Skip to main content

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வயது 95...நாடு முழுக்க கொண்டாடிய கட்சித் தொண்டர்கள்...!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

மனிதகுலத்திற்கு மாமருந்தாக மகத்தான சித்தாந்தத்தை கொடுத்தது கம்யூனிசம். இதன் மூலவர் காரல்மார்க்ஸ். இந்த உயரிய சித்தாந்தத்தை நெஞ்சில் ஏந்தி முதன்முதலாக மக்களை திரட்டி ரஷ்ய நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி புது அரசை அமைத்தவர் மாமேதை லெனின் . ரஷ்ய புரட்சிக்கு பிறகு உலகம் முழுக்க கம்யூனிசத்தின் சித்தாந்தம் வெகுவாக பரவத்தொடங்கியது.

 

 Communist Party of India- 95th birthday

 



அப்படித்தான் இந்தியாவிலும் கம்யூனிச கோட்பாடுகள் ஆங்காங்கே தீவிரமாக விளையத் தொடங்கியது. விவசாயிகள், தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அவர்கள் தலைமையில் ஒரு  சுரண்டலற்ற சமூகத்தை உருவாக்க முடியுமென்றால் அது கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும் என்கிற உறுதியோடு இந்திய நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் அமைப்பு ரீதியாக கட்டமைப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் மறைந்த சிங்கரா வேலர் உட்பட பல தலைவர்கள் இணைந்து முதன்முதலாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை உருவாக்கினார்கள். கடந்த 1925 டிசம்பர் 26 ஆம் தேதி முதன்முதலாக கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உருவானது. ஆக, கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் முறைப்படி அமைப்பாக உருவானது 1925 டிசம்பர் 26 ல் தான். இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வயது 95.

 

Communist Party of India- 95th birthday

 



உலகில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி இது நூறாவது ஆண்டு ஆகும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 95 ஆண்டுகளை கடந்துள்ளது. இதை இந்தியா முழுக்க உள்ள கம்யூனிஸ்ட்டுகள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான புதுடெல்லி அஜய் பவனில்  கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா செங்கொடியை ஏற்றி வைத்தார்.

அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில நிர்வாகிகள் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என கட்சி அலுவலகத்தில் செங்கொடியை ஏற்றிவைத்து "இன்குலாப் ஜிந்தாபாத்" என கோஷமிட்டனர். தமிழகத்தில் சென்னை பாலத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணு கொடியேற்றினார்.ஈரோடு மாவட்டத்தில் பவானி பெருந்துறை, சிவகிரி கோபி சத்தியமங்கலம் என ஒவ்வொரு ஊர்களிலும் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் கொடியை ஏற்றி "புரட்சி வாழ்க" என கோஷமிட்டனர்.

 

 Communist Party of India- 95th birthday

 



மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் மக்களை மதரீதியாக பிரிக்கும் பல்வேறு செயல்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என பாஜக அதன் கொள்கை ரீதியான அரசை நடத்திக்கொண்டிருக்கும் போது மக்கள் மத்தியில் அதற்கு மிக கடுமையான எதிர்ப்புகள் நாடு முழுக்க பெருகிவருகிறது. இந்த சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின்  ஒற்றுமையும் இடதுசாரிகள் முன்னெடுக்கும் மக்கள் மயமான நடுநிலை செயல்பாடுகளும் இந்தியாவுக்கு அவசியமான ஒன்று என  கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அமைப்பு தினமான இன்று ஆங்காங்கே உள்ள கட்சி அலுவலகத்தில்  கொடியேற்றி உரையாற்றினார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.