கோடையில் ஒரு குளியல் என்ற தலைப்பிற்கேற்றபடி ''ஒரு'' குளியலைபற்றி மட்டும்தான் கூறுவீர்களா. என்றால் அதுதான் இல்லை. குளிப்பதில்பல வகைகள் உள்ளன. சாதாரண காலங்களிலேயே குளியலை என்ஜாய் பண்ணும் நாம் கோடைகாலத்தில் எப்படி விட்டுக்கொடுப்போம். குளியல் சாதாரண விஷயமல்ல. அண்மையில் ஐஸ் பக்கெட் குளியல் என்றெல்லாம்சவால் விடப்படுகின்றன. ஆனால் நாம் பார்க்கப்போகும் குளியல் அதுவல்ல.கோடைகாலத்தில் என்னென்ன முறைகளில் குளிக்கலாம், குளியலைஎப்படி சுவரசியமாக்கலாம்...

bath

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

நாம் எப்பொழுதுமே (குளியலை பொறுத்தவரை) நினைக்கும் முதல் விஷயம் ஆஹா ஆறு,அருவி, குளம், குட்டைபோன்றவற்றில் போய் மிதக்க வேண்டும் என்பதுதான். கோடைகாலத்தில் குளிப்பதற்காகவே இன்ப சுற்றுலா போகும் ஆர்வமும் நம்மில் பலரிடம் உண்டு. இருந்தாலும் வீட்டுக் குளியலைக்கூட சுவாரசியமாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற முடியும். அப்படி கைவசம் நிறைய குளியல்கள் இருக்கிறது அதைதான் பார்க்கப்போகிறோம்.

குளிர்ச்சியான எண்ணெய் குளியல்

இந்தக் குளியல் ஒன்றும் புதிய முறையல்ல நாம் மறந்துவிட்ட ஒன்றுதான். வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்வது நல்லது. குளிப்பதற்கு முன்பு நல்லெண்ணையை அல்லது தேங்காய் எண்ணையைஉடல் முழுவதும் பூசி மசாஜ் செய்துகொண்டு ஒரு அரைமணி நேரம் கழித்து சீயக்காய் கொண்டு தேய்த்து குளித்து பாருங்கள் கண்டிப்பாக உடலில் உள்ள வெப்பம் வெளியேறிவிடும். அன்றைய முழு நாளின் குளிர்ச்சி நிலையை அனுபவித்துவிட்டீர்கள் என்றால் அடுத்து எப்போதுடா திரும்பவும் எண்ணெய் குளியல் எடுப்போம் என ஏங்குவீர்கள் அவ்வளவு குளிர்ச்சியை தரக்கூடியது எண்ணெய் குளியல்.

bath

சோர்வை நீக்கும்அருகம்புல் குளியல்

நம் வீட்டிற்கு அருகிலிருக்கும் அருகம் புல்லை எடுத்து அதை சாறாக பிழிந்து தேவையான அளவுதேங்காய் எண்ணையுடன் சேர்த்து சுண்டக்காய்ச்சி அதைஉடல் முழுவதும் பூசி குளித்தால் கண்டிப்பாக சோர்வு நீங்கும். இதுவும் ஒரு வகை எண்ணைக்குளியல் போன்றதுதான். அருகம்புல் குளியல்நம் சோர்வை நீக்கி புத்துணர்வை தரும்.

bath

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

நுங்கு,தேங்காய், இளநீர் குளியல்

நுங்கு எப்பொழுதுமே குளிர்ச்சி தரக்கூடியஒரு உணவு, கிராமப்புறங்களில்இன்றளவும் கோடைகாலங்களில் வியர்கூருவிற்கு நல்ல தீர்வைத்தரும் மருந்தாக பார்க்கப்பட்டு வருகிறது நுங்கு. அப்படி இருக்க நுங்கு குளியலும்உங்களின் குளியல் லிஸ்டில் முக்கிய இடம்பெற்றால் உண்மையில் குளியலின் சுகத்தை அனுபவிக்க போகிறவர்கள் நீங்கள்தான். முதலில் சிறிது தேங்காய் பத்தைகளை எடுத்துஇளநீர் சேர்த்து அரைத்து அதனுடன் நுங்கை சேர்த்து ஜெல் போன்று குழைக்க வேண்டும். அந்த ஜெல்லை அப்படியே உடல்முழுவதும் பூசி தேய்த்துவிட்டு குளித்துப்பாருங்கள் உடலில் உள்ள உஷ்ணம் நீங்கி நீங்கள் வெயிலில் போனால் கூட உடல் குளிர்ச்சியை தக்கவைத்துக்கொள்ளும். அந்த அளவிற்கு உடல் குளிர்ச்சியை உணர்வீர்கள்.

bath

தொற்று நீக்கும் உப்பு குளியல்

அட உப்பில் ஒரு குளியலாஎன்று யோசிக்கீர்களா ஆம். நாம் உபயோகிக்கும் சாதாரண உப்புடன், எப்சம் உப்பு, பேக்கிங் சோடா போன்றவற்றை குளிக்கும் நீரில் சிறிதளவு சேர்த்து, சிறிது நேரம் கழித்துகுளித்தால் உடல் சோர்வு மற்றும்கோடைகாலங்களில்உடல் தசைகளில் ஏற்படும் வலிகள் ஆகியவைநீங்கும். நாம் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து உடல்சோர்வு மற்றும் வலியுடன் வரும்நேரத்தில் இந்த குளியலை மேற்கொள்வது சிறிது நேரத்திலேயேமுழு புத்துணர்ச்சியையும்தரும்.அதுமட்டுமின்றி உடலில் உள்ள பூஞ்சை மற்றும் தொற்றுகளை நீக்கும்.

இலவச ஏ.சிக்கு நெல்லிகுளியல்

இலவசமாக நீங்கள்செல்லும் இடத்திற்கெல்லாம் ஏசி கூடவே வரவேண்டுமென்றால் அதற்கு நீங்கள் நெல்லி குளியலை தேர்ந்தெடுத்தால்தான் சாத்தியம். அதாவது ஆறு நெல்லிக்காய்களை எடுத்து அதன் விதைகளை நீக்கி கொஞ்சம் வெந்தயம், கொஞ்சம்கசகசா சேர்த்து தயிரில் ஊறவைத்து விழுதுபோல் அரைத்து உடல்முழுவதும் பூசி குளித்து பாருங்கள் கண்டிப்பாக ஏசி உங்கள் கூடவே வருவதை போன்று உணர்வீர்கள் அப்படி ஒரு குளுமையை தரும் இந்த நெல்லிக்காய் குளியல்.

bath

இந்தக் குளியல் முறைகளெல்லாம்உடலுக்கு ஏற்ற, கோடைகாலத்தில் வெயிலில் துவண்டுபோகும் உங்களை புத்துணர்ச்சியைஉச்சத்திற்கு கொண்டுபோகும் குளியல் முறைகள். பழமைகள் திருப்பி புதியனவையாக உருமாறும் இந்த காலகட்டத்தில் பரம்பரிய குளியல் முறையையும் புதுப்பித்து, குளித்து குதூகலிக்க வாழ்த்துக்கள் நண்பர்களே....

life life truth lifestyle
இதையும் படியுங்கள்
Subscribe