தமிழக அரசு சார்பில் மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் உறுப்பினர்களாக இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலருமான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழக மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத்தலைவர் மு. நாகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கடந்த 16ஆம் தேதி (16.02.2026) இந்த குழு தனது அறிக்கையினை சமர்ப்பித்தது
இந்நிலையில் இந்த அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டபேரவையில் சமர்பித்து பேசுகையில், “இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் மாபெரும் முன்னெடுப்பை செய்ய தொடங்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நாள் இந்த நாள். பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக, கலைஞரின் உடன்பிறப்பாக ஒன்றிய மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழுவின் அறிக்கையின் முதல் பகுதியை இம்மாமன்றத்தில் வைக்க இருக்கிறோம். ஒரு மாநிலமாக நம் மக்கள் காணும் கனவுகளை முழுமையாக நிறைவேற்றும் அளவிற்கு நம்மிடம் அதிகாரங்கள் இல்லை. ஏனென்றால் மாநில உரிமைகள் வழங்கும் ஒரு ஒன்றிய அரசு அமையவில்லை.
இருக்கின்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டுதான் சமூக நிதியில், கல்வியில், சுகாதாரத்தில் பொருளாதாரத்தில் உட்கட்டமைப்பு வசதிகளில் முன்னேறி வருகிறோம். நிதி உரிமை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு நாம் இன்னமும் கடுமையாக போராட வேண்டிய சூழல் தான் உள்ளது. எனவே எல்லா அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளை நாம் தொடங்கக்கூடிய நாள்தான் இன்றைய நாள். அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்துள்ள ஒன்றிய அரசு அவற்றை எதேச்சதிகார மனப்பான்மையோடு பயன்படுத்துவதோடு மாநில அரசுகளையும் மதிப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மாநில அரசுகள் ஒன்றிய அரசின் தயவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/18/tn-govt-union-state-comitte-ropert-2026-02-18-12-26-36.jpg)
இன்னும் எத்தனை காலத்திற்குதான் அவர்கள் கொடுக்கும் இடத்தில், நாம் வாங்கும் இடத்தில் இருப்பது. இந்த நிலை மாற வேண்டும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நம்முடைய நோக்கத்திற்கான விடைதான் ஒன்றிய மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழுவின் அறிக்கை சுருக்கமாக சொன்னால் பூனைக்கு மணி கட்டி இருக்கிறோம். அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்றவையாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அரசாக ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என்ற நம்முடைய இந்த கொள்கைதான் மற்ற மாநிலங்களின் உள்ளத்துக்குள் இருக்கும் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் கொள்கையாக இருக்கும்.
எனவே அனைத்து மொழிகள், இனங்கள், மதங்கள், பண்பாடுகள் உள்ளடக்கிய மாநிலங்களில் வாழும் மக்களை அவர்களது உரிமைகளோடு, உணர்வுகளோடு வாழவைக்கு உன்னதமான மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகள் கடந்து அனைவரும் தங்களது அரசியல் பழகியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த மாமன்றத்தின் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன். மாநிலங்களின் உரிமைகள் குறித்து 1963இல் பேரறி அண்ணா நாடாளுமன்றத்தில் முழங்கினார். 1967இல் திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியது. ஒன்றிய மாநில அரசி உறவுகளை ஆராய 1969இல் கலைஞர் அவர்கள் ஓய்வு பெற்ற நீதியரசர் பி.வி. ராஜமன்னார், ஏ. லட்சுமணசாமி மல்லையார், பி. சந்திரரெட்டி ஆகியயோரை கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/18/mks-assembly2-2026-02-18-12-27-02.jpg)
இதனை இந்திய நாடே திரும்பி பார்த்தது. அந்த குழு விரிவாக ஆய்வு செய்து 1971இல் தனது அறிக்கையை வழங்கியது. ராஜமன்னார் குழு அளித்த முக்கிய பரிந்துரைகளை இந்த மாமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றினார் கலைஞர். இதனை தொடர்ந்து ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையான உறவுகளை மேம்படுத்திட ஒன்றிய அரசின் சார்பில் 1983இல் நீதியரசர் சர்காரியா தலைமையிலான ஆணையம், 2000ஆம் ஆண்டில் வெங்கடாசலையா ஆணையம், 2007இல் நீதியரசர் பூஞ்சி தலைமையிலான குழு ஆகியவை அமைக்கப்பட்டு அவற்றின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட அறிக்கைகள் வழங்கப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஏமாற்றம் தொடர்கிறது.
இன்னும் சொன்னால் மாநில அரசின் பட்டியில் உள்ள முக்கிய ஆதாரங்களை கூட அடுத்தடுத்து ஒத்திசைவு பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளை இன்றைய ஒன்றிய அரசால் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு மாநில மக்களின் அடிப்படை உரிமைகளை ஒன்றிய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
Follow Us