Skip to main content

தாலி அணியாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது ஏன்..? மதுமிதா பதில்!

Published on 25/09/2019 | Edited on 14/10/2019

திரைப்படங்களில் அனைவரையும் சிரிக்கவைத்த காமெடி நடிகை மதுமிதா, சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்று நம் அனைவரையும் பதற வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு என்ன நேர்ந்தது, எதனால் அவர் தற்கொலை முயற்சிக்கு சென்றார் என்பது குறித்தான கேள்விகளை அவரிடம் நேரடியாக முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

fgj



உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது. நலமாக இருக்கிறீர்களா?

நான் நன்றாக இருக்கிறேன். உடல்நிலை 90 சதவீதம் சரியாகிவிட்டது. மனநிலை சரியாகி கொண்டே இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்ற எண்ணம் எதனால் உங்களுக்கு வந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல் சீசனில் இருந்தே என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நான் அதில் கலந்து கொள்ள விரும்பவில்லை. அதனால் அவர்களின் அழைப்பை நிராகரித்தேன். ஒருகட்டத்தில் அவர்கள் என்னை தொடர்ந்து அழைத்தார்கள். எனக்கு தெரிந்தவர்கள் கூட நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு போகலாமே? என்று என்னிடம் தெரிவித்தார்கள். பிறகு, நானும் அதில் கலந்து கொள்ளலாமே என்று நினைத்து என் கணவரிடம் இதுதொடர்பாக விவாதித்தேன். அவரும் உனக்கு பிடித்திருந்தால் கலந்து கொள் என்று என்னிடம் தெரிவித்தார். எனக்கு அதிகம் கோபம் வரும். இதுபத்தி நான் அவர்களிடம் கூறியபோது அவர்கள், நீங்கள் நீங்களாகத்தான் இருக்க வேண்டும், அதை அடிப்படையாக வைத்து தான் நிகழ்ச்சியை கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்கள். எனக்கு அவர்கள் கூறியது பிடித்திருந்தது. எனக்கு ஏற்ற வகையில் இருந்ததால் நான் அதில் கலந்து கொள்ள முடிவெடுத்தேன்.

நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு போவதற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை பற்றிய புரிதல் இருந்ததா? தமிழ் பெண் என்று சொல்லும் நீங்கள் நிகழ்ச்சியில் தாலி அணியாமல் சென்றது ஏன்?

இதை பற்றி நான் முன்பே சொல்லி இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புக்கள் எனக்கு நேரடியாக அமையவில்லை. நான் முதலில் ஷோவுக்கு போகும் போது திருமணம் ஆகி மூன்று மாதங்கள்தான் ஆகி இருந்தது. ஷோவுக்கு போகும்போது கேரவேனில் வைத்து நாம் கொண்டு செல்லும் பொருட்களை எல்லாம் பார்ப்பார்கள். பெரிய சைஸ் நகைகளை எல்லாம் தவிர்க்க சொன்னார்கள். மைக்கில் அது உரசும் என்பதால் சொல்கிறோம் என்றார்கள். தாலி அணிய வேண்டாம் என்று சொன்னபோது. நான் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் தான் ஆகி உள்ளது, நான் தமிழ் கலாச்சார முறைகளை அதிகம் பின்பற்றும் பெண், ஆகையால் என்னால் தாலி அணியாமல் இருக்க முடியாது என்று கூறினேன். ஆனால் அவர்கள், இந்த சீசனில் நிறைய டாஸ்க் இருப்பதால், யாராவது தாலியை பிடித்து இழுத்து அறுந்துவிட்டால் உங்களுக்கு தான் கஷ்டமாக இருக்கும், ஆகையால் நீங்கள் அணியாமல் வந்தால் இதை தவிர்க்கலாம் என்று கூறினார்கள். அவர்கள் சொல்வது எனக்கு சரி என்று பட்டதால், நானும் அதற்கு சம்மதித்தேன். என் கணவரிடம் இது பற்றி கூறியபோது அவரும் இதற்கு ஒத்துக்கொண்டார். எனவே இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. 

உங்களை மட்டும் ஏன் டார்கெட் செய்கிறார்கள் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?

பத்திமா மேடம் உனக்கு நிறைய ஆதரவு வெளியில் கிடைக்கும் என்று கூறியதில் இருந்து போட்டியாளர்களில் சில பேர் என்னை எதிரியாகவே பார்த்தார்கள்.  அவர்களால் நேரடியா எதுவும் செய்ய முடியாததால், அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அதனால் காவிரியை பற்றி நான் பேசிய விஷயங்களை பெரிதுபடுத்தி என்னை காயப்படுத்தினார்கள். அந்த வீடியோவை வெளியிட்டால் அங்கு என்ன நடந்தது என்பதை அனைவருக்கும் தெரியவரும். ஆனால் இந்த நிமிடம் வரை அதை ஏன் வெளியிடவில்லை. அவர்கள் மீதுள்ள குற்றம் இதன் மூலம் தெரியவரும் என்று நினைக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தினம்தினம் அரசியல் பேசுகிறார்கள். சில விஷயங்கள் காட்டப்படும். சில விஷயங்கள் அதில் வராது. நிகழ்ச்சி 40 நிமிடங்கள் மட்டுமே ஒளிப்பரப்பாகிறது. அதில் அவர்களுக்கு தேவையானதை மட்டும் ஒளிபரப்புகிறார்கள். அதனால் தான் அவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.
 

 

Next Story

“ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்கள்...”- சர்ச்சையாகும் மீராமிதுனின் வீடியோ

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர் மீராமிதுன். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 

meera mithun

 

 

அதில் , “ஏன் 'வீ ஆர் தி பாஸ்' என்ற நிகழ்ச்சியை பண்ணினார்கள் எனத் தெரியவில்லை. பிபி ஹவுஸில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே இருந்தோம். ஆண்களை வைத்துத் தான் இந்த ஷோவே நடந்தது போல் காட்டியுள்ளார்கள். மும்பையில் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஆனால், ட்விட்டர் பக்கத்தில் அந்நிகழ்ச்சியில் என்னைக் கிண்டல் செய்ததாகக் என்னுடைய ரசிகர்களும், நண்பர்களும் கூறினார்கள்.

தமிழ்நாட்டில் சிலர் என்னை இழிவாகப் பேசித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த 4 ஆண்களும் இணைந்திருப்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அந்த நால்வருமே என் பின்னால் தான் வீட்டிற்குள் சுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே தில் கிடையாது. வீட்டிற்குள்ளேயே என்னை அப்படிப் பார்ப்பார்கள். அவர்கள் கோழைகள். என்னிடம் பேசுவதற்குக் கூட மற்ற பெண்களுக்குத் தெரியாமல் பயந்து பயந்து பேசுவார்கள். என்னுடன் ஒரு நாள் பேசுவார்கள், அதற்குமேல் பேசினால் அவர்களுக்கு பெண்களின் ஓட்டு கிடைக்காது என்பதால் இப்படி செய்வார்கள். ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்களுக்கு பொறாமை வரும் அப்படி இருந்தார்கள். அந்த வீட்டிற்குள் நடைப்பதை நன்கு கவனித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

உங்கள் யாருக்குமே என்னைப் பற்றிப் பேசவில்லை என்றால் புகழே கிடையாது. நான் தான் மிகவும் புகழ் வாய்ந்தவள். அந்த 4 ஆண்களுக்குமே எனது புகழைப் பற்றித் தெரியும். ஆகையால் தான் நால்வரும் எனக்காக அடித்துக் கொண்டார்கள். 

சமூக வலைதளத்தில் என்னை திருநங்கை என்று கிண்டல் செய்வது, பீர் அடிக்கிறேன்,என்னை கருப்பு என்று கேலி பேசுவது எல்லாம் எந்த கூட்டம் செய்கிறது என்பது எனக்கு தெரியும். நீங்கள் அதையே தொடர்ந்து செய்யுங்கள். தமிழ்நாட்டில் எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். இனி நான் தினசரி ஒரு வீடியோ போட்டு அடிச்சிட்டே இருப்பேன். எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்றா கேள்வி எழுப்புகிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற ஹீரோ, ஹீரோயின்களைவிட எனக்கு நேஷனல் மற்றும் இண்டர்நேஷனல் லெவலுக்கு புகழ் இருக்கிறது. இதை நான் எங்குவேண்டுமானாலும் எழுதி தருகிறேன். அவங்களெல்லாம் தமிழ்நாடு தாண்டினா யாருக்குமே தெரியாது. அவங்க என்ன மிஞ்சிபோனா படம்தான நடிக்கிறாங்க, ஆனால் எனக்கு நேஷனல், இண்டர்நேஷனல் லெவல் புகழ் இருக்கிறது. என்னுடைய பெருமையை நானே பீற்றிக்கொள்ளக்கூடாது என இருந்தேன். இந்த ஆறு வருடம் நான் பாசிடிவ் பப்ளிசிட்டியில் இருந்தேன். அதை உடைக்க வேண்டும் என்றே சிலர் என்னுடைய பெயரை முழுதாக டேமேஜ் செய்திருக்கிறார்கள். எல்லாத்துக்கும் அடி கொடுத்துட்டே இருப்பேன்” என்று கூறியுள்ளார். 

 

 

Next Story

சாண்டியை தூக்கிவைத்து கொஞ்சிய சிம்பு... வைரலாகும் வீடியோ

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நூறு நாட்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்துவிட்டது. மலேசியாவை சேர்ந்த தமிழரான முகின் இந்த மூன்றாம் சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களிடம் பிரபலமடைந்த சாண்டி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
 

simbu


இந்த மூன்றாம் சீசன் பிக்பாஸ் போட்டி தொடங்கியதில் இருந்து மக்களிடம் பேராதர்வை பெற்று வந்தவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. அவரும் கவினும் சேர்ந்து பாடு பாடல்கள் எல்லாம் வெளியே செம வைரலானது. அவர் பிக்பாஸை குருநாதா என்று கூப்பிடுவது வைரலாகி, டீசர்ட்டாக சேல் ஆனது. சாண்டியின் புகழால் அவருடைய மகளுக்கு வெளியே லாலா ஆர்மி கூட உருவாக்கப்பட்டது. அந்தளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
 

ff


சாண்டி மாஸ்டர் சிம்புவின் நெருங்கிய நண்பர். சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக தனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவரும் சிம்புதான் என்று சிம்பு போலவே பேசி அசத்தினார். இந்நிலையில் சிம்புவை நேரில் சந்தித்துள்ளார் சாண்டி மாஸ்டார். அப்போது தன்னுடன் சக போட்டியாளராக பங்குபெற்ற தர்ஷனையும் உடன் அழைத்து சென்றிருந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தன்னை பார்க்க வந்த இருவருக்கும் ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
 

dfgzsgd


இதுவரை சிம்புவின் நெருங்கிய நண்பர்களான ஹரிஷ் கல்யாண், மகத் உள்ளிட்டவர்கள் கடந்த இரண்டு பிக்பாஸில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.