Skip to main content

முதல்வரை மாற்றியமைக்க வேண்டும்...எடப்பாடிக்கு அமித்ஷா கொடுத்த அதிர்ச்சி செய்தி!

ia-Desktop ia-mobile

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடனான எடப்பாடியின் சந்திப்பும் அவரது வெளிநாட்டு பயணமும் அ.தி.மு.க.வில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. முதல்வர் எடப்பாடியின் இந்த முதல் வெளிநாட்டு பயணத்தில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன என்கிறார்கள் உளவுத்துறையினர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக 10-ந்தேதி இரவு தனி விமானத்தில் சென்னை வந்திருந்தார் அமித்ஷா. விமானநிலையத்திற்கு எடப்பாடி செல்லவில்லை. கவர்னர் பன்வாரிலால், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் வரவேற்றனர். கவர்னர் மாளிகையில் தங்கிய அமித்ஷாவை அன்றைய இரவே சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. சுமார் 25 நிமிடம் நீடித்த அந்த சந்திப்பில், அரசியல் ரீதியாக பல விசயங்களை கடுமையாக விசாரித்திருக்கிறார் அமித்ஷா.

 

amithsha"இதுகுறித்து நம்மிடம் பேசிய உளவுத்துறையினர், "உங்கள் ஆட்சி குறித்து கவர்னர் அனுப்பி வைக்கும் அறிக்கையில் தமிழக அரசு பாஸ் மார்க் கூட வாங்க வில்லை. ஊழல்களும் கடன் சுமையும்தான் அதிகரித்து வருகிறது. ஆட்சித் தலைமையை மாற்றியமைத்தால் என்ன? அ.தி.மு.க.வுடனான கூட்டணியை தொடர்வதா வேண்டாமா என முடிவு எடுக்க வேண்டிய சூழலில் பா.ஜ.க. இருக்கிறது. கூட்டணியில் பா.ம.க. இருந்தால் வெற்றி கிடைக்கும் என்றீர்கள். பா.ஜ.க.வுக்கான இடங்களில்கூட கடுமைகாட்டாமல் நாங்கள் ஒத்துழைத்தோம். ஆனால், பா.ஜ.க.வையும் சேர்த்து தோற்கடித்துவிட்டீர்கள். வேலூர் தேர்தலை கணக்கிட்டு, பா.ம.க.வுக்கு எம்.பி. சீட் கொடுத்தும் வெற்றி கிடைக்கவில்லையே..'' என்றிருக்கிறார்.

 

admkஎடப்பாடி இதனை எதிர்பார்க்கவில்லை. உடனே "அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி தொடர வேண்டும்' என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஊழல்களுக்கு இடம் தராமல் ஆட்சியை நடத்துகிறேன் என்றிருக்கிறார். அமித்ஷாவோ, "உங்கள் தலைமையை அ.தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் விரும்புவதாக தெரியவில்லை. இன்னும் 2 வருடத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர் தலில் பா.ஜ.க. பெரியளவில் ஜெயிக்க வேண்டும்' என நினைக்கிறோம். உங்களோடு பயணிப்பதால் அந்த வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு கிடைக்கப்போவதில்லைங்கிறது தெளிவாக தெரிகிறது. அதனால், "முதல்வரை மாற்றியமைக்க நீங்கள் சம்மதிக்க வேண்டும்' என அழுத்தம் கொடுத்து பேசியிருக்கிறார் அமித்ஷா.

 

admkஅவருடைய இந்த முடிவு எடப்பாடிக்கு நடுக்கத்தை தந்துள்ளது. அதேசமயம், வேலூரில் வாக்குப்பதிவு நாளில், காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட விவகாரத்தால் பாதிப்பு ஏற்பட்டதை சொல்லி, உள்ளாட்சித் தேர்தலில், போட்டியிடும் அனைத்து இடங்களிலும் பா.ஜ.க.வை வெற்றிபெற வைக்க நான் பொறுப்பு. அதன்பிறகு, முதல்வர் மாற்றம் பற்றி உங்கள் யோசனைக்கு ஒப்புக்கொள்கிறேன் என்றிருக்கிறார் எடப்பாடி. பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தலா 45 சதவீத இடங்களிலும் தோழமை கட்சிகள் மீதியுள்ள 10 சதவீத இடங்களிலும் போட்டியிடும்படியான முடிவை எடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார் அமித்ஷா என சந்திப்பு குறித்து விவரிக்கிறார்கள். இந்த நிலையில், உலக முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு அழைத்துவர அமெரிக்கா, பிரிட்டன், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முதல் முறையாக பயணம் செய்து, 2 வார காலத்தை செலவிட இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.


இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக அரசின் தொழில்துறை அதிகாரிகள், ""சென்னையில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி 3 லட்சத்து 431 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டுள்ளது எடப்பாடி அரசு. இருப்பினும் அனைத்து முதலீடுகளும் தமிழகத்திற்கு வரவில்லை. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிலுவையிலேயே உள்ளன. இதனை சரிசெய்ய துறை அமைச்சர்களும் உயரதிகாரிகளுமே பயணம் மேற்கொள்ளலாம். அப்படியிருக்க முதல்வர் எதற்குப் போக வேண்டும்? ஆக, இதில் வேறு ஒரு சூட்சுமம் இருக்கிறது. அதாவது, தமிழகத்தில் பிரபலமான தொழில் நிறுவனம் ஒன்று அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் முதலீடுகளை செய்ய விரும்புகிறது. அந்த நிறுவனத்தில்தான் முதல்வர் தரப்பினரின் பரிமாற்றங்கள் உள்ளன. அதனாலேயே இந்த பயணம்'' என ரகசியங்களை உடைக்கிறார்கள்.

தமிழக உளவுத் துறையினரோ, "முதல்வர் பயணத்தின் பின்னணியில் இருப்பது டெல்லிதான். எடப்பாடியிடமிருந்து ஆட்சி தலைமையை தற் காலிகமாக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சிடம் மாற்றி யமைக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. அதற்காக அவரை 2 வாரங்கள் வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு எடப்பாடியின் பொறுப்பை ஓ.பி.எஸ்.ஸை கவனிக்கச் சொல்ல ஆலோ சிக்கிறது டெல்லி. இது குறித்து, தன்னை சந்தித்த எடப்பாடியிடம் அமித்சா பேசியுள்ளார். எடப்பாடியோ, "வெளி நாடுகளில் நான் இருக்கும் போது எனது பொறுப்பை அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் கவனித்துக்கொள்வார்கள். வேறு ஒருவரிடம் ஒப்படைக்க எனக்கு விருப்பமில்லை' என சொல்லியிருக்கிறார். அதனால் திட்டமிட்ட படி வெளிநாடுகளுக்கு எடப்பாடி செல்வாரா? அல்லது பயணம் ரத்தாகுமா? என அடுத்த வாரத்தில் தெரி யும்'' என்கின்றனர்.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...