Advertisment

35 சிறுமிகளை அடைத்து வைத்து பலாத்காரம்; மாஜி எம்.எல்.ஏ கைது     

35 சிறுமிகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்த வழக்கில் 8 பெண்கள் உட்பட முன்னாள் எம்எல்ஏ.வும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

b

பீகார் மாநிலம் முசாபர்பூரில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் அரசு நிதி உதவியுடன் சிறுமியர் காப்பகம் நடத்தி வந்தார். காப்பகத்தில் உள்ள சிறுமியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி காப்பகத்தில் இருந்த 35 சிறுமிகளை மீட்டனர். பின்னர் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மருத்துவ சோதனையில் தெரிய வந்தது.

Advertisment

இதையடுத்து பிரஜேஷ் தாக்கூர் உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை சரியாக நடைபெறாது என்பதால் நீதிமன்ற உத்தரவினால் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

டெல்லியில் சாஹேத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த பின்னர், 35 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 8 பெண்கள் உட்பட 19 பேர் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பிரிஜேஷ் தாக்கூர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

19 பேருக்குமான தண்டனை குறித்த விவரங்கள் ஜனவரி 28-ம் அறிவிக்க இருக்கிறது நீதிமன்றம்.

Bihar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe