m

மோடி அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், டெல்லி ஜமாலியா பல்கலைக்கழக மாணவ மாணவிகள் மீது காவல்துறை மூலம் நடத்தப்பட்டிருக்கும் கொடூரத் தாக்குதலைக் கண்டித்தும் 16-ந் தேதியில் இருந்து இரண்டு நாட்களாய் சென்னை பல்கலைக் கழக மாணவ மாணவியர் அறவழியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஐயோ போராடிய மாணார்களில் கார்த்தி, சுப்பையா என்ற இரண்டு மாணவர்களைக் கடத்தல் பாணியில் கைது செய்துகொண்டு போய் மறைத்து வைத்தனர்.

Advertisment

இதனால் மேலும் கொதிப்படைந்த மாணவர்கள், கைதான 2 மாணவர்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குரல்கொடுத்தனர். போராட்டம் தீவிரமடையத் தொடங்கியதால் திகைத்துப்போன காவல்துறையினர், உங்கள் பலகலைக் கழகம் உங்களை கைவிட்டுவிட்டது. உங்களை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டது. அதனால் நீங்கள் போராட்டத்தைக் கைவிடாவிட்டால் எங்கள் எங்கள் அதிரடி பாணியை நாங்கள் காட்டவேண்டிவரும் என்று போராடிய மாணவர்களை மிரட்டத் தொடங்கியது. மாணவர்களோ நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். எங்கள் போரட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் 17-ந் தேதி மாலை போராட்டக்களத்தில் இருந்த மாணவர்களை மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல் நேரில் சந்தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில் சென்னை இணை ஆணையர் சுதாகர் தலைமையிலான போலீஸ் டீம், நேற்று நள்ளிரவு 10’30 மணியளவில் போராடிய மாணவர்களைக் கைது செய்தது. இதைக்கண்ட சென்னை பல்கலைக் கழக அரசியல்துறைத் தலைவரான பேராசியர் ராமு.மணிவண்ணன், எங்கள் மாணவர்களை எங்கே கொண்டு செல்கிறீர்கள்? என்றபடி மாணவர்கள் ஏற்றப்பட்ட காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொண்டார். இதைத்தொடர்ந்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு அனைவரையும் அழைத்துச் சென்ற காவல்துறையினர், நள்ளிரவு 12 மணியளவில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

-நாடன்