Skip to main content

தமிழ்நாட்டில் கலவர அரசியலை முன்னெடுக்கிறதா இந்துத்துவ அமைப்புகள்!!!

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தனித்துவமானது. பிரச்சாரத்திலும் சரி, வாக்குறுதிகளிலும் சரி இந்தியா முழுமைக்கும் ஒரு அரசியல் வேண்டிருந்தால் தமிழ்நாட்டிற்கு மட்டும் வேறொரு அரசியல் செய்யவேண்டும்.

 

periyar

 

எடுத்துக்காட்டிற்கு இந்தியா முழுமைக்கும் இந்து மதத்தையோ, இந்துக்கடவுள்களையோ, இந்துமத பழக்கவழக்கங்களை வைத்தோ அரசியல் செய்துவிடலாம். ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அந்த அரசியல் எடுபடாது. இந்த தனித்துவத்தை உடைப்பதற்கு பல தேசிய கட்சிகளும்கூட முயற்சி செய்கின்றன. குறிப்பாக வன்முறை பிரச்சாரத்தை மேற்கொள்ள சில இந்துத்துவ கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. 
 

நாகாலாந்தில் லெனின் சிலை உடைக்கப்பட்டபோது, எச்.ராஜா லெனின் சிலை உடைக்கபட்டதுபோல் தமிழ்நாட்டில் பெரியார் சிலை உடைக்கப்படும் எனப்பேசினார். இதைத்தொடர்ந்து அது மிகுந்த சர்ச்சையாகி போராட்டக்களமானது. இதுபோலவே தொடர்ந்து அவர் பல கருத்துகளை தெரிவித்துவந்தார். அதுபோலவே தற்போதும் நடந்துள்ளது. முன்பு ஒருமுறை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, புராணத்திலுள்ள கிருஷ்ண அவதாரம் குறித்து பேசினார். அதை இப்போது பரப்பி சர்ச்சைக்குள்ளாக்கினர்.
 

periyar


கடந்த ஏப்ரல் 5ம் தேதி திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பேச வீரமணி வந்திருந்தார். அப்போது அங்கிருந்த இந்து முன்னணியினர் மேடைமீது கற்களையும், செருப்பையும் வீசி எறிந்தனர். இதில் இருவர் காயமுற்றனர். அதைத்தொடர்ந்து மர்மநபர்கள் அறந்தாங்கியிலுள்ள பெரியார் சிலையை உடைத்தனர். தற்போது வீரமணி சென்ற காரில் கற்களை எறிந்துள்ளனர். 
 

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள்தான் ஆட்சியிலிருந்து வருகின்றன. தேசிய கட்சிகள் எவ்வளவு முயன்றும் அது பலிக்கவில்லை. இந்த திராவிட கட்சிகளுக்கு மூலமாக இருப்பது பெரியாரும், திராவிடர் கழகமும் இருக்கிறது. ஒரு இடத்தின் பலமான நம்பிக்கையை உடைத்து அதன்மூலம் அந்த இடத்தில் பாஜக காலூன்ற தொடங்கும், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பலமான நம்பிக்கை பெரியாரும், திராவிட கருத்துகளும்தான். ஒருவேளை அதனால்தான் அதன்மீது தாக்குதல் நடத்துகிறார்களோ? ஒருவேளை வடநாடுகளில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், லெனின் சிலை உடைப்பு போன்று இங்கும் பிரச்சாரம் நடத்துகிறார்களோ?  என்றும் கேள்வியெழுந்துள்ளது.

 

 

 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.