Skip to main content

'4 மாநிலம்... 5 நாட்கள்... 32 நாடகங்கள்... 500 கலைஞர்கள்' சென்னையில் நடக்கும் பிரம்மாண்ட நாடகத் திருவிழா!

Published on 03/10/2019 | Edited on 04/10/2019

நாடக கலைஞர்களையும், மேடை நாடகங்களையும் ஊக்குவிக்கும் முயற்சியாக சென்னையில் முதல் முறையாக பிரம்மாண்ட நாடகத் திருவிழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் கேரள சமாஜம் இணைந்து நடத்தும் இந்த நாடகத் திருவிழாவில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 500 நாடக கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். நேற்று தொடங்கிய இந்த நாடகத் திருவிழா வரும் 6 ஆம் தேதி வரை, 5 நாட்கள்கள் நடைபெற உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கேரள சமாஜம் அரங்கில் நடைபெறும் இந்த நாடகத் திருவிழாவில் 5 மொழிகளில், 32 நாடகங்கள் அரங்கேற உள்ளது. தென்னிந்தியா முழுவதிலும் உள்ள பல முன்னணி நாடக கலைஞர்கள் பங்கேற்கும் இந்த நாடகத் திருவிழா தமிழகத்தின் பிரம்மாண்டமான நாடகத் திருவிழாவாக கோலாகலமாக நடைபெற உள்ளது.
 

gh



இதன் தொடக்கவிழா மிகச்சிறப்பான முறையில் நேற்று நடைபெற்றது. கடந்த சில வாரங்களாகவே திரை நட்சத்திரங்கள், நாடக கலைஞர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் என இந்நிகழ்ச்சியின் சிறப்புக்களையும், நாடகங்களின் தாக்கங்களையும் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களில் எடுத்து கூறி வருகிறார்கள். அந்த வகையில் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்த நாடக விழா தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் நாசர், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.


 

Next Story

‘சண்டக்காரங்க’ - திருநர் இட ஒதுக்கீட்டைப் பேசவிருக்கும் நாடகம்

Published on 16/11/2022 | Edited on 17/11/2022

 

Transgender people drama in chennai

 

திருநர் சமூகத்தினை இச்சமூகம் பார்க்கும் பார்வை முற்றிலும் முரணானது என்பதை எடுத்துரைக்கும் விதமாக கடந்த 2018 ஆம் ஆண்டு “சண்டக்காரி” எனும் நாடகத்தை திருநர் கூட்டு இயக்கத்தினர் நடத்தினர். இந்தாண்டும் அதே போல “சண்டக்காரங்க” சுதந்திரப் போராளிகள் எனும் நாடகம் வரும் 23 ஆம் தேதி மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கத்தில் நடைபெறுகிறது. 

 

திருநர் சமூகம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 ஆம் தேதி, உயிர் நீத்த திருநர்களை நினைவு கூறும் தினமாக அனுசரித்து வருகிறார்கள். இதையொட்டி சமூகத் தீண்டாமை மற்றும் குடும்பத் தீண்டாமையால் கொலை மற்றும் தற்கொலை செய்து இறந்த திருநர்களின் நினைவாக; நியாயம் கேட்கும் விதமாக பாலின சுதந்திரத்துக்கான ‘சண்டக்காரங்க’ எனும் நாடகத்தை திருநர்களே எழுதி, இயக்கி, நடிக்க உள்ளனர்.

 

yi

 

கடந்த ஆண்டு அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், திருநங்கைகள் ஒவ்வொருவரும் ஒரு பொறியாளராக, சித்த மருத்துவராக, காவல்துறை உதவி ஆய்வாளராக, சமூக சேவகராக தங்கள் நிலைகளை உயர்த்திக் கொண்டதோடு, தங்களைச் சார்ந்த ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கான தீர்வாகக் கல்வியையும் அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு எனும் ஆயுதத்தையும் ஏந்தத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் வருவதற்கான பாதை எப்படிப்பட்டது என்பதையும் இந்தச் சமூகத்தின் கோரமுகத்தையும் அவர்களின் உச்ச நடிப்பில் ஒருமித்த குரலோடு வெளிப்படுத்தியிருந்தனர். இந்தாண்டு அதே போல குடும்பத் தீண்டாமை, சமூகத் தீண்டாமை இவ்விரண்டாலும் கொலையும் தற்கொலைகளும் நிகழ்ந்த வண்ணம் இருப்பதால் அதைச் சார்ந்தே கதை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதை நேகா என்பவர் எழுத்தி இயக்கவுள்ளார். இதில், ஆடை வடிவமைப்பு ப்ராஸி செய்கிறார். 

 

Transgender people drama in chennai

 

இது குறித்து திருநங்கை கிரேஸ் பானுவிடம் பேசியபோது, “ஒவ்வொரு ஆண்டும் திருநர்களின் இறப்பு என்பது உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த இறப்புகளைத் தடுப்பதற்கான கதைக் களத்தில் இந்த நாடகத்தை நிகழ்த்த இருக்கிறோம். திருநர் சமூக மக்களுக்கு கல்விச்சூழல் எவ்வளவு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதையும் காட்சிப்படுத்த உள்ளோம். திருநர் மக்களின் பாதுகாப்பையும் கல்வியையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. அதே போல அனைத்துத் துறையிலும் எதிர்காலத்தில் திருநர் மக்களின் பங்களிப்பை உறுதி செய்திட இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இறந்து போன திருநர் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என உணர்த்தும் வகையில் இக்கதை அமைந்துள்ளது” என்றார். 

 

 

Next Story

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்! 

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

hshsdh

 

நடிகர் கிஷோர், சார்லி, நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா நடித்திருக்கும் திரைப்படம் "டிராமா". இந்திய சினிமாவில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம் இதுவாகும். எட்டு மணி நேரத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. 180 நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரிகர்சல் செய்து, அதன் பின்னர் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படத்தின் இயக்குனர் அஜூ இதுகுறித்து பேசும்போது...

 

கிஷோர், சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததே, இந்தப் படம் வெற்றிகரமாக வந்திருப்பதற்கு காரணம். நாங்கள் நினைத்ததைவிட பிரமாதமாக வந்திருக்கிறது. ஒரே  ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல. அதுவும் ஒரு கமர்சியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவுனரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அற்பணிப்பாலும் இந்த முயற்சி மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவத்தைத் தரும்" என்றார்.