Skip to main content

பட்ஜெட் 2020: முக்கியத்துவம் பெருகின்றவை எவை? – ஒரு பார்வை!

Published on 01/02/2020 | Edited on 03/02/2020

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2020-2021 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். சாகித்திய அகாதெமி விருதுபெற்ற காஷ்மீரி மொழிக்கவிதை ஒன்றை வாசித்துக் காட்டி, தனது பட்ஜெட் உரையைத் தொடங்கினார். இந்த பட்ஜெட் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல் ஆகிய மூன்று நோக்கங்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.

 

 Budget 2020: What's Increasingly Important? - one look!


விவசாயத்தைப் பெருமிதப்படுத்தி ஆத்திச்சூடியில் எழுதப்பட்டிருக்கும் பூமி திருத்தி உண் என்ற வரிகளைப் படித்துக்காட்டி, விவசாயத்திற்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.


விவசாயம்


விவசாயத் துறையை மேம்படுத்தும் விதமாக இந்த பட்ஜெட்டில் 16 அம்ச திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் விதமாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்களை அமைக்க, 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கிராமங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தான்யலட்சுமி என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்கீழ் விதைகளை சேமித்து விநியோகிக்கும் செயல்பாடுகளில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுவார்கள். பெண்களுக்கான திட்டங்களுக்காவே 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். விளைபொருட்களைக் கொண்டுசெல்ல தனி ரயில்கள் கிசான் ரயில் என்ற பெயரில் இயக்கப்படவுள்ளன. தேசிய, சர்வதேச விமானப் போக்குவரத்து மூலம், விவசாயப் பொருட்களை கொண்டுசெல்ல, கிருஷி உடான் என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும். விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி நிதி கடனாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மொத்தமாக விவசாயத் துறைக்கு மட்டும் 2.83 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


சுகாதாரம்


தூய்மை இந்தியா திட்டத்திற்காக 12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் தனியாருடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகள். காசநோயை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க, 2025-ஆம் ஆண்டு காலக்கெடுவாக நிர்ணயிக்கப்படுள்ளது. கடந்த ஆண்டை விட 13 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கியதன் மூலம், இந்த ஆண்டுக்கான சுகாதாரத்துறைக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 112 மாவட்டங்களில் சிகிச்சை அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதுபோக, சுத்தமான காற்றுக்காக தனியாக 4 ஆயிரத்து 150 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

 

 Budget 2020: What's Increasingly Important? - one look!



கல்வித்துறை


கல்வித்துறைக்காக இந்த ஆண்டு 99 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் தனியாருடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். விரைவில் புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்படு. கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தேசிய போலீஸ் மற்றும் தேசிய தட அறிவியல் துறைக்கென பிரத்யேக பல்கலைக்கழகம் அமைக்கப்படும். திறன் மேம்பாட்டுக்கென தனியாக 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

அரசுப் பணியாளர் தேர்வு செய்யப்படும் முறையில், புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப் படவுள்ளன. தொடக்க நிலை அரசு பணியாளர்களைத் தேர்வுசெய்ய, தேசிய பணியாளர் தேர்வு முகமை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.


நீர்வளம்


இனிவரும் நாட்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய, நாடு முழுவதும் வீடுகளுக்கு குடிநீர்க் குழாய்கள் மூலம் நீர் வழங்க, ஜல் ஜீவன் என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகமாகிறது. இதற்காக, 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மேலும், நீர் வளத்திற்கென 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


வருமான வரி
 

 Budget 2020: What's Increasingly Important? - one look!

 

தனிநபர் வருமானத்தில் 5 லட்ச ரூபாய் வரை பெறுவோர், வருமான வரி கட்டத் தேவையில்லை. 5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பெறுவோர் இனி 10 சதவீதமும், 7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பெறுவோர் 15 சதவீதமும், 12.5 லட்ச ரூபாய் வரை பெறுவோர் 20 வருமான வரி செலுத்தினால் போதும். 15 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவோருக்கான வருமான வரியில் 30 சதவீதம் என்ற பழைய நிலையே தொடரும். இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.


தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக 85 ஆயிரம் கோடி ரூபாயும், பழங்குடியினர் நலனுக்காக 53 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்படுகிறது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை முற்றிலுமாக ஒழிக்க, விரைவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவைத் தொடர்ந்து, எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. அதேபோல், நீண்ட காலமாக விவாதத்தில் இருக்கும் ஐ.டி.பி.ஐ. வங்கியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவு பற்றியும் நிதியமைச்சர் பேசியிருக்கிறார். மருத்துவத்துறையிலும் தனியார் மயத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்து, அதன்மூலம் 2.1 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


அரசின் பொருளாதார செயல்பாடுகளின் மூலம், 2021-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும். அரசின் மொத்த செலவு 30 லட்சம் கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை மூன்றரை சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.


சுமார் 2 மணி 43 நிமிடங்கள் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதன் மூலம் மிகநீண்ட பட்ஜெட் உரையை வாசித்த இந்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கால அளவை பொறுத்து மிகப்பெரிய உரையாக இதனை எடுத்துக்கொண்டாலும் வேலைவாய்ப்பு, இளைஞர்களின் எதிர்காலம் போன்ற அடுத்த தலைமுறைக்கு தேவையான பல விஷயங்கள் தேடித் துழாவினாலும் கிடைக்காத வகையில், திட்டங்கள் ரீதியாக குறுகிய உரையாகவே பார்க்கவேண்டியுள்ளதாக பல கருத்துகளும் எழுந்து வருகின்றன. மிகநீண்ட பட்ஜெட் உரை என்பதை கடந்து, பல வளர்ச்சி திட்டங்கள் இதில் இருக்கின்றன என பாஜகவினர் கூறும் அதேநேரம், இது ஒரு வெற்று அறிக்கை என ஒருதரப்பு இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.