Advertisment

பீகார் தேர்தல் முடிவு; எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பெரிய 'மெசேஜ்'

024

Bihar election results; A 'big message' for all political parties Photograph: (election)

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வென்றிருக்கும் நிலையில் பலரும் தங்களது பார்வைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் தேர்தல் முடிவுகள் குறித்த அவரது கருத்தை நக்கீரன் டிவி  யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

பீகார் தேர்தல் முடிவுகளை பற்றிய உங்கள் முதல்கட்ட பார்வை என்ன?

025
Bihar election results; A 'big message' for all political parties Photograph: (election)
Advertisment

''வேவ் எல்லாம் இல்லை.'சுனாமி' அப்படித்தான் சொல்ல வேண்டும். ஒரு மிகப்பெரிய ஒரு சுனாமி, ஒரு ஆழி பேரலை வந்து இந்தியா கூட்டணியை தூக்கி வாரி சென்றுவிட்டது. அப்படித்தான் இதை பார்க்க வேண்டும். வெறும் எஸ்ஐஆரால் இது நடந்தது, தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதன் காரணமாக இது நடந்தது என்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது. இது மக்களுடைய தீர்ப்பு. நிச்சயமாக எதிர்கட்சிகள் இதற்கு தலை வணங்கியே ஆக வேண்டும். இரண்டாவது இது எப்படி சாத்தியப்பட்டது என்றால் நிதீஷ்குமாருக்கு பெண்கள் கிட்ட இருக்கிற அந்த அதீத ஆதரவு. மது இல்லாத மாநிலமாக பீகார் அறிவிக்கப்பட்ட பிறகு அவருக்கு பெண்களிடம் அமோக வரவேற்பு இருக்கிறது. மதுவிலக்கு சாத்தியமா? சாத்தியம் இல்லையா? என ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம்.

மதுவிலக்கினால் இருக்கக்கூடிய பின்விளைவுகள், கள்ளச்சாராய மரணங்கள், கள்ளச்சாராயம் எந்த அளவுக்கு சொசைட்டியில் ஊன்றி கிடக்குது இதெல்லாம் வேறு. ஆனால் இந்த மதுவிலகிற்கு பெண்கள் கிட்ட மிகப்பெரிய அளவில் நிதிஷ் குமாருக்கு ஒரு ஆதரவை கொண்டு வந்திருக்கிறது. மற்றொன்று 10,000 ரூபாய் பணம். அந்த பணம் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய பிளஸ்ஸா மாறி இருக்கு.  இதனால் பாஜக எவ்வளவு எளிமையாக அவங்களோட நரேட்டிவை மாற்றி அதை வெற்றிகரமாக தேர்தல் வியூகமாக கொண்டு வருகிறார்கள் என்பது முக்கியம்.

தமிழ்நாட்டில் 1000 ரூபாய் கொடுப்பது தவறு என்கிறார்கள். அது நல்வாழ்வு நடவடிக்கை கிடையாது. அது ஒரு இலவசம். ரேவடி கல்ச்சர் என்று பிரதமர் உத்தரப்பிரதேசத்தில் பேசுகிறார். ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் கொடுப்பது சரியாக இருக்கும். கொடுத்தா ஓட்டு நமக்கு வரும் என உடனே மத்திய மகாராஷ்டிராவில் அதை நடைமுறைப்படுத்தி ஜெயிக்கிறாங்க. பீகாரில் தொழில் தொடங்கும் பெண்களுக்கு 10,000 ரூபாய் கொடுக்கறாங்க. இதில் சக்சஸ்புல் ஆகுறவங்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை சுயத்தொழில் செய்வதற்கு கொடுக்கிறார்கள். ரேவடி கல்ச்சர் என்று ஒரு இடத்தில சொல்லிவிட்டு அதே விஷயத்தை அவங்க செய்தாலும் கூட, அதை யாரும் கேள்வி கேட்காத வகையில் அதை செய்து முடிக்கிறாங்க. அப்படி ஒரு வியூகத்தை பாஜக பண்றாங்க. 

இன்னொன்னு 'சோசியல் இன்ஜினியரிங்' சமூகங்களுக்கு மத்தியில் ஒருவருக்குள் ஒருவருக்கு பிரச்சனை இருந்துகிட்டே இருக்கும். ஆனா அந்த சமூகங்களை எல்லோரையும் ஒன்றாக கொண்டு வந்து, எல்லோரையும் பாஜக அப்படிங்கிற ஒரு கட்சியின் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்து சோசியல் இன்ஜினியரிங், காஸ்ட் போலரைசேஷன் என்பவைகளை ஒரு பக்கமா விடாம பண்றாங்க. இதையெல்லாம் மீறி அவங்க பண்ற மிகப்பெரிய விஷயம் என்னன்னா 'மைக்ரோ லெவல் பிளானிங் ஆஃப் எலக்சன்ஸ்' 60,000 பூத் என்றால் 60,000 பூத்துக்கு 60,000 பேர். அந்த 60,000 பேரோட போன் நம்பர் என்கிட்ட இருக்கும். அந்த 60,000 பேர் என்ன பண்ணனும் என்கிற வேலையை நான் சொல்லுவேன். இதுதான் வெற்றிக்கு காரணம். எஸ்ஐஆரில் இவ்வளவு பேரை எடுத்துவிட்டார்கள் என்பது ஒரு பிரச்சனைதான். ஆனால் அது மட்டுமே பிரச்சனை அல்ல.

026
Bihar election results; A 'big message' for all political parties Photograph: (election)

தேர்தல் ஆணையம் மீது ஆயிரம் விமர்சனங்கள் ஒரு பத்திரிகையாளராவே எனக்கு இருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு 2000 விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அதை வைத்து கொண்டு மட்டுமே மக்களுடைய தீர்ப்பை நீங்கள் கொச்சைப்படுத்தி விட முடியாது. கொச்சைப்படுத்தவும் கூடாது.

இது ஜனநாயகத்துக்கு எதிரான போக்கு என சொல்வதெல்லாம் வாதங்கள்தான். பணம் மக்கள் கைக்கு போய்விட்டது. பணம் கொடுத்தது யாரு? நிதீஷ் குமார்-மோடி அரசு. இண்டியா கூட்டணி கொடுக்க போறேன்னு சொல்றாங்க. எப்படி கொடுப்பாங்க? முதல்ல அறிவிப்பவர்களுக்கு  மட்டும்தான் எப்பவுமே முதல் முன்னுரிமை. 1000 ரூபாய் மகளிர் உதவி தொகை கொடுப்போம் என்று  திமுக சொன்னாங்க. 1500 ரூபாய் கொடுப்போம் என்று அதிமுக சொன்னாங்க. 500 ரூபாய் கூடுதலாக கொடுப்போம் என தேர்தல் அறிக்கையில் அதிமுக சொன்னாங்க.  எங்க தேர்தல் அறிக்கையை திமுக லீக் பண்ணிடுச்சு, எங்க தேர்தல் அறிக்கையை எப்படியோ அவங்க தெரிஞ்சுக்கிட்டாங்க. இது எங்களோட ஒரிஜினல் திட்டம் என்று அதிமுக பொன்னையன் சொன்னாரு. ரெக்கார்ட் இருக்கு எடுத்து பாருங்க.

தேர்தல் ஆணையம் மேல் குற்றம் சொல்லிக்கிட்டே போகலாம். அதை ஏன் தொடர்ச்சியாக முன்னெடுத்து நீதிமன்றத்திற்கு போகவில்லை, நீங்க ஏன் மக்கள் மன்றத்தில் அதை கொண்டு போய் வைக்கவில்லை. இண்டியா கூட்டணிக்குள் சுணக்கம் இருக்கிறது. இன்னைக்கு ராகுல் காந்தி இந்தியாவில் இல்லை. பிரியங்கா காந்தி இந்தியாவில் இல்லை. ஆனால் பாஜகவில் இருக்கக்கூடிய எல்லா தலைவர்களும் இந்தியாவில் தான் இருக்காங்க. இதெல்லாம் மக்கள் கிட்ட எடுபடும். மக்கள் கிட்ட பேசு பொருளாகப்படும். கட்சி தலைவர் ஆகிவிட்டால் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையே இருக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும் கூட இவையெல்லாம் இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சில விஷயம்.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் இந்த மூன்று மாதங்களில் இந்தியா கூட்டணிக்கு இருந்த ஜோஷ் செப்டம்பர், அக்டோபர், நவம்பரில் இல்லை. ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வதை பாதியில் நிறுத்திவிட்டார். மே அல்லது ஜூன் மாதத்திலேயே தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் என்பதை அறிவிக்கவிடாமல் தடுத்தது யார்? என்ன விஷயம் உங்களை தடுத்தது? பீகார் மாநிலத்தில் தேஜஸ்வி கட்சிதான் சிங்கிள் லார்ஜெஸ்ட் பார்ட்டியாக இருக்கிறாங்க. அவங்கதான் எல்லா விஷயங்களையும் பண்றாங்க. அவங்களுக்குதான் அங்கு ஆதரவு இருக்கிறது . அவர்களுக்கு ஆதரவு இருக்கும் பொழுது, முதல்வர் வேட்பாளரை அறிவிக்க உங்களுக்கு ஏன் அவ்வளவு நாள் ஆகுது?  காங்கிரஸ் போன முறை 70 இடத்தில் நின்று 19 தான் ஜெயிக்கிறீங்க. இந்த முறை 61 வேண்டும் என்கிறீர்கள். இப்போது 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றிக்கான வழிகளை தான் பார்க்கணுமே தவிர, எங்களுக்கு சீட் அதிகம் வேண்டும். நாங்க வந்து கிரவுண்ட் ஒர்க்கே பண்ண மாட்டோம் என்பது எப்படி நியாயம்.90,000 பூத்துல 23,000 பூத்தில் எதிர்கட்சிக்கு வந்து ஏஜென்டே கிடையாது.

காங்கிரஸ் மட்டுமல்ல 'இண்டியா' கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுமே எஸ்ஐஆர் பிரச்சனையை மட்டுமே போதும். இதை வைத்து மக்கள் நமக்கு ஆதரவாக, பாஜகவிற்கு எதிராக ஓட்டு போட்டு விடுவார்கள் என்று நினைத்துவிட்டார்கள். அப்படி இல்லை. பீகார் போன்ற மாநிலங்கள் வறுமை மிக்க மாநிலங்கள். அங்கு 10,000 ரூபாய் ஒரு அரசாங்கம் கொடுக்கிறது. நீங்க சரியா வேலையை செய்தால் 2 லட்சம் ரூபாய் கொடுத்து உங்களுக்கு சுயத்தொழில் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றால் எல்லோரும் ஓட்டு போட தான் செய்வாங்க. பெண்கள்தான் பெரும்பான்மையான வாக்குகளை போட்டுருக்காங்க. அதுவும் ஒரு சமூகத்தை சார்ந்த பெண்கள் இல்லை. இது எல்லா அரசியல் கட்சிகளுக்கு ஒரு பெரிய மெசேஜ் . நலத்திட்ட உதவிகளால் பெண்கள் ஒன்று சேர்ந்தால், ஆட்சிகளை வரவைக்கலாம்.

பாஜக கூட்டணியிலும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கு. பாஜக கூட்டணியில் உள்ளவர்கள் எல்லோரும் ஜாலியா சிரிச்சுக்கிட்டு, தோள் மேல் தோள் போட்டுக்கிட்டு வேலை செய்யவில்லை. அங்கேயும் பிரச்சனைகள் இருக்கிறது. அங்கேயும் பஞ்சாயத்துகள் அதிகம். யார் முதலமைச்சர் என இரண்டு கட்சிகளுக்குள் பஞ்சாயத்து இருக்கிறது. இரண்டு கட்சியும் வேற வழி இல்லாமல் 101 இடங்களில் போட்டி போடுறாங்க. கடந்த முறை தன்னுடைய எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாக இருந்த சிராக் பஸ்வானுக்கு 29 சீட்டு கொடுக்க கொடுக்கணும். நிதீஷ் குமார் கொடுத்திருக்காரு. இப்படி பல பிரச்சனைகள் எல்லாம் பாஜக கூட்டணிக்குள் இருக்கும். உள்ளுக்குள் எல்லாம் சால்வ் பண்ணிட்டு வெளியே ஒற்றுமையாக காமிச்சாங்க. இத்தனைக்கும் பாஜக கூட்டணி யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை கூட முன்னிறுத்தவில்லை. ஏன்னா அவங்களுக்கு தெரியும் இந்த 10,000 ரூபாய் போதும் என்று.

தேர்தல் ஆணையத்தின் மீது நான் ஆயிரம் விமர்சனங்களை வைக்கிறேன். ஆனால் அதை வைத்து மட்டுமே பாஜக கூட்டணி ஜெயிச்சிட்டாங்க என்ற அந்த விமர்சனத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. உத்தரப்பிரதேசத்தில் மிக பிரம்மாண்டமாக அயோத்தியா ராமர் கோயில் கட்டப்பட்ட அந்த தொகுதியில் ஒரு தலித் வேட்பாளர் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். உங்கள் தேர்தல் பிரச்சாரம் அவ்வளவு நன்றாக இருந்தது. அப்போது அதை சாதிக்க முடிந்த உங்களால் இன்று இதை சாதிக்க முடியாதா? உங்களிடம் இருக்கும் குறையை முதலில் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக் கொள்ளாமல் எல்லாவற்றிற்கும் தேர்தல் ஆணையம் தான் காரணமா என்றால் தேர்தல் ஆணையத்திடம் பாதி பிரச்சனை இருக்கு. பாதி பிரச்சனை உங்களிடமும் இருக்கு. தோல்விக்கான எல்லா காரணத்தையும் கொண்டு போய் தேர்தல் ஆணையத்தின் மீது போட்டால் பின்னர் நீங்க எதற்கு கட்சியா இருக்கறீங்க? ஆர்ஜேடிக்கும் சேர்ந்துதான் இந்த கேள்வி'' என்றார்.

Bihar Election election commission of india INDIA alliance nda alliance result
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe