/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rewind-deaths-2020-article.jpg)
2020, இத்தனை துயரமான சம்பவங்களைக் கொண்ட ஆண்டாக இருக்கும் என கடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இறுக்கம் நிறைந்த ஆண்டாகவே மக்கள் கடந்துவந்திருக்கும் இவ்வாண்டில் பிரபலங்கள் பலரின் திடீர் பிரிவும் அவ்வப்போது நம்மை அசைத்துப் பார்த்தன. பிரிவு என்பது உடலால் நம்முடன் அவர்கள் இணைந்திருப்பதற்கு மாறாக, இனி உள்ளதாலும் உணர்வுகளாலும் நம்முடன்இணைந்திருப்பார்கள் எனவும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி இந்த வருடம் நம்மைப் பிரிந்த பிரபலங்களில் சிலரைப் பற்றிய நினைவுகளை இப்பதிவில் சற்றே திரும்பிப்பார்க்கலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gdgrg.jpg)
எஸ்.பி.பி;
கர்ஜனை குரலாலும், அன்பை வெளிக்காட்டும் குணத்தாலும் கோடான கோடி ரசிகர்களை ரசிக்க, உருகவைத்த 'நம் பாடும் நிலா', இவ்வாண்டு தனது பிரிவினால் நம்மைக் கண்ணீர் சிந்த வைத்தார். இதற்கு முன்பும் நம்மைப் பலமுறை அழ வைத்திருக்கிறார். ஆனால், அது ஒரு கலைஞனின் கலையைப் புரிந்துகொண்டவருடைய உணர்வின் வெளிப்பாடு. ஆனால், இம்முறை நம் கண்களில் கொட்டியது அதுபோன்றதொரு கண்ணீர் அல்ல. 'இனி இந்த உலகில் அவர் இல்லையா? அவர் விட்டுச்சென்ற படைப்புகளின் மூலம்தான் இனி அவரை உணரப்போகிறோமா?' என்பது காதலியைப் பிரிந்த காதலனுக்கு இருக்கும் அதே வலியை ஒத்ததாகக் கூட கருதலாம். எஸ்.பி.பி நம்மைப் பிரிந்தபோது அந்த வலியைக் கோடிக்கணக்கானவர்கள் உணர்ந்தனர்.
இந்த 2020ஆம் ஆண்டை, பலரும் தங்களின் நினைவுகளிலிருந்து அழிக்கவேண்டும் என்று நினைப்பதற்குக் காரணமாக இருப்பது 'கரோனா'. இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த நம் பாடும் நிலா, செப்டம்பர் 25 அன்று வானுலகம் நோக்கிப் புறப்பட்டது. 70களுக்கு பிந்தையவர்கள் முதல் '2கே கிட்ஸ்' வரை எஸ்.பி.பி-யின் இழப்பைத் தனது குடும்ப உறவினரின் இழப்பாகவே பார்த்து, சமூக வலைதளங்களிலும், அவரவர் வீட்டிலும் கண்ணீர் சிந்தினார்கள். எத்தனை விருதுகள், எத்தனையோ பாராட்டுகள் என்று தனது வாழ்க்கையில் சாதனைகளிலேயே ராஜநடை போட்டிருந்தவர் எஸ்.பி.பி.. ரசிகர்களின் வெறுப்பைத் துளியும் சம்பாதிக்காமல் முழுக்க முழுக்க காதலையும் அன்பையும் மட்டுமே சம்பாதித்த மனிதாபிமானமிக்க இவரை இந்த ஆண்டு நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfgvdfg_1.jpg)
சுஷாந்த் சிங் ராஜ்புத்;
குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் நிகழும் எதாவது ஒரு பிரபலத்தின் மரணம், அதன் தன்மையால் மர்மமான மரணமாக மக்கள் மனதிலும் இடம்பிடித்துவிடும். அந்த மரணம் குறித்தான செய்திகள், திருப்பங்களாகவும் திரிக்கப்பட்டதாகவும் க்ரைம் நாவலைப்போல மக்களால் அணுகப்படும். சில சமயங்களில் அது பெரும் அரசியலாகக் கூட மாறும். அப்படி அண்மைக்காலத்தில் நடந்த ஒரு இறப்புதான், தோனியாக நடித்து பலரின் மனதைக் கொள்ளைக் கொண்ட சுஷாந்தின் இறப்பு. தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார் சுஷாந்த். அவருடைய மரணத்திற்குக் காரணம் பாலிவுட் 'நெபோடிஸம்' என்றும், தயாரிப்பாளர்களும் பெரிய நடிகர்களும் அவரை ஒதுக்கிவைத்தே கொன்றுவிட்டனர் எனவும் மக்கள் மத்தியில் கருத்துகள் எழுந்தன. பின்னர், இது இரு மாநில அரசியல் களத்திலும் விவாதமானது. நடிகை ஒருவரும் சுஷாந்திற்கு நியாயம் கிடைக்கச் செய்யப்போவதாகக் கூறி, பாஜகவில் இடம் தேடிக்கொண்டிருக்கிறார். இந்த வருடம் அவருடைய மரணத்திற்குப் பின் அவர் நடித்து வெளியான 'தில் பேச்சாரா' படம் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பெரும் சாதனையையும் படைத்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zdgsgbfxh.jpg)
இர்ஃபான் கான்;
இந்தியாவின் ஆகச்சிறந்த நடிகர்களுள் ஒருவர், இர்ஃபான் கான். தன்னுடைய மெத்தட் ஆக்டிங் மற்றும் கதை தேர்வுகளின் மூலமாக, படிப்படியாக சிகரத்தைத் தொட்டவர். அவருடைய சமகால நடிகர்கள் மசாலா படங்களில் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தபோது இவரோ கலைக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்த சமூகம் சார்ந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து நடித்தார். அதற்குக் கிடைத்த பலன்தான் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இந்திய நடிகராக, பல படங்களில் கோலோச்சினார். ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இர்ஃபான், அவருடைய தாய் மறைந்தபோது நேரில் சென்று இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாமல் தவித்த வீடியோ பலரையும் கலங்கடித்தது. கடைசியில் தாய் இறந்த ஒரு வாரத்திலேயே, அவரைத் தேடிச் சென்றுவிட்டார் இந்தச் சிறந்த நடிகர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sfvzsfsz.jpg)
வடிவேல் பாலாஜி;
டிவி நிகழ்ச்சிகளில் வடிவேலுவின் மினி வெர்சனாகத் தோன்றி தன்னுடைய காமெடி நடிகர்களின் டீமுடன் இணைந்து, நம்மை நீண்ட காலம் சிரிக்க வைத்த ஒரு நடிகர், வடிவேல் பாலாஜி. 45 வயதே ஆன இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது மாரடைப்பால் உயிரிழந்து ரசிகர்களை முதன்முறையாகச் சோகத்தில் கண்கலங்கவிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zdvgg.jpg)
சேதுராமன்;
சந்தானத்தின் நெருங்கிய நண்பர், அவருடன் இணைந்து 'கண்ணா லட்டு திண்ண ஆசையா' படத்தில் நாயகனாக நடித்தவர், நடிகர் சேதுராமன். மருத்துவப் படிப்பு பயின்றிருந்த சேது, பிரபல தோல் நோய் நிபுணராகவும் செயல்பட்டு வந்தார். லாக்டவுன் சமயத்தில், அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். லாக்டவுன் சமயத்தில் பிரபலங்கள் யாரும் துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள யோசித்தபோது, இறுதி அஞ்சலியில் நண்பரின் உடலை சுமந்துசென்றார் சந்தானம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 (1)_0.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zdsgvdg.jpg)
ரிஷி கபூர்;
பாலிவுட்டின் மதிப்பிற்குரிய குடும்பமான கபூர் குடும்பத்தின் ஆரம்பக்கால காதல் மன்னன் ரிஷி கபூர். நடிப்பு, காமெடி, இளைஞர்களை ஊக்குவிப்பது என்று ஜெண்டில்மேனாக இருந்தவர் ரிஷி கபூர். உடல்நலப் பிரச்சனை காரணமாக, அவ்வப்போது வெளிநாடுகளுக்குச்சென்று சிகிச்சை பெற்றுகொண்டிருந்த இவருக்கு, 'லாக்டவுன்' சமயத்தில் திடீரென உடல்நலப்பிரச்சனை ஏற்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காத அவர், ஏப்ரல் 30 அன்று மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dzgzsd.jpg)
சிரஞ்சீவி சர்ஜா;
நடிகர் அர்ஜூனின் உறவினரும், கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா, யாரும் எதிர்பாராத வகையில் 35 வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார். பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜின் கணவரான இவர், கன்னடத்தில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து அந்தத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். யாரும் எதிர்பாராத இந்த மரணம் கன்னடத் திரையுலகில் பெரும் இடியாக இறங்கியது. சிரஞ்சீவி சர்ஜா மரணமடைந்தபோது மெஞ்ஞா ராஜ் கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு ஜூனியர் சர்ஜா பிறந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kjkh.jpg)
சீன் கானரி;
ஜேம்ஸ் பாண்ட் நடிகர்கள் உலகம் முழுவதும் பிரபலமானவர்கள். அந்த வகையில் தொடக்க காலத்தில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துப் பிரபலமானவர் நடிகர் சீன் கானரி. 1962 முதல் 1983 வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் பாண்ட்திரைப்பட வரிசையில் 7படங்களில் நடித்தவர். இவற்றை தவிர, பல படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உலகளவில் மார்லன் ப்ராண்டோவுக்கு நிகரான அந்தஸ்தைப் பெற்றிருந்தவர். அவருடைய 90வது வயதில் உடல்நலக்குறைவால் இவ்வாண்டு மறைந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dgrxg.jpg)
மரடோனா;
'கால்பந்தாட்டத்தின் கடவுள்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிற ஜாம்பவான் மரடோனா. ஆண்டு முடியும் தருவாயில் திடீரென அவருடைய கோடிக்கான ரசிகர்களை ஏமாற்றிவிட்டு வானுலகம் நோக்கிப் புறப்பட்டார். மிகவும் பின்தங்கிய வர்க்கத்திலிருந்து கால்பந்தாட்ட திறமையை மட்டுமே சொத்தாக வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் பலருக்கு ஆட்டம் காட்டினார். விளையாட்டு மட்டுமின்றி ஏகாதிபத்திய கொள்கைக்கு எதிரான அவருடைய அரசியல் நிலைப்பாடும் இவருக்கு ஏரளமான ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. போதைப்பொருட்கள், மாஃபியா எனப் பல சர்ச்சைகளிலிருந்தாலும் கால்பந்தாட்ட மைதானத்தில் அவருடைய ஆட்டம் என்பது பலருக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். மூளைக்கட்டியால் அவஸ்தைப்பட்டு வந்தவருக்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அர்ஜெண்டினா வீட்டில் ஓய்வுஎடுத்து வந்தவர், நவம்பர் 25 அன்று திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். 'கடவுளின் கை' என்று சர்ச்சைக்குரிய கோலுக்குப் பெயரெடுத்தவர், தற்போது கடவுளுடன் கால்பந்து ஆடிக்கொண்டிருக்கலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dgtrgr.jpg)
கோபி பிரையண்ட்;
கூடைப்பந்து விளையாட்டில் மைக்கல் ஜோர்டனின் ஆட்டத்தைப் பார்த்த பலரும் அவரைப்போல வரவேண்டும் என்று ஆசைப்பட்டிக்கொண்டிருந்த சமயத்தில், “அடுத்த ஜோர்டனாக வேண்டாம், நான் முதல் கோபி பிரையண்டாக இருக்க வேண்டும்” என்ற முதிர்ச்சியை வெளிப்படுத்தினார் இந்த பிளாக் மாம்பா. நம்முடைய சமகால ஜாம்பவானக வலம்வந்த கோபி பிரையண்ட், பல சாதனைகளைப் படைத்தவர், இளம் வயதிலேயே மிகவும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் எனப் பல காரணங்களால் எக்கச்சக்க ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்திருந்தார். அவருடைய விளையாட்டைக் கடந்து அவரது தனிப்பட்ட நற்குணங்களுக்காகவே பல ரசிகர்கள் இருந்தனர். விபத்தில் பறிபோகும் உயிர், ஒரு சரியான கேள்விக்கு எழுதப்படும் முழுமைபெறா பதில் போன்றது. அதுபோல முழுமைபெறா பதிலாகவே ஹெலிகாப்டர் விபத்தில் தனது குழந்தையுடன் இவ்வாண்டு மரணமடைந்தார் கோபி பிரையண்ட்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gterge.jpg)
சாட்விக் போஸ்மென்'
‘வகாண்டா ஃபாரெவர்’ என நம்மை திரையரங்கில் முழங்க வைத்து சிலிர்ப்பூட்டியவர் பிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மேன். இதுவரை வெளியான 'மார்வெல்' திரைப்படங்களில் பெரும் வசூலை ஈட்டிய படங்களில் இதுவும் ஒன்று. யாருக்கும் தெரியாமல் புற்றுநோயுடன் நான்கு வருடங்கள் போராடவும் செய்து, அந்த வலியுடனேயே தனக்குப் பிடித்த நடிப்பிலும் கவனம் செலுத்தி ரசிகர்களைச் சம்பாதித்த போராட்டக்காரர் சாட்விக். 'பிளாக் பாந்தர் 2' படத்தை எதிர்நோக்கியிருந்த மார்வெல் ரசிகர்களை ஏமாற்றிவிட்டு, அவருடைய போராட்டத்தை அவருக்குள்ளேயே வைத்துக்கொண்டு நம்மை பிரிந்தும்விட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ghmjhk.jpg)
‘முல்லை’ சித்ரா;
பிரபல சீரியலில் பலருக்கும் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்து, நம்முடைய வீட்டுப் பெண்ணாக உணரவைத்தவர் முல்லை என்னும் சித்ரா. தொடக்கத்தில் வி.ஜே., அதனைத் தொடர்ந்து பல சேனல்களில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகத் திறம்படச் செயல்பட்டு, பின்னர் சீரியலில் நடிகையாகி பலரின் மனதைக் கொள்ளைக் கொண்டவர். திடீரென ஒரு காலையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தியின் மூலம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01_32.gif)