தலைவா படத்துக்கு ஏற்பட்ட சிக்கலை அடுத்து கொஞ்ச காலம் அரசியலே வேண்டாம் என அமைதியாக தனது தொழிலை மட்டும் கவனித்து வந்தார் விஜய். இந்த நிலையில், தற்போது கலைஞரும் ஜெயலலிதாவும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி மீண்டும் அரசியல் செய்ய துணிந்திருக்கிறார் நடிகர் விஜய். அதன் வெளிப்பாடுதான் பிகில் பட ஆடியோ ரிலீஸ் விழாவில் அதிமுக ஆட்சியையும் அதன் தலைவர்களையும் மறைமுக விமர்சித்திருப்பது.

Advertisment

vijay-eps

நடிகர் விஜய்யின் பேச்சு ஆளும் கட்சியை கடுப்பாக்க, ஜெ.பாணியில் பிகில் படத்துக்கு சிக்கலை உருவாக்க அனைத்து செயல்திட்டங்களையும் போட்டுக்கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. பிகில் படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மூலம் பிரச்சனை ஏற்படுத்த காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் விநியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் அரசாங்கத்தை எப்படி பகைத்துக்கொள்வது என்கிற எண்ணம் வந்திருக்கிறது. இதனையடுத்து பல கட்ட ஆலோசனைகள் அவர்கள் தரப்பில் நடந்து வருகின்றன. மேலும், சென்சார் போர்டிலும் ஆளும் தரப்பு மூக்கை நுழைத்திருக்கிறது. இதனால் 8.10.2019 வரை சென்சார் செய்வதற்கான பட்டியலில் பிகில் படம் இடம்பெறவில்லை.

Advertisment

இதனையறிந்த நடிகர் விஜய், ரஜினியின் உதவியை நாடியிருக்கிறார். ஆனால், ரஜினிகாந்தோ, இந்த பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை என ஒதுங்கிக்கொண்டதாக ரஜினிக்கு நெருக்கமான தரப்பிலிருந்து செய்திகள் கசிகின்றன.

இதனால் நொந்து போயிருக்கும் நடிகர் விஜய், திட்டமிட்டபடி பிகில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில்தான் தனது கௌரவம் இருப்பதாக சொல்லி வருகிறார். அதனால் படத்தை ரிலீஸ் செய்ய, முதல்வர் எடப்பாடியை சந்தித்து சமாதானம் பேச்சுவதற்கு தயாராகி வருகிறாராம். இந்த சந்திப்பு மிக ரகசியமாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிடுகிறார் விஜய். ஆக, ஆளும் கட்சி மனது வைத்தால் மட்டுமே தீபாவளிக்கு பிகில் ஊதுவார் நடிகர் விஜய் !

Advertisment