/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6001.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ipl 001.jpg)
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த கூடாது என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள், அமைப்புகள் என அறிவித்திருந்த நிலையில் பல கட்ட பாதுகாப்பு போராட்டதிற்கு பின்னர் நேற்று சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேலான போட்டி நடந்து முடிந்திருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6002.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ipl 002.jpg)
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் சூழல் ஐபிஎல் போட்டிகள் போராட்டத்தை திசை திருப்புவதாக இருப்பதாக தமிழர் வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர், திரையுலகத்தை சேர்ந்தவர்கள் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தை அறிவித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6003.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ipl 003.jpg)
காவல்துறை சேர்ந்த இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் என 4000 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாலை தான் முற்றுகை போராட்டம் என்று நினைத்து இருந்த நிலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போடவே அதிர்ச்சி அடைந்த காவல்துறை உடனடியாக அவர்களை கைது செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6004.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ipl 004.jpg)
சேப்பாக்கம் மைதானதிற்கு அருகில் ரஜினி மக்கள் மன்றதை சேர்ந்த நிர்வாகிகள் போட்டியை காண வந்தவர்களிடம் கருப்பு கொடியை விநியோகம் செய்யவே அவர்களும் கைது செய்யபட்டனர். 5 மணியை நெருங்குவதற்கு முன்னரே அண்ணா சாலையில் காவல்துறை குவிக்கபட்டு இருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6005.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ipl 005.jpg)
சரியாக 4.30 மணி அளவில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கொடி, ஐபிஎல் எதிர்ப்பு பேனர்கள் என கோஷமிட்ட படி சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை கைது செய்யவே தனித்தனியாக சென்று சாலையில் அமர்ந்து சாலையை மறித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6006.jpg)
அதன் பின்னர் நாம் தமிழர் அமைப்பை சேர்ந்தவர்கள் வரவே சில நிமிடங்களில் சீமானும் போராட்டகாரர்களுடன் இணையவே மொத்த கூட்டமும் அவரை சூழ்ந்து ரோட்டில் அமர்ந்து கொண்டது. 5 மணி அளவில் இயக்குனர் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, பி.ஆர்.பாண்டியன், வெற்றிமாறன், கௌதமன், அமீர், தங்கர்பச்சன், ராம், தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டத்தில் சேர்ந்து கொண்டனர். அதிக அளவில் தமிழர் கலை இலக்கிய பண்பாடு பேரவையின் கொடிகளை பார்க்க முடிந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6007.jpg)
முதலில் பாரதிராஜா, வைரமுத்துவும் தொண்டர்களுடன் முன்னே செல்லவே தடுத்து நிறுந்தப்பட்டனர். வைரமுத்து போராட்டத்தில் கலந்து கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் போராட்டத்தில் அவரை பலரும் ஆச்சர்யமாக பார்த்தனர். அதன் பின்னர் மொத்த கூட்டமும் வாலாஜா சாலையை நோக்கி ஓட தொடங்கவே பதற்றம் அதிகமானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6008.jpg)
டி1 காவல் நிலையம் முன்பு அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். போராட்டக்காரர்கள் முன்பு செல்ல முயலவே நிலமையை கட்டுக்குள் கொண்டு வர தடியடி நடந்த தொடங்கினர்.இதில் பலரும் காவல் நிலையதிற்குள் ஓடினர். ஊடகத்தை சேர்ந்தவர்களின் கேமராகள் உடைக்கப்பட்டது. பலருக்கும் சரமாரியான தாக்க பட்டனர். இயக்குனர் வெற்றிமாறன், களஞ்சியம் ஆகியோரும் தாக்கபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6009.jpg)
அப்போது தனியாக மாட்டிக்கொண்ட காவலர் மீது போராட்டக்காரர்கள் சரமாரியாக தாக்க தொடங்கினார்கள். அதே வழியில் சிஎஸ்கே டி-ஷர்ட் அணிந்து வந்த ரசிகர்களை அதை கழட்ட சொல்லி விரட்டி அடித்தனர். தடியடிக்கு பின்னர் போராட்டக்காரர்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து தொடர் போராட்டதில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6010.jpg)
சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்ட கருணாஸ் கைது செய்யபடவே மீண்டும் வாலாஜா சாலையில் அமர்ந்த போராட்டகாரர்களுடன் சேர்ந்து கொண்டார். சாலையில் பிரதமர் மோடியின் கொடும்பாவிகள், சிஎஸ்கே அணியின் டி-ஷர்ட் என பலவற்றை தொடர்ந்து தீ யிட்டு எரிக்கபட்டுது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6011.jpg)
சிஎஸ்கே அணியின் டி-ஷர்ட் அணிந்து வந்தர்வர்களை பார்த்து அடிக்கவே ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். 6.30 மணிக்கு மேல் போராட்டதில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்ய தொடங்கியது. அனைவரும் கைது செய்ய படவே அதன் பின்னரே போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் குவிந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6012.jpg)
சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி செல்லவே தொடர்ந்து பரபரப்பான சூழல் இருந்தது. கருப்பு சட்டையுடன் வந்தவர்களை எந்த விதமான விசாரணையும் இல்லாமல் கைது செய்யபட்டனர். கிரிக்கெட்டை பார்க்க உள்ளே செல்ல டிக்கெட்களுடன் வெளியில் காத்திருந்த ரசிகர்களிடமிருந்து டிக்கெட்டை பிடிங்கி கிழிந்து விடவே அவர்களும் கைது செய்யபட்டனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் கோஷமிட்டு வந்தவர்களை காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்து வந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6013.jpg)
கருப்பு சட்டையுடன் உள்ளே சென்றவர்களை இலவச டி-ஷர்ட் கொடுத்து மாற்ற சொன்ன பின்னர் அனுமதிக்க பட்டனர்.ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களும் ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க கோரி கோஷமிட்டு முற்றுகை இடவே கைது செய்ய பட்டனர்.ஒரு புறம் போராட்டம் சென்று கொண்டு இருக்கவே டி-ஷர்ட் விற்பனை படுஜோராக சென்று கொண்டு இருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6014.jpg)
தனியார் பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை என பல கட்ட சோதனைக்கு பின்னர் உள்ளே சென்றவர்கள் மைதானதிற்குள் காலனியை வீசி நாம் தமிழர் கொடியை காட்டவே அதிர்ச்சி அடைந்த காவலர்கள் உடனடியாக வெளியே அப்புறப்படுத்தினர். மைதானத்துக்குள் கொடியை காட்டிய 11 பேரையும், காவலர்களை தாக்கிய 10 பேரும் கைது செய்யபட்டனர்.இத்தனை சோதனைக்கு பின்னரும் மைதானதிற்குள் கொடியுடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுதியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6015.jpg)
காக்கி சட்டையுடன் நின்று கொண்டு இருந்த ஆட்டோ ஓட்டுனர் போராட்டம் செய்ய வந்தவர்கள் என்று கருதி கைது செய்யவே பொது மக்கள் காவலர்களை சூழ்ந்து கொள்ளவே பின்னர் அனுப்பிவைக்க பட்டனர். கிரிக்கெட் போட்டியை காண சென்றவர்கள் பலரும் காவிரி பிரச்சனைக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாகவும் கிரிக்கேட்டில் அதை தொடர்பு படுத்தவேண்டாம் என்று கூறியதை பார்க்க முடிந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against ipl competition 6016.jpg)
இலங்கை அணி வீரர்கள் சென்னையில் வந்து விளையாட கூடாது என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் கூடிய போராட்டத்தை விட நேற்று கூடிய கூட்டம் அதிகம் என்று காவல் துறை தரப்பில் சொல்லபட்டது.
போராட்டம், தடியடி, கொடும்பாவிகள் எரிப்பு, கைது என அரசியல் கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு சேப்பாக்கத்தை அதிரவைத்து விட்டனர்.
படங்கள்: எஸ்.பி.சுந்தர், அசோக்குமார், குமரேஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)