பா சட்டத்தின் கீழ் சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம் .

Advertisment

குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், தற்போது உபா (UAPA) சட்டம் உங்கள் மீது பாய்ந்துள்ளது?

Advertisment

thirumurugangandhiஎல்லாமே காலனி ஆதிக்க சட்டங்கள். "உபா'வை எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கமே நடத்தியிருக்கிறோம். அப்படியிருக்கும் போது எங்கள் மீது "உபா'வை போட்டு அச்சுறுத்துவது மூலமாக அனைத்தையும் முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை.

சிறைக்குள் உங்களை எப்படி நடத்துகிறார்கள்?

தனிமைச் சிறையில்தான் என்னை அடைத்திருக்கிறார்கள். சரியா உணவு இல்லை. உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சிறைக்குள் யாரையும் பார்க்க அனுமதிப்பது இல்லை.

Advertisment

உங்கள் மீது தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டு வருகிறதே?

தேர்தல் வரப்போகிறது, பா.ஜ.க.விற்கு எதிராக பேசக்கூடாது என்பதற்காக இப்படி செய்து வருகிறார்கள்.

பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவும், அவர்களின் கருத்துகளை பேசியதற்காகவும் வழக்குகள் போடபட்டு இருக்கிறதே?

தமிழர் உரிமை சார்ந்து பேசக்கூடிய விஷயங்கள் என அனைத்தையும் முடக்கவேண்டும் என்பதே அவர்களின் முழு எண்ணமாக இருக்கிறது. பா.ஜ.க.வின் பொம்மை அரசாகத்தான் அ.தி.மு.க. அரசு இருக்கிறது.

உங்கள் மீது 40 வழக்குகளுக்கு மேல் இருப்பதாகச் சொல்கிறார்கள்?

பொதுவான நபர்கள் இதைப் பார்த்தால் பயந்துவிடுவார்கள்... அதன் மூலம் இந்த இயக்கத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் எங்களுக்கான ஆதரவு வளர்ந்து வருகிறது. சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றம் வரும்வழியில் கிராமத்தில் சிக்னலில் நிற்கும் போது அங்கிருந்த மக்கள் வந்துபேசுகிறார்கள் . இதற்காக அரசுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

தேர்தல் அரசியலில் இல்லாத உங்கள் மீது ஏன் இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது?

தேர்தல் அரசியலில் ஈடுபடும் அவர்களுக்கு வெற்றி தோல்வி என்பது முக்கியம் அல்ல. ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிர்க்கக்கூடியவர்கள் நாங்கள்; எங்களை நேரடியாக மேடையில் அவர்களால் எதிர்க்க முடியாது. அதனால் சட்டத்தை, காவல்துறையை பயன்படுத்தி முடக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சிறையில் என்ன புத்தகம் படித்து வருகிறீர்கள்?

சுனில்குமார் ஜோஷி எழுதிய 1917 முதல் 1947-வரை இருந்த சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா குறித்த புத்தகத்தை படித்துவருகிறேன்.