Skip to main content

அதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!

திரைத்துறையினரை மட்டுமல்ல ஆளும்கட்சியினரையும் மிரள வைத்திருக்கிறது விஜய் தொடர்பான வருமான வரித்துறை ரெய்டு நடவடிக்கை. சினிமா வி.ஐ.பி.க்களோ, அரசியல் வி.ஐ.பி.க்களோ இரண்டு, மூன்று பேர் தனியாக சந்தித்துக் கொண்டாலே, ரெய்டு குறித்த கவலைகளைத்தான் பகிர்ந்துகொள்கிறார்கள்.

டெல்லியில் கோலோச்சும் தமிழக அதிகாரிகளிடம் ரெய்டு குறித்து விவாதித்தபோது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மோடி அரசாங்கத்தை உற்றுக் கவனித்தால், வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் நடத்திய சோதனைகளில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகம்தான் என்கிற உண்மை புரியும். தேர்தல் வெற்றியை பணத்தின் மூலம் பெறலாம் என்கிற நம்பிக்கையையும் அதன் ருசியையும் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியாளர்களும் கடைப்பிடிக் கின்றனர்.

 

vijayதேர்தலுக்காக பணத்தை பதுக்கும் அ.தி.மு.க.வின் திட்டத்தை அவ்வப்போது முறியடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க. தலைமையின் மறைமுக அஜெண்டா. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆளும்கட்சி தலைமை பதுக்கி வைத்த பணக்குவியல்களை 2018-லேயே வருமான வரித்துறை கணக்கெடுத்திருந்தது. அதில், எடப்பாடியின் நெருங்கிய உறவினர்களும், அவரது நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டர்களும் சிக்கினர். குறிப்பாக, எடப்பாடியின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுஞ்சாலைத் துறையின் காண்ட்ராக்டர் செய்யாதுரை, எடப்பாடியின் உறவினர்களான ஈரோடு ராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் நிறுவனங்களிலும் பங்களாக்களிலும் ரெய்டு நடத்தி சுமார் 1,300 கோடி ரொக்கமாகவும் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியது வருமானவரித்துறை. நாடாளுமன்றத் தேர்தலுக்காக சேமித்து வைக்கப்பட்ட பணம் என்பதை விசாரணையில் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரெய்டு சமாச்சாரத்தை சுட்டிக்காட்டியே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தது பா.ஜ.க. இதற்கு பல காரணங்கள் இருந்தன. அது வேறு விசயம்.


தேர்தல் நேர ரெய்டு என்ற விமர்சனம் வராதபடி குறைந்தட்சம் 10 மாதங்கள் முன்பே ரெய்டுகளை நடத்துவது பா.ஜ.க. பாலிசி. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அ.தி.மு.க.வுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியைத் தொடர பா.ஜ.க. விரும்பவில்லை. எம்.பி. தேர்தலில் 25 சீட்டுகளில் நாம் ஜெயிப்போம் என அ.தி.மு.க. கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கூட்டணி போட்டது பா.ஜ.க. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் மக்களின் முடிவு வேறுமாதிரி இருக்கும் என பா.ஜ.க. தலைமைக்கு உளவுத்துறை நோட் போட்டிருக்கிறது.

 

 

dmkஇதற்கிடையே, அரசியல் கட்சி துவங்குவதை பா.ஜ.க. தலைவர்களிடம் உறுதி கொடுத்திருக்கிறாராம் ரஜினி காந்த். அதேசமயம் அரசியல் என்ட்ரிக்கான வெற்றி வாய்ப்புகளையும் அவர் கவனிக்கிறார். அதற்கேற்ப, ரஜினி தரப்பால் முன்வைக்கப்பட்ட சில திட்டங்களுக்கு டெல்லி ஒப்புக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, தேர்தல் நேரத்தில், ஆட்சியில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இருக்கக்கூடாது என்பது முக்கியமானது. அப்படி நடந்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க ரஜினி தயங்கமாட்டார் என சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ரஜினியுடன் கூட்டணி உருவானால் பணத்தை வைத்து தேர்தலை எதிர்கொள்ள நினைக்கும் ஆளும் கட்சிக்கு முதலில் செக் வைக்க வேண்டும் என திட்டமிடுகிறது பா.ஜ.க. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த ரெய்டுகள்.


அதாவது, பணப் பரிவர்த்தனைகள் எதுவும் ரொக்கமாக இருக்கக்கூடாது என்பது மோடியின் செயல்திட்டம். ஆனால், தமிழகத்தில் கோடிக்கணக்கான பணம் ரொக்கமாகவே குவிக்கப்பட்டு வருகிறது என வருமானவரித்துறையும் அமலாக்கத்துறையும் பிரதமர் அலுவலகத்துக்கு ஒவ்வொரு மாதமும் ரிப்போர்ட் அனுப்பி வருகின்றன. இது குறித்து ரகசிய விசாரணை நடத்திய டெல்லி, தேர்தலை எதிர்கொள்ள இப்போதே ஆளும் கட்சி பிரமுகர்களும், பா.ஜ.க.வையும் ரஜினியையும் வீழ்த்த வெளிநாடுகளிலுள்ள முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகளும் சினிமா பிரபலங்கள் மூலம் பணத்தை தமிழகத்துக்குள் குவிக்கின்றன என்பதை தெரிந்துகொண்டு, அதனைக் கைப்பற்றவே வருமானவரித் துறைக்கு உத்தரவுகள் பறந்தன. மேலும் பலர் குறிவைக்கப்பட்டிருப்பதால் பணப்பதுக்கலை சுத்தமாக துடைத்தெறிந்து விட்டு அதன்பிறகு ஆட்சியை கவிழ்ப்பதற்கான செயல்திட்டம் விறுவிறுப்பாகும். ஆகஸ்ட் வரைதான் ஆளும்கட்சிக்கு ஆயுள்'' என்கின்றனர். தி.மு.க.வின் பண விநியோகத்தைத் தடுக்கவும் வியூகம் வகுத்துள்ளது பா.ஜ.க.

மேலும் விசாரித்தபோது, "நடிகர் விஜய் மீது வருமானவரித்துறையை விட அமலாக்கத்துறைதான் அதிகம் குறி வைத்திருக்கிறது. மோடி-ரஜினி கூட்டணி உருவானால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க கிறிஸ்துவ அமைப்புகள் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும். விஜய்யும் அதற்கு ஒப்புக்கொள்வார். அதனால், அந்நியச் செலாவணி விவகாரத்தில் விஜய்யை சிக்க வைக்க பல்வேறு வழிகளை ஆராய்ந்து சில டாகுமெண்டுகளை எடுத்திருக்கிறார்கள் அமலாக்கத்துறையினர். அதன் விசாரணைதான் விஜய்க்கு சிக்கலை அரசியல்ரீதியாக ஏற்படுத்தும்'' என்கிறது அதிகாரிகள் தரப்பு.


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்