Skip to main content

பாரதியாருக்கு காவித் தலைப்பாகை! பாடப்புத்தகத்தால் பரபரப்பு!

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட தேசிய கவியாக பாராட்டப்படுபவர் மகாகவி பாரதியார். இவரை புரட்சிக்கவியாக கொண்டாடும் நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் அட்டையில் காவித் தலைப்பாகையுடன் படம் இடம் பெற்றுள்ளது. 
 

barathiyar

 

 

பாரதியாரின் தலைப்பாகை எப்போதுமே வெள்ளையாகத்தான் வரையப்படுவது வழக்கம். ஆனால், காவி நிறத்தில் வரையப்பட்டிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
 

பாரதியார் காவித் தலைப்பாகை அணிந்திருந்ததை யார் பார்த்தார்கள்? எப்போது பார்த்தார்கள்? என்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வினவியுள்ளார். தமிழக அரசின் பாடநூல் கழகம் பாரதியாரைப் பற்றிய தோற்றத்தை மாணவர்கள் மத்தியில் தவறாக சித்தரிக்கும் முயற்சியாகும். பாடத்திட்டத்தையே காவிமயமாக்கும் சதித்திட்டம் இதில் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
 

இதுவரை தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டையில் கோவில்களின் படங்கள்தான் இடம்பெறும். ஆனால், தமிழுக்கு இந்துமதத்தை சேர்ந்தவர்களே பங்களித்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே இதுபோல அட்டை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. வரலாற்றுப் பாடத்தில் மட்டுமே தவறான தகவல்களை இடம்பெறச் செய்வதாக வந்த தகவல்கள் போய், புதிதாக தமிழ் பாடத்திலேயே சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தமிழாசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
 

இந்த அட்டை தயாரிக்கப்பட்டதில் உள்நோக்கம் இல்லை. அப்படி தவறு இருப்பதாக கருதினால் அதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்று பாடநூல் கழக தலைவர் பி.வளர்மதி தெரிவித்தார்.

 

 

Next Story

“வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கவைக்கும்” - நினைவுகூர்ந்த கமல்ஹாசன்

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
kamalhassan about bharathiyar

மகாகவி பாராதியாரின் 142வது பிறந்தநாள் இன்று (11.12.2023) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவரை நினைவு கூர்ந்து, சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின், அவரது எக்ஸ் பக்கத்தில், “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே! எனத் தமிழை வாழ்த்தி, தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம்! வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை” என குறிப்பிட்டுள்ளார். 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும், “சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன், காலம் கடந்தும் எளிய அரிய கருத்துகளால் தலைமுறைகளுக்கிடையே பாலமாய் இருக்கும் சிந்தனையாளன், வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கவைக்கும் கந்தகக் கவிதைகளுக்குச் சொந்தக்காரன் பாரதியின் பிறந்த நாள் இன்று. மரபான வடிவத்தில் நவீன கவிதையின் பிறந்த நாளாகக் கொண்டாடுவோம்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

காவி நிறத்திற்கு மாறும் வந்தே பாரத் ரயில்கள்

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

Vande Bharat trains to turn saffron Union Minister explains

 

இந்தியா ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான 27 வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீல நிறமும், வெள்ளை நிறமும் இருக்கும் வகையில் தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.

 

அதேவேளையில் ரயிலின் பெரும்பாலான பகுதி வெள்ளை நிறத்தில் இருப்பதால் விரைவில் வெள்ளை நிறம் மங்கி விடுவதால் பராமரிப்பு செய்வதில் ஏராளமான சிக்கல்கள் ஏற்படுவதாக ரயில்வே தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. இதனால் வந்தே பாரத்  ரயில்களை வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ள ரயில்களில் பெரும்பான்மையான பகுதிகள் நிறம் காவி நிறத்திலும், ரயில் கதவு பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் அதிகம், குறிப்பிட்ட முக்கிய நிறுத்தங்களில் நிற்காமல் செல்வது, கால்நடைகள் மோதலால் ரயிலின் முகப்பு பகுதி பாதிக்கப்படுதல் போன்ற குறைகளை போக்க மக்கள் மத்தியில் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் புதிய வந்தே பாரத் ரயில்களின் தோற்றத்தில் காவி வண்ணத்திற்கு மாற்றம் செய்வதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து கூறுகையில் காவி தேசியக் கொடியில் இருக்கும் நிறம் என்பதால் தேர்வு செய்ததாக விளக்கமளித்துள்ளார்.