Skip to main content

வேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...!!  

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
Mutton hall chennai

 

 

சென்னை பெரம்பூரில் மாநகராட்சி ஆட்டிறைச்சிக் கூடம் கரோனா தொற்று காரணமாக, 100 நாட்களையும் தாண்டி திறக்கப்படாததால், இந்த இறைச்சி கூடத்தை நம்பி உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் நூறு நாட்களையும் தாண்டி ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள், பல நாட்கள் பட்டினிக் கிடக்கிறார்கள் என்கின்றனர் அங்குள்ள வியாபாரிகள்.

 

சென்னை ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சபீர் அகமது மற்றும் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோரை சந்தித்தோம். 

 

அவர்கள் நம்மிடம், “கரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஊரடங்கு நடத்தினார்கள், அன்று விடுமுறை அளித்தோம். மார்ச் 25ல் இருந்து ஏப்ரல் 14 வரை ஊரடங்கு. அந்த நேரத்தில் இறைச்சி கூடத்தை மூடச் சொல்லி எங்களை கேட்கவில்லை, நாங்களாக முன் வந்து 15 நாட்கள் இறைச்சிக் கூடத்தை மூடினோம். அதற்கு பிறகு ஏப்ரல் 26ஆம் தேதியில் இருந்து இன்று வரை திறக்கவில்லை. கரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக ஊரடங்கு தொடங்கும்போது, நாங்களாகவே 15 நாட்கள் கடைகளை மூடி வைத்திருந்தோம். தொடர் ஊரடங்கால் 100 நாட்களையும் தாண்டி கடைகள் மூடப்பட்டுள்ளது. 

 

ஆட்டிறைச்சிக் கடைகளில் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மாட்டிறைச்சி கூடங்களில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் இந்த இறைச்சி கடைகளை நம்பி ரிக்க்ஷா ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்குபவர்கள், வெளியூரில் இருந்து ஆடு கொண்டுவருபவர்கள் உள்ளனர். இது இல்லாமல் 3,242 ஆட்டிரைச்சி கடைகளுக்கு சென்னை மாநகராட்சி லைசென்ஸ் கொடுத்துள்ளது. இதில் 90 சதவீத இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்துதான் இறைச்சி செல்கிறது. மாட்டிறைச்சியை பொறுத்தவரை நூறு சதவீதம் இங்கிருந்துதான் செல்கிறது. சைதாப்பேட்டை போன்ற இடங்களில் 40, 50 ஆடுகள் அறுக்கும் கூடங்கள் உள்ளன. அது அந்தந்த பகுதிகளுக்கு தேவைக்கு பயன்படும். ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுக்க வேண்டுமென்றால் இங்குதான் வர வேண்டும். அந்த அளவுக்கு வசதிகளும், தொழிலாளர்களும் உள்ள இடம் இது. 

 

தினந்தோறும் அதிகாலை மூன்றரை மணிக்கு வரும் தொழிலாளர்கள், வேலை முடிந்துதான் செல்வார்கள். அனைவரும் தினக்கூலித் தொழிலாளர்கள். இந்த தொழிலாளர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். 

 

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும், வியாபாரிகளையும், சில்லரை வியாபாரிகளையும் காப்பாற்ற உடனடியாக இந்த இறைச்சி கூடங்களை திறக்க அனுமதிக்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். 

 

 

chennai

 

கரோனா காலத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று சொல்லுங்கள், அதனை நாங்கள் பின்பற்றுகிறோம். முக கவசம் அணிவது, கையுறை அணிவது, மாநகராட்சி என்னென்ன சொல்கிறதோ அதனை முழுமையாக கடைப்பிடிக்கிறோம் என நாங்கள் எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்துவிட்டோம். 

 

மண்டல அலுவலகத்திற்கு போனால், 'எங்களுக்கு அதிகாரம் இல்லை' என்கிறார்கள். மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றால் 'உங்கள் மனுவை மேலிடத்திற்கு அனுப்பியிருக்கிறோம், அதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை' என்கிறார்கள். இந்த இறைச்சி கூடத்திற்கு பொறுப்பாக இருக்கக்கூடிய விஓ,  'எங்களுக்கு அதிகாரம் இல்லை, கமிஷ்னர் தான் ஆர்டர் போடணும்' என்கிறார்கள். 

 

 

chennai

                                  ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சபீர் அகமது

 

கமிஷ்னர் அலுவலகத்திற்கும் சென்றோம். அங்கும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இங்குள்ள கடைகளை இரண்டு பகுதியாக பிரித்து, பாதி வியாபாரிகளையும், பாதி தொழிலளார்களை ஒரு நாள் வேலை செய்ய விடுவது, மறுநாள் அந்த கடைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் விடுமுறைவிட செய்து, மீதி பாதி வியாபாரிகளையும், பாதி தொழிலளார்களை அடுத்த நாளில் பணி செய்ய விடலாம், இதுபோன்ற சுழற்றி முறையில் செய்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், அதிக கூட்டம் கூடாது என்றோம். 

 

நாங்களே முன்வந்து இன்னொன்றும் சொன்னோம். ஞாயிற்றுக்கிழமைதான் எங்களுக்கு வியாபாரமே. அந்த ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் விடுமுறை விட்டுவிடுகிறோம் என்று சொன்னோம். அரசு கடந்த ஒரு மாதமாகத்தான் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என சொல்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் கடைகளை மூடுகிறோம் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆணையர், இணை ஆணையர் அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக மனுவாக கொடுத்திருக்கிறோம். 

 

mmmm

 

இது இல்லாமல் நாங்களே ஒரு குழு அமைத்திருக்கிறோம். அந்த குழுவினர், கடைக்கு வருபவர்கள் மற்றும் கடையில் உள்ளவர்களை சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, மாஸ்க் அணிவது, கையுறை அணிவதை கடைப்பிடிக்கிறார்களா, கடைப்பிடிக்கவில்லை என்றால் கடைப்பிடிக்க அவர்கள் அறிவுறுத்துவார்கள் என்பதையும் எழுத்துப்பூர்வமாக மனுவாக கொடுத்திருக்கிறோம். அதிகாரிகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை. 

 

கடைசியாக பேச்சுவார்த்தையில் இறைச்சிக் கூடத்திற்கு பொறுப்பாக இருக்கக்கூடிய விஓ, பாதி கடைகளை திறந்து, பாதி தொழிலாளர்களை வைத்து இறைச்சி கூடத்தை நடத்தலாம் என்றார். அதற்கும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். 

 

மாநகராட்சி ஆணையரை நாங்கள் நான்கு முறை சந்திக்க சென்றோம். ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம், இரண்டு மணி நேரம் என உட்கார்ந்து காத்திருந்தோம். விசிட்டிங் கார்டு வாங்கிக்கொள்கிறார்களேயொழிய மாநகராட்சி ஆணையரை சந்திக்க முடியவில்லை. எங்களை சந்திக்காமல் நிராகரித்துவிட்டார். என்ன காரணத்திற்காக சந்திக்காமல் நிராகரிக்கிறார் என தெரியவில்லை. ஒரு நிமிஷம் எங்களை சந்தித்து, என்ன காரணத்திற்காக இறைச்சிக் கூடம் திறக்கவில்லை. எப்போது திறப்போம், என்ன திட்டம், யோசனை ஏதாவது தெரிவிக்கலாம். எந்த பதிலும் அளிக்கவில்லை. எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. இதுதான் எங்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.

 

118 ஆண்டுகள் பழமை வாய்ந்த இறைச்சிக் கூடம் ஆங்கிலேயர் காலத்தில் பெரம்பூரில் 1903ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த இறைச்சிக்கூடத்தில் தலைமுறை தலைமுறையாக பணியாற்றி வருகிறார்கள். இந்த இறைச்சிக் கூடத்தை நம்பி உள்ள ஆயிரக்கணக்கானவர்கள், நூறு நாட்களையும் தாண்டி ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள். பட்டிணிக் கிடக்கிறார்கள். அத்தனைப் பேரும் அன்றாடம் சம்பாதித்து சாப்பிடக்கூடிய தொழிலாளர்கள். சில்லரை வியாபாரியும் தினக்கூலித் தொழிலாளர்களைப் போலத்தான். 

 

இன்று காலை தொழிலாளர்கள், வியாபாரிகள் எல்லாம் ஒன்று கூடி எங்களுக்கு ஏதாவது பதில் சொல்லுங்கள் என்றோம். இந்த ஏரியாவின் இந்த ஜோனல் எக்ஸ்கியூடிவ் இன்ஜினீயர், புளியந்தோப்பு காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர் வந்திருந்தார்கள். மாலைக்குள் அதிகாரிகளுடன் பேசி முடிவை சொல்கிறோம். கலைந்து செல்லுங்கள் என கேட்டுக்கொண்டார்கள். நாங்களும் கலைந்து சென்றோம். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர் நம்பிக்கையுடன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓசியில் சிக்கன் பக்கோடா தராத கடைக்காரருக்கு கத்திக்குத்து-வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
shopkeeper who won't serve chicken baguettes;viral video

சென்னையில் ஓசியில் சிக்கன் பக்கோடா தராததால் கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றுக்கு வந்த இளைஞர்கள் சிலர் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடைக்காரர் தர மறுத்ததால் அந்த இளைஞர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் திடீரென சிக்கன் பக்கோடா கடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹெல்மெட் மற்றும் மரப்பலகையால் கடை உரிமையாளரை தாக்கியதோடு, கத்தியால் கடை உரிமையாளரின் கழுத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடிப்பதற்குள் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பினர் .பக்கோடா கேட்டு தகராறு செய்த அந்த இளைஞர்கள் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போலீசார் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.