Advertisment

''நான் இப்போது ராணுவத்தில் இருந்திருதால் ஃபயரிங் அட்டாக் நடத்த உத்தரவிட்டிருப்பேன்!'' -முன்னாள் கர்னல் ஆவேசம்!

Former Colonel

Advertisment

இந்திய எல்லையில் சீனாவின் அத்து மீறல் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமீத்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா, சி.பி.எம்.மின் சீதாராம்யெச்சூரி, அதிமுக ஒருங் கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், பிஜு ஜனதா தளத்தின் பினாக்கி மிஸ்ரா, சமாஜ்வாதி ராம்கோபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய வீரர்கள் 20 பேர் உயிர் தியாகம் செய்திருப்பதை கண்ணீர் மல்க மோடி கூற, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பேசிய பிரதமர்,’""நம் எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை. இந்திய மண்ணை அவர்கள் கைப்பற்றவும் இல்லை. தேசத்தின் ஒரு அங்குல நிலத்தையும் எவரும் தொட்டுவிட முடியாது. அந்தளவுக்கு நம்முடைய ராணுவத்தின் ஆயுதப் படைகளின் பலம் வலிமையானது'' என பகிர்ந்து கொண்டார்.

சோனியாகாந்தி, ""சீன படைகள் எப்போது இந்திய எல்லைக்குள் வந்தது? உளவுத் துறை கண்டறிய வில்லையா? பிரச்சனையை தீர்ப்ப தற்கான வழிகளை இழந்துவிட்டதால் 20 வீரர்கள் உயிர் தியாகம் செய்தி ருக்கிறார்கள்'' என குற்றம்சாட்டிப் பேசினார். இந்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் ஒத்துழைக்கும் என்றும் சொன்னார். சீனாவுடனான பிரச்சினையில் அமெரிக்காவின் வலையில் விழுந்துவிடக்கூடாது என கம்யூனிஸ்ட்டுகள் எச்சரிக்கை விடுத்தனர். மற்ற அனைத்து கட்சிகளின் தலைவர்களும், பிரதமர் மோடி எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகளை பாராட்டியதுடன் அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

Advertisment

இந்திய எல்லையில் அதிகரித்து வரும் போர் பதட்டம் குறித்து இந்திய ராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கர்னல் ஹரிஹரனிடம் நாம் பேசியபோது, ""லடாக்-திபெத் எல்லையில் கடந்த ஒரு மாதமாகவே சீனாவின் பயமுறுத்தல்கள் இருந்தே வந்திருக்கின்றன. இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட பகுதியின் ராணுவ தளபதிகள் சுஷுல்-மோடாவில் சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். மே-13 வரை ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பிரச்சனை தீரவில்லை.

cIndia China Ladakh

எல்லைப் பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இரு நாட்டு ராணுவப் படைகளும் குவிக்கப்பட்டு இருக்கின்றன. தனது துருப்புகளை அகற்ற சீனா மறுத்து வருகிறது. தற்போது மோதல் நடந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை புதிதாக க்ளைம் பண்ணுகிறது சீனா. இதனை இந்தியா ஏற்கவில்லை. இருப்பினும், சீனா அப்படி க்ளைம் செய்த மாத்திரத்தில் ஒரு நிமிடம் கூட ஏற்காமல் ஆயுதங்களை இந்தியா தூக்கியிருக்க வேண்டும்.

இந்திய-சீனாவிற்கிடையே 2013-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, எல்லைப் பகுதியில் யார்- யார் எங்கெங்கு இருக்கிறோமோ அதற்கான வழிமுறைகளை ஆயுதமில்லாமல் சந்தித்து பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும். அதனால்தான், இந்திய தரப்பில் கொல்லப்பட்டவர்களில் ராணுவ கமாண்டிங் ஆஃபிஸர் ஒருவர் இருந்தும் இந்திய துருப்புகள் தங்களது ஆயுதங்களைத் தூக்கவில்லை.

நான் இப்போது ராணுவத்தில் இருந்திருந்து கமாண்டிங் ஆஃபிஸர் கொல்லப்பட்டிருந்தால், இந்திய அரசின் கட்டளையையும் மீறி ஃபயரிங் அட்டாக் நடத்த என்னுடைய யூனிட்டிற்கு உத்தரவிட்டிருப்பேன். எதிரிகள் நம் எல்லைக்குள் தாக்குதல் நடத்தினால் ஆயுதங்களை பயன்படுத்தாமல் இருப்பது பலனில்லை. கல்வான் பள்ளத்தாக்கினை சீனாவுக்கு விட்டுக்கொடுத்து விட்டால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.

border china indian army
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe