Skip to main content

புளூட்டோவ கிரகமா மாத்துங்க, அயர்ன்மேன காப்பாத்துங்க, பசித்தால் சாப்பிட வேண்டாமா... குழந்தைகளின் அட்ராசிட்டிஸ் 2018

children

 

2018 சிலருக்கு ரணகளமாக போயிருக்கும், சிலருக்கு அதகளமாக போயிருக்கும். ஆனால் குழந்தைகளை பொறுத்தவரை எல்லா நாட்களுமே குதுகலம்தான். 2018ல் குழந்தைகள் செய்த சில வித்தியாசமான செயல்கள்...
 

2006ம் ஆண்டு புளூட்டோ கிரகமல்ல எனக்கூறி அதை சூரியக்குடும்பத்திலிருந்து நீக்கியது சர்வதேச வானியல் கூட்டமைப்பு. இதை எதிர்த்து அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி காரா ஓ’கானர், மீண்டும் புளூட்டோவை ஒரு கிரகமாக அங்கீகரியுங்கள் என்ற கோரிக்கையை முன்வைக்கும் கடிதத்தை எழுதி நாசாவுக்கு அனுப்பியுள்ளார். எண்ணத்திலும், வார்த்தைகளிலும் மழலைமொழி மாறாமல் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ‘நான் கேட்டுக்கொண்டிருந்த பாடலொன்று, புளூட்டோவை மீண்டும் கொண்டுவாருங்கள் என்ற வரியுடன் நிறைவடைந்தது. அது நடக்கவேண்டும் என்பதே என் விருப்பம். புளூட்டோவை மீண்டும் ஒரு கிரகமாக்குங்கள். நான் பார்த்த வீடியோ ஒன்றில் கடைசி கிரகமாக புளூட்டோ இருந்தது. அதில் இருந்தது போலவே, புளூட்டோவை பூமி, புதன், செவ்வாய் போல மீண்டும் ஒரு கிரகமாக அங்கீகரியுங்கள். பூமியோ, இங்கிருக்கும் யாரோ குட்டி கிரகங்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிடக்கூடாது’ என தெரிவித்திருந்தார். காராவிற்கு எதிர்காலத்தில் நாசாவில் பணிபுரியவேண்டும் என்பதே கனவு என்பதால், நாசாவிற்கே தனது கடிதத்தை அனுப்பி இருக்கிறார்.
 

space


 

இந்தக் கடிதத்திற்கு நாசாவில் இருந்து பதிலும் கிடைத்துள்ளது. நாசா இயக்குனர் ஜேம்ஸ் கிரீன் தனது பதில் கடிதத்தில், ‘புளூட்டோ குளிராக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், புளூட்டோவிற்கு இதயம் இருக்கிறது என்பதை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்? இந்த கண்கவர் உலகில் விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. புளூட்டோவைப் பற்றி நாம் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. நீ புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடிப்பாய் என்று நான் நம்புகிறேன். நீ உன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உன் கனவுகளோடு நாசாவுக்கு வா.. நாங்கள் உனக்காக காத்திருக்கிறோம்’ என எழுதியுள்ளார்.


'அவென்ஜர்ஸ் எண்டு கேம்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்நிலையில் அந்த ட்ரைலரில் அயர்ன் மேன் தனியாக விண்வெளியில் மாட்டிக்கொண்டிருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதனை பார்த்த மார்வெல் ரசிகர் ஒருவர் அயர்ன் மேனை காப்பாற்ற உதவுமாறு நாஸாவுக்கு  ட்வீட் செய்திருந்தார். நாசா அந்த டீவீட்டுக்கு, முதலில் அவென்ஜர்ஸ் சென்ற விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுங்கள், அப்படி தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், பூமியிலிருக்கும் எங்கள் குழுவுடன் இணைந்து அவர்கள் விண்கலத்தை ஸ்கேன் செய்து காணாமல் போனவரை கண்டுபிடிக்கலாம் என கூறியுள்ளது. அதன்பின் அந்த படத்தில் அயர்ன் மேனாக நடித்த ராபர்ட் டௌனி நாசாவின் இந்த டீவீட்டுக்கு தற்பொழுது பதிலளித்துள்ளார், அதில், 'நாசாவில் உள்ளவர்களை தெரிந்து வைத்திருப்பது எப்பொழுதும் நல்லதே' என கூறியிருந்தார்.
 

இதுதவிர அடிக்கக்கூடாது குணமாக சொல்லணும், பயந்துட்டேன், அப்பாகிட்ட சொல்லிருவேன், பசித்தால் சாப்பிட வேண்டாமா இவ்வாறாக பல மழலை வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாயின. இப்படியாக குழந்தைகளின் மழலைக்கும், அப்பாவிதனத்திற்கும் மக்கள் மயங்கிய நாட்களும் இந்தாண்டில் வந்து போயின.      

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...