Advertisment

பா.ஜ.க. ஹெச்.ராஜாவுக்கு பதிலடி தந்துள்ள காங்கிரஸ் விஷ்ணுபிரசாத்! ட்விட்டர் பரபரப்பு!

h raja - Vishnu Prasad

Advertisment

கறுப்பர் கூட்டம் என்கிற பெயரில் வெளியாகும் யூ டியூப் சேனலில், கந்த சஷ்டி பாடல் குறித்து ஆபாசமாக விமர்சித்ததாக சர்ச்சைகள் எழுந்தன. கடும் கண்டணங்களும் எழுந்த நிலையில் கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். தமிழ்க் கடவுளான முருகன் குறித்து எழுந்த சர்ச்சைகள் இன்னமும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் தவிர, கறுப்பர் கூட்டத்தை யாருமே கண்டிக்கவில்லை என பா.ஜ.க. பிரமுகர் ஹெச்.ராஜா ட்வீட் செய்திருக்கிறார். இதற்குப் பதிலடி தந்துள்ளார் காங்கிரஸ் எம்.பி.டாக்டர் விஷ்ணுபிரசாத்.

Vishnu Prasad

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள டாக்டர் விஷ்ணுபிரசாத்,

Advertisment

"கறுப்பர் கூட்டம், நம் தமிழ்க் கடவுள் முருகருக்கான பாடல் கந்தசஷ்டியை கொச்சைபடுத்தியதை, நான் கடுமையாகக் கண்டனம் தெரிவித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 17ஆம் தேதியே டிவீட் போட்டும் ஊடகங்களுக்கும் அனுப்பியிருந்தேன்.

எச்.ராஜா, ஏதோ பா.ஜ.க.வும், இந்து அமைப்புகள் மட்டும் கண்டனம் தெரிவித்ததாக இப்போது கூறியிருக்கிறார். எல்லாவற்றிலும் முந்திக் கொள்ளும் ராஜா இதில் ஏன் அமைதி காத்தார் என்று பா.ஜ.க.வினரே வினவினார்கள்.

தமிழக பா,ஜ,க, தலைவர் பெயரே முருகன் என்பதால் அமைதியாக வேடிக்கை பார்த்தாரோ? ராஜா அவர்கள் முழுமையாக அறிந்துவிட்டு கருத்து சொல்ல வேண்டும். எந்த மதக் கடவுளை விமர்சனம் செய்தாலும், அதை காங்கிரஸ் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது" என்று பதிலடி தந்திருக்கிறார்.

இந்தப் பதிலடி, பா.ஜ.க.-காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

congress Vishnu Prasad H Raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe