Advertisment

கருத்துக்கணிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக! அதிர்ச்சி தகவல்!

மும்பை பங்குச் சந்தையில் திங்களன்று ஒரே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் எகிறியது. முதல் நாள் ஞாயிறு மாலை வெளியான வாக்குப் பதிவிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதுதான் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணை உயரவைத்தது. இப்படிப் பலக் குறியீடுகளை எக்ஸிட் போல் மூலம் உருவாக்க நினைக்கிறது பா.ஜ.க. என்கிறார்கள் டெல்லி அரசியல் நோக்கர்கள்.

Advertisment

bjp

நீண்ட அனுபவம் மிக்க மூத்த பத்திரிகையாளரைத் தொடர்புகொண்டபோது, மகாராஷ்ட்ரா முதல் டெல்லி வரை பா.ஜ.க. சுனாமி இருப்பதாக இந்தக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகளைவிட பா.ஜ.க. பலமான வெற்றியைப் பெறும் என்கிற கணிப்புகள், தமிழ்நாடு, ஒடிசா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் வேறு விதமான கணிப்புகளை வெளிப்படுத்துகின்றன. மேற்குவங்கத்தில் திரிணாமுலுக்கும் பா.ஜ.க.வுக்கும் நெருக்கமான போட்டி இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

Advertisment

bjp

லோக்கல் வேட்பாளர், மாநிலத்தில் உள்ள பிரச்சினை எல்லாவற்றையும் பின்தள்ளி மோடியின் இமேஜை முன்வைத்தே கணிப்புகள் வெளியாகியுள்ளன. உ.பி.யில் அமைந் துள்ள அகிலேஷ்+மாயாவதி கூட்டணி, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளம்+ காங்கிரஸ் கூட்டணி இவற்றின் தாக்கம் எப்படி என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் காட்ட வேண்டும். சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற ராஜஸ் தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பா.ஜ.க. முழுமையாக வெல் லும் என்கிற கணிப்புகளின் தன்மையும் கவனிக்கத் தக்கவை. இதன் மூலம் நெருக்கமான-கடுமையான போட்டிகள் உள்ள பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை வரை பா.ஜ.க. கவனம் செலுத்தி, எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க விரும்புகிறது'' என்றார் விளக்கமாக.

modi

மக்களின் தீர்ப்பை மாற்றி எழுதுவதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் திட்டமிடுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் கவுண்ட்டிங் ஏஜெண்ட்டுகளை கவனப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமா என ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். மதுரை ஓட்டு எண்ணும் அறைக்கு சீல் வைக்காமல் உள்ளே நுழைந்த சம்பவம், தேனியில் புது ஓட்டு மெஷின்களைக் கொண்டு வந்தது ஆகியவை தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. கருத்துக்கணிப்புகள் மூலம் எதிர்கட்சிகளை பதட்டமடைய வைத்து, அவர்களை திசைதிருப்பி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மோசடியான வெற்றியை அடைய பா.ஜ.க. திட்டமிடுகிறது என உடனடியாக எச்சரித்தார் மம்தா. எனினும், இயந்திரத்தில் பதிவான வாக்குகளை மாற்ற முடியாது. ஆளுந்தரப்புக்கு ஆதரவாக புது ஓட்டு மெஷினில் அதிக வாக்குகளைப் பதிவு செய்து, பழைய மெஷினுக்குப் பதில் அதை வைப்பது என்பதும் அத்தனை எளிதானதல்ல. அதனால், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில், குறைந்த வாக்கு வித்தியாசம் நிலவினால், அங்கே தேர்தல் அதிகாரிகள் துணையுடன் மோசடி செய்ய முடியும். 2016 சட்டமன்றத் தேர்தலில் பகல் 11 மணிக்கு மேல் பல தொகுதிகளில் அ.தி. மு.க. இதனைக் கடைப்பிடித்து ஆட்சியைத் தக்கவைத்தது. அதற்கு தேர்தல் ஆணையமும் ஒத்துழைத்தது. அப்போது மோடியும் ஜெ.வை ஆதரித்து வாழ்த்தினார். இப்போது மோடி அதே ஃபார்முலாவைக் கையாளலாம்'' என்றார்.

modi

தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பு மூலம், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் பா.ஜ.க.வின் வெற்றியை அறிவிக்கச் செய்வது, மாநிலங்களில் உள்ள உதிரிக்கட்சிகள் முன்னணி பெறும் இடங்களைத் தங்களுக்கு சாதகம் ஆக்குவது அல்லது அவர்களை விலை பேசுவது, காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணையும் கட்சிகளின் வியூகங்களை முறியடிப்பது, அதற்கேற்ப கருத்துக் கணிப்புகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட கோல்மால்களுக்கு மோடி டீம் ரெடியாகியுள்ளது அம்பலமாகி யிருக்கிறது. கணிப்புகளுக்கு மாறான முடிவுகள் வெளியானால், இந்த கோல்மால்களும் மக்கள் முன் அம்பலமாகும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

loksabha election2019 congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe