ஒரு தேசிய கட்சி, மாநில கட்சியுடைய வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். தேசிய கட்சியில் இருந்து பொறுப்பாளர்களாக வருபவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து தேசிய தலைமையிடம் நற்பெயர் எடுக்க நினைப்பார்கள். நானே நாளைக்கு எங்கேயாவது பொறுப்பாளியாக போனாலும் அதுதான் நானும் நினைப்பேன். அதிக சீட்டுகள் வேண்டும் என்பது கிரிஷ் சோடங்கரின் தனிப்பட்ட கருத்து. அதை நீங்க எடுத்துக்க வேண்டாம் என்று செல்வப்பெருந்தகை சொன்னதை தவறாக சித்தரித்துவிட்டார்கள். ஸ்டேட்டில் இருக்கக்கூடிய லீடர், அதற்கான பொறுப்பில் இருக்கக்கூடிய மாநில தலைவர் இவர்கள் இந்த கருத்தை இப்படி பேச மாட்டாங்க. மேலிடப் பொறுப்பில் வருபவர்கள் முடிஞ்ச அளவுக்கு புஷ் பண்ணி அதிக சீட் வாங்க வேண்டும் என நினைப்பார்கள். குறிப்பிட்ட அளவு சீட்டு வாங்க நினைத்திருக்கலாம். நம்ம தேசிய தலைமை பொறுப்பு கொடுத்தாங்க. சோடங்கரும் சிறப்பாக பண்ணிட்டார்.
எடுத்துக்காட்டாக 24 இடங்கள் வாங்கி இருந்தால் அவர் கஷ்டப்படலாம். இன்னைக்கு இருக்கும் காலகட்டத்தில் வாக்கு திருட்டு, ஜனநாயக படுகொலைகள், தேர்தல் ஆணையத்தை தன்வசப்படுத்துவது, பணத்தை வைத்து இந்தியாவில் இருக்கக்கூடிய எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குதல் இப்படி பல்வேறு அழிச்சாட்டியங்கள் மூலமாக நமக்கு இறங்குமுகம் இருப்பதுபோல மற்ற மாநிலங்களில் காட்டப்பட்டு வரும் சூழலில் தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட இந்த முறை நம்மளுக்கு கூடுதலாக இடங்கள் கொடுத்துள்ளார்கள். கிரிஷ் சோடங்கர் அவர்களுடைய வெற்றி இது. அதைத்தான் அவர் வெளிப்படுத்துகிறார். முதலில் நம்மிடம் பேசும் போது 117 பாதிக்கு பாதி இடம் வேண்டும் என்றுதான் ஆரம்பித்தார். அதன்பிறகு 46, 45 அப்படி என 35க்கு குறைவு இல்லை என்றெல்லாம் சொன்னார். சோடங்கரை விட்டீங்க என்றால் 117 இடங்கள் தான் வேண்டும் என்று நிற்பார். அவரை திருப்திப்படுத்த முடியாது. அவரை திருப்திபடுத்தப்படவும் கூடாது. ஏனென்றால் அவர் ஒரு இன்சார்ஜ். அவர் தேசிய தலைமையிடத்தில் நற்பெயர் பெறுவதற்கான வழியை தான் அவர் பார்ப்பார். அது அவருடைய கருத்து.
இங்கு நம்முடைய மாநில தலைவருடைய பேட்டியும் அவருடைய கருத்தும் தான் சரியானதாகவும் விவாதத்திற்குரியதாகவும் இருக்கும். அவர் இந்த மாதிரி வாதத்தை வைத்தால்தான் விவாதிப்பதற்கும் அதைப்பற்றி வந்து கூடுதல் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் சரியாக இருக்கும். மோடியுடைய அறிவுறுத்தல் இல்லாமல் முன்னாள் தமிழக பாஜக தலைவர் எடப்பாடி பழனிசாமியை 'தற்குறி' என்று சொல்லிருக்க மாட்டார் என்று எடுத்துக்கொள்ளலாமா? ஒரு கூட்டணி விஷயத்தில் முடிவு பண்ணும் போது தினமும் உட்கார்ந்து இன்னைக்கு ஏஎன்ஐ-யில் இருந்து வரப்போறாங்க நான் எப்படி பேட்டி கொடுக்க வேண்டும் என கேட்டுவிட்டு பேசுறாரா? அவரவர்களுக்கு ஒரு பொறுப்பு கொடுத்துடுவாங்க. எல்லா நேரத்திலுமா ராகுல்காந்தி போனில் பேசிட்டு இருப்பார். ட்வீட் இப்படி போடாதே 'பிரதர்' என்பதை நீக்கிட்டு போடு என்று ராகுல்காந்தி சொன்னாரு அப்படிங்கற மாதிரி இருக்கு இந்த வாதங்கள் எல்லாம். அதனால் இவைகள் எல்லாம் கடந்து செல்லப்பட வேண்டியவை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/47-2026-03-06-15-01-32.jpg)