Advertisment

காந்தி நாடு ஹிட்லர் பாதையில் செல்கிறது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதுதொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது, " இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி நிறைய முறை பத்திரிக்கைகளில், தொலைக்காட்சிகளில் பேசி விட்டேன். அதனால் தற்போது இங்கு புதிய செய்திகளை பேசியாக வேண்டும். அதனால் நான் மிக முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த குடியுரிமை திருத்த சட்டம் என்பது முஸ்லிம்களுக்கும், அரசுக்குமான பிரச்சனையாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதைத்தான் அரசு விரும்புகிறது. ஆனால், இது இந்திய மக்களுக்கும், அரசுக்குமான பிரச்சனையாகத்தான் கருத வேண்டும். ஆனால் அரசு இஸ்லாமியருக்கும், சட்டத்துக்குமான போராட்டமாக இதை மாற்ற விரும்புகிறது. அம்பேத்கார் வடித்து கொடுத்த இந்தியாவிற்கு என்று ஒரு வடிவம் இருக்கின்றது. அந்த இந்தியாவில் இருக்கின்ற மக்களுக்கும், அரசுக்குமான போராட்டமாக இதை கருத வேண்டும். அதை விடுத்த வேறு யாருக்கு எதிரான போராட்டமாக இதை மடைமாற்ற கூடாது.

Advertisment

hgj

இதில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை என்றாலும் அவர்கள் மட்டுமே பாதிக்கப்பட போவதில்லை. ஒரு ரஷ்ய கவிஞன் கூறியதை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். "முதலில் கம்யூனிஸ்ட்டுகளை அடித்தார்கள், நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை. அடுத்து யூதர்களை அடித்தார்கள் நான் கவலைப்பட வில்லை. ஏனென்றால் நான் யூதர் இல்லை. அடத்து என்னை அடித்தார்கள், ஆனால் அதை எதிர்த்து கேட்க வேறு யாரும் இல்லை" என்றான். அதை போல ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக போராடுகிறோம். காந்தி நாடு ஹிட்லர் பாதையில் செல்கிறது. சென்னை ஐஐடியில் இருந்து இதற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக ஒரு ஜெர்மன் மாணவன் வெளியேற்றப்படுகிறான். இது எவ்வளவு பெரிய அவமானம். நம்முடைய நாட்டில் ஒரு மாணவன் படிப்பது என்பது எவ்வளவு பெரிய பெருமை. அவர் தங்கள் நாட்டில் நடந்த ஒரு நிகழ்வை சுட்டி காட்டியதற்காக அவரை வெளியேற்று என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சென்னை ஐஐடி உருவாக்க நிதி கொடுத்ததே ஜெர்மனி தான். இது பலருக்கு தெரியாது. ஐஐடியில் இவ்வளவு விஷயங்கள் நடைபெற்று வருகின்றது. ஆனால், அதுதொடர்பாக ஐஐடி நிர்வாகத்தினர் இதுவரை முறையாக பதில் அளிக்கவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள், இல்லை மறைந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. இந்தியாவை இந்து நாடாக்க முயல்கிறார்கள். இது நடக்காது, நடக்க போவதுமில்லை" என்றார்.

P chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe